எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

வாதைகள் இருவிதம்:-



வாதைகள் இருவிதம்:-

திரும்பவும் சந்திக்கவே முடியாது
எனத் தெரிந்தும்
தவிர்ப்பதில் ஒரு
தற்காலிக நிம்மதி ஏற்படுகிறது.

நாம் கட்டமைத்த பிம்பங்களை
அப்படியே காப்பாற்றிக் கொள்ளலாம்.
நாமிருவர் சந்திக்க நம் சம்பந்தப்பட்டவர்
வலுக்கட்டாயமாகப் புன்னகைக்க வேண்டாம்


ஒரு சிற்பம் போலச் செதுக்கியதை
வெறும் கல்லாய்க் காணும் வாதையிராது.
ஒருவரை ஒருவர் தயவுசெய்யும்
தண்டனையில்லை.

எண்ணங்களைக் கசப்படிக்கும்
நிகழ்வுகள் இருவருக்குமிடையே
நிகழ்ந்தேறாது.
ஒருவர் பூச்சைப் பார்த்து
இன்னொருவர் பூச்சுப் பூசுதல்
நடந்தேறாது.

.எப்போதும் போல
நேரம் வாய்க்கவில்லை என்ற
பொய்யோடு கடந்து போகலாம்
நீ இருக்கும் ஊரை.

குறுக்கும் மறுக்கும்
சுற்றும் காற்றில்
ஒருவரை ஒருவர்
விட்டுவிட்டது புரியாமலே
நாம் விரும்பாமலே
நம் சந்திப்பு நிகழாமலே
உன் மூச்சும் என் மூச்சும்
கலந்திருக்கக்கூடும்
என்பது தெரியாமலே.

7 கருத்துகள்:

  1. //ஒருவரை ஒருவர்
    விட்டுவிட்டது புரியாமலே
    நாம் விரும்பாமலே
    நம் சந்திப்பு நிகழாமலே
    உன் மூச்சும் என் மூச்சும்
    கலந்திருக்கக்கூடும்
    என்பது தெரியாமலே.//

    ஆஹா, நான் மிகவும் ரஸித்து மகிழ்ந்த

    உண்மையான,
    உணர்வு பூர்வமான,
    உன்னதமான

    வரிகள். :)

    பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை. பாராட்டுகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமை சகோ! ஹைலைட் அந்த இறுதிவரிகள் தான்...செம உணர்வுபூர்வமான வரிகள்.

    //ஒருவரை ஒருவர்
    விட்டுவிட்டது புரியாமலே
    நாம் விரும்பாமலே
    நம் சந்திப்பு நிகழாமலே
    உன் மூச்சும் என் மூச்சும்
    கலந்திருக்கக்கூடும்
    என்பது தெரியாமலே.//

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி கோபால் சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்

    பதிலளிநீக்கு

  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...