வெள்ளி, 8 ஜனவரி, 2016

அவ்விரவு.

இருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது
கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு.

பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள்
அலையாய்த் தழுவும் காற்றில்.

நிலவில் ஊறிக் கொண்டிருக்கும் மரம்
நனைந்தாடுகிறது பால் மயக்கத்தில்.

சத்தமின்றி விரைந்தாடுகின்றன இலைகள்
கசிந்திறங்கும் குளிரின் பிசுபிசுப்பில்.

கலங்கரை விளக்காய் கனவில் ஈர்க்கிறது
கலவியற்றுக் கலந்தவளின் கண்கள்.

வெளிறும் கடல் வற்றத் தொடங்குகிறது
துருவனின் கைபிடித்துக் கரையோர மணலாய்

சிறைப்படுகிறது திசையற்றுத் திரியும் சூரிய மீன்
வடிகட்டியாய் அலையும் விடியலின் கூரிய கரங்களில்.

8 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அவ்விரவில் .... இவ்வளவு விஷயங்களா ! மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. :)

இன்னும் விட்டுப்போனவைகள், இருட்டில் என்ன நடக்கிறதே என்று தெரியாதவை என ஆங்காங்கே இந்தப்பிரபஞ்சத்தில் ஏராளமாக இருக்கக்கூடும்.

பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

பரிவை சே.குமார் சொன்னது…

அருமையான கவிதை அக்கா..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமையான கவிதை சகோதரியாரே

ஸ்ரீராம். சொன்னது…

காற்றில் கட்டிடங்கள் அசைந்தாடுமா என்ற கேள்வி எழுந்தாலும், நிழலாய் இருக்கும் என்ற மனதின் சமாதானத்தோடு கவிதையைக் காட்சிப்படுத்தி ரசித்தேன்.

Dr B Jambulingam சொன்னது…

ஓர் இரவு ஆனால் உணர்வுகளோ பல. அருமை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை..... பாராட்டுகள் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கோபால் சார்

நன்றி குமார் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜம்பு சார்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...