செவ்வாய், 5 ஜனவரி, 2016

காய்ப்பு18.3.86.

உலகம் சுருளும்
மண்புழுவாய்
என் கேள்விக் குத்தலினால்


பச்சையங்கள்
உறிஞ்சி உறிஞ்சி
இலைகள்
பழுத்துப் போகும்.

கற்சுவர்களுக்குள்
ஓட்டைகள்
ஒளிந்திருக்கும்.

மனிதர்களுக்காய்
இறந்துபோன
செருப்புகள்
தூர எறியப்படும்.

மீன்கள்
காலங்காலமாய்க்
கொக்கின் வாய்க்குள்.


தழும்புகளோடு
காத்துக் கொண்டிருக்கும்
சுவர்,
மேலும் காய்ப்பேறுவதற்காய்.

இரவுத் துணியை
நட்சத்திரக் கற்கள்
கிழித்துக்கொண்டிருக்கும்.

கேள்விகளாய்
நிழல்களிலும்
நிறமாற்றம்.

தூக்கத்தின்
ஆழத்தில்
நாளைய வசந்தம்
காத்திருக்கும்
எனக்காய்.


4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. பகிர்வுக்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//இரவுத் துணியை
நட்சத்திரக் கற்கள்
கிழித்துக்கொண்டிருக்கும்.//

ஆஹா ! அருமையான கற்பனை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி கோபால் சார் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...