திங்கள், 11 ஜனவரி, 2016

துரத்தும் நதி.

நாற்புறமும் மலைகள் சூழ்ந்தும்
துரத்தும் ஏதோ ஒன்றிலிருந்து
தப்பிப்பதுபோல ஓடிக்கொண்டிருக்கிறது நதி.

கடலுள் கலப்பது தவிர
வேறேதும் வழியிருக்கவில்லை அதற்கு.

அலையாகவோ மழையாகவோ
தேடிப்பார்க்கின்றது எது துரத்தியதென.


சோர்வதே இல்லை அது
தன்னைத் தானே துரத்தும் விளையாட்டில்.


7 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
நாமும்தான் நதியைத் துரத்துகிறோம்
கடலை நோக்கி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//சோர்வதே இல்லை அது
தன்னைத் தானே துரத்தும் விளையாட்டில்.//

உங்களைப்போலவே ...
தாங்கள் சோர்வில்லாமல் ...
அடிக்கடி பதிவுகள் கொடுப்பது போலவே! :)

ஊமைக் கனவுகள் சொன்னது…

தன்னைத்தான் துரத்தும் விளையாட்டு
நதிபோல மனிதனுக்கு வாய்ப்பதில்லோ?

அருமை.

தொடர்கிறேன்.

Shakthiprabha சொன்னது…

arumai

Geetha M சொன்னது…

சூப்பர்மா..பெண்ணும் தான் ஓடிக்கொண்டே.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி கோபால் சார் !!!!!!!!! :)

மனிதனும்தான் ஊமைக்கனவுகள்

நன்றி சக்தி ப்ரபா

நன்றி கீதா :) உண்மைதான்பா


Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...