60 வயதினிலே – சீனியர் சிட்டிசனுக்குரியவை.
சத்சங்கம்.
நித்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்சலசித்தம்
நிஷ்சல சித்தே ஜீவன்முக்தி.
சத்சங்கங்களும் பஜனை மண்டலிகளும் சென்னையின் மூலை முடுக்கிலெல்லாம் பார்க்கலாம். சின்னக் கோயில் சைஸில் உள்ள ராயப்பேட்டை பெருமாள் முதலி தெருவில் உள்ள பஜனை மடம்தான் முதலில் பார்த்த சத்சங்கம். உளதாய் இலதாய் இலங்கும் இறைவனைப் பாடிப் பரவிப் புகழ நல்லோர் கூடும் இடம்.
பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம் துறவறம் என்ற முறையில் வரும் பருவங்களில் கிரஹஸ்தத்திலிருந்து வானப்ரஸ்தம் ஏக சத்சங்கங்கள் அத்யாவசியமாகின்றன.
முன்பு 80 வயதுக்குரியவர்கள் கூடும் இடமாக இருந்த சத்சங்கங்கள். தற்காலத்தில் பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ள பலரும் நாடும் இடமாக ஆகி வருகின்றன. சம வயதுக்காரர்கள் ஒன்று கூடவும் ஆன்மீக வேதாந்த விசாரங்கள் செய்யவும், ஆரோக்கிய சிந்தனைகள் மேலோங்கவும் இம்மாதிரியான சத்சங்கங்கள் உதவி வருகின்றன. தாம் தனியர் அல்ல என்று உணரவும். தம்மாலான சமூக பொது சேவை செய்யவும் இவை வழிகோலுகின்றன.
ஒரு கட்டத்துக்கு மேல் வீட்டில் நிலவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கொடூர தாக்கம் தாங்கமுடியாமலும் இங்கே படையெடுப்பவர்கள் அதிகம் எனலாம். ஒன்றுவயப்பட்ட ப்ரச்சனைகளோடு கூடும் இளம் முதியவர்களுக்கும் ஒரு ஆசுவாசத்தைத் தரும் இடமாகவும் மனதின் ஆசாபாசங்களையும் காம க்ரோத லோப மத மாச்சர்யங்களைக் களையும் இடமாகவும் அமைவதால் சத்சங்கங்கள் பெருகிவருகின்றன.
வயதான பெரியவர்கள் அமர முன்பு வீட்டின் முன்புறம் திண்ணைகள் அமைந்திருக்கும். தற்போது திண்ணைகள் அற்ற பெருநகரத்தின் வளர்ச்சியில் ஈசாப்பின் கதையில் வருவதைப் போல காலை மாலையில் பெரியவர்கள் தங்கள் உள்ளுள்ளும் இறையோடு ஒன்றிணையும் வாழிடங்களாக ஆகிவருகின்றன.
பேரக்குழந்தைகளுக்குப் பெரியவர்கள் தேவையில்லை. பிள்ளைகளுக்கும் பெற்றவர்கள் சொல்ல இயலாச் சுமை. வாழிடங்கள் இருக்கும்வரை வாழ்ந்து செல்வோமென உடல்சுமந்து காத்திருப்போருக்கான தற்காலிக விடுதலைத் தலங்கள் இந்த சத்சங்கங்கள்.
அருகிவரும் இளைய தலைமுறையின் பரிவாலும் பெருகிவரும் இளம்வயசாளிகளின் சமூக குடும்ப கண்ணியத்தைக் காப்பதாலும் அட்டாங்க யோகங்கள் செய்ய இயலாவிடினும் தியானம் செய்யவும் ஞானம் பெறவும் நிஷ்சல சித்தம் பெறவும் அதன்மூலம் தன் ஜீவன் முக்திக்கான தேடலும் நிகழும் சத்சங்கங்கள் வருங்காலத்தில் இன்னும் பெருகலாம் என்றே தோன்றுகிறது.
சத் சங்கங்களைப் பற்றிய சத்தான பல தகவல்களை முத்தாகத்தான் கூறியுள்ளீர்கள்.
பதிலளிநீக்கு//ஒரு கட்டத்துக்கு மேல் வீட்டில் நிலவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கொடூர தாக்கம் தாங்கமுடியாமலும் இங்கே படையெடுப்பவர்கள் அதிகம் எனலாம். ஒன்று வயப்பட்ட ப்ரச்சனைகளோடு கூடும் இளம் முதியவர்களுக்கும் ஒரு ஆசுவாசத்தைத் தரும் இடமாகவும் மனதின் ஆசாபாசங்களையும் காம க்ரோத லோப மத மாச்சர்யங்களைக் களையும் இடமாகவும் அமைவதால் சத்சங்கங்கள் பெருகிவருகின்றன.//
மிக அழகாகத் தெளிவாக ஆராய்ந்து சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றிகள் மேடம்.
வயதானவர்கள்தான் கூடவேண்டும் என்பதில்லை. இள வயதினரும் கலந்துகொள்ளலாம். அவர்களுடைய அனுபவங்களை நாம் அறிய வாய்ப்புண்டு. நம்மை மேம்படுத்திக்கொள்ளலாம்.
பதிலளிநீக்குநன்றி கோபால் சார்
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார் உண்மைதான்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!