5.3.2004.
*ஊர்
ஊராய்க்
கூடாரம்
தூக்கி
உடைந்து
போன தோள்கள்.
கூடுவிட்டுக்
கூடுபாயும்
ஆத்மாபோல்.
*கொலாஜால்
செய்த
ஓவியம்
போல
*ஆசைக்கும்
அபிலாசைக்கும்
கடமைக்கும்
நடுவில்
பற்றியெரியும்
தீக்குச்சியாய்
மனசு.
*எதையோ
எதிர்பார்த்து
வரங்கேட்டுத்
தவமிருக்கும்
முழுமையடையாத்
தேவதைகள்.
*நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும்
பூக்கள் மலர்வது போல
அவஸ்தை.
*இறக்கை இருக்கிறது
வானம் இருக்கிறது
வயதான பட்டாம்பூச்சி.
*வேர்களை மண்ணில்
ஊன்றவிட்டு
விண்ணில் பறக்க
நினைக்கும் தாவரங்கள்.
*ஏமாற்றங்களுடனும்
எதிர்பார்ப்புகளுடனும்
வயதைத்
தொலைத்த பேரிளமை.
*தன்னுடைய
கனவுகளை
இன்னொரு
கண்கள் மூலம் கண்டு
தன்னுடைய
ஆசைகளைத்
தன்னுடையதான
இன்னொரு
உருவத்தில் உருவேற்றிக்
களிக்கும்
தாய்மை.
*உரிமையுள்ள
எவையுமே
கடமைகளைப்
போல.
அருமை
பதிலளிநீக்கு//ஆசைக்கும் அபிலாசைக்கும்
பதிலளிநீக்குகடமைக்கும் நடுவில்
பற்றியெரியும் தீக்குச்சியாய்
மனசு.//
சூப்பர் ! :)
நன்றி ஜெயக்குமார் சகோ
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்