நலமுடன்
வாழ- உடல் நலம் சம்பந்தப்பட்டவை
செனைல் ஆஸ்டியோ
போராசிஸும், அல்ஸைமரும்.
ஆண் பெண் என்ற
பால்வேறுபாடு இல்லாமல் தாக்கும் நோய்களில் செனைல் ஆஸ்டியோ போராசிஸும், அல்ஸைமரும் அடங்கும்.
ஹார்ட் அட்டாக் ஆண்களுக்கு அதிகம் வருவது போல பெண்களைத் தாக்குவதில்லை. அதன் ரேஷியோ
கம்மி.
செனைல் ஆஸ்டியோ போராசிஸ் என்பது 75 வயது உள்ள பெண்களுக்கும்
ஏன் ஆண்களுக்குமே கூட வருவதுதான். இதில் ப்ரைமரி டைப் ஒன் ஆஸ்டியோ போராசிஸ் மெனோபாஸ்
ஸ்டேஜில் உள்ள பெண்களுக்கும் செகண்டரி ஆஸ்டியோ போராசிஸ் எல்லா வயதினருக்கும் வரக்கூடியது.
வேறு நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் உடலின் கால்ஷியம்
சத்தை நீர்க்கச்செய்வதாலும் ஏற்கனவே உடலில் உள்ள கால்ஷியம் குறைபாடால் எலும்பு மஞ்ஞையின்
அடர்த்தி (போன் டென்சிட்டி ) குறைவதும் அவற்றின் காரணத்தால் எலும்பு முறிவு, சில்லெலும்புச்
சிதைவுகள் ஏற்படுவதும் உண்டு.
உணவில் அதிக அளவில் கீரை, முட்டை, பால், சோயாபீன்ஸ்,
முட்டைக்கோஸ், முளைவிட்ட பயறு வகைகள், தானியங்கள் சேர்த்து வருவதால் இக்குறைபாட்டைத்
தவிர்க்கலாம். தினப்படி மித வெய்யிலில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி இக்குறைபாட்டை நீக்கும்.
ஞாபக சக்தியைத் தின்னும் அல்ஸைமரால் இப்போது அதிக அளவில்
இளம் முதியவர்களும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வருகின்றன. ஞாபக சக்தியைப் பழுது
செய்யும் இது முதலில் மூளைத் திசுக்களைத் தின்கிறது. அதன் பின் எப்பேர்ப்பட்ட விஞ்ஞானியையும்
தான் யார் தன்னைச் சுற்றி இருப்பவர் யார் எனத்தெரியாதபடி மெய்ஞானமற்றவராக்கி டிமென்ஷியாவில் தள்ளுகிறது.
உடல் உறுப்புகளைத் தாக்கும் பார்கின்சன் ஹண்டிங்சன் ஆகியனவும்
இதன் வெவ்வேறு நிலைகளே. இவற்றுக்காக சொலனெஸுமேப் என்ற மருந்து கொடுக்கப்பட்டால் நோயின்
தீவிரத்தைத் தணிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றோடு கூட அதன் பின் விளைவுகளையும்
பக்க விளைவுகளையும் பாதிப்புகளையும் கூட கண்டு அஞ்சவேண்டியதாக இருக்கிறது.
அல்ஸைமர் போன்றவற்றின் தீவிரத்தைத் தடுக்க மஞ்சள் உதவுகிறது
என்ற தகவல் புதிது. ஒரு ஆய்வில் மஞ்சள் கிழங்கின் வேரில் இந்த குர்குமின் ( டைஃபெருலொமீதேன்
) ( இது சில திராக்ஷைகளில் தயாரிக்கப்படும் ஒயினிலும், கிரீன் டீயிலும், ப்ளூபெரி,
ஸ்ட்ராபெரி, மாதுளை போன்றவற்றின் சாறிலும் ) இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
என்ன ஒரு விஷயம்னா ஞாபகசக்திக்காக ஒயின் குடிக்கக் கிளம்பிடக் கூடாது. நினைவாற்றல்
பயிற்சியை மேம்படுத்தணும். மேலும் இவைகளை அல்லது வேருடன் கூடிய மஞ்சளைப் பொடித்து உணவில்
பயன்படுத்துவதன் மூலம் ஞாபகசக்தியை அதிகப்படுத்தலாம்.
பயனுள்ள (ஏதேதோ இதுவரைக் கேள்விப்படாத) தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குபுதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குநினைவலைகள் தவறி விட்டால் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅவசியமான தகவல்களுடன் விழிப்புணர்வைக் கோரும் நல்ல பதிவு.
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
நன்றி பாலா சார்
நன்றி ராமலெக்ஷ்மி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!