எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்


இழவுகார விடுதியும் சில பிரச்சனைகளும்

காரைக்குடியில்  மக்கள் குடியிருப்புப் பகுதியில் கட்டப்பட்ட இழவுகார விடுதியினால் அந்தத் தெருவில் வசிப்பவர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஊருக்கும் உத்தரகிரியை மண்டபம் வேண்டும்தான் என்றாலும் அது குடியிருப்புப் பகுதியிலோ , பள்ளிக்கூடப் பகுதியிலோ  அமையாமல் காப்பது நலம்.


இழவுகார விடுதி தேவைதான் என்றாலும் அதை மக்கள் ஒப்புதல் பெற்றுக் கட்டி இருக்கலாம். சமீபத்தில் எங்கள் உறவினர் ஒருவர்  இறந்தபோது  அங்கேதான்  ஈமக்கிரியை செய்தோம் . அந்தத் தெருவில் வீடமைந்த நெருங்கிய உறவினர் சிலரே வருவதைத் தவிர்த்தனர்.

மிகுந்த  வசதியுடன் இருந்தது என்றாலும் அந்தத் தெருவில் வசிப்போர், பள்ளிக்கூடம்  செல்லும் குழந்தைகள் , சத்யா நகரில் வசிப்போர் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்தது.

தெருவில் கொட்டு கொட்டுவது, வே ட்டுப்  போடுவது  தவிர்க்கப் பட்டிருந்தாலும் அனைவரின் ஒப்புதலோடும் உள்ள இன்னொரு இடத்தில் கட்டப்பட்டிருந்தால் இந்த சேவை மிகவும் பாராட்டப்படக் கூடியதுதான்.

இதற்கு ஆவன செய்தால்தான் அந்தத் தெருவில் குடியிருப்போர்  நிம்மதியாக இருக்க முடியும்.

5 கருத்துகள்:

  1. நியாயமான கோரிக்கை
    பகிர்ந்தவிதம் மிகச் சரியாக
    பிரச்சனையை புரிந்து கொள்ளமுடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. மிகச் சரியான கருத்து. பொதுவாக இது போன்ற கிரியைகள் செய்ய ஊருக்கு ஒதுக்குப் புறமாகத்தானே கட்டுவார்கள்.....சென்னையில் கூட ஒரு சில ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்தாலும் குடியிருப்புகளுக்கு மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றன. இன்னொன்று நாம் கவனிக்க வேண்டும். இப்படிக் கட்டப்படும் இடங்கள் நாளடைவில், அதுவும் இப்போது குடியிருப்புகள் ராக்கெட் வேகத்தில் அதிகமாகும் காலத்தில் இழவுகார விடுதிகள் கிரியை மண்டபம் அருகிலும் குடியிருப்புகள் அதிமாகிவிடும் வாய்ப்பும் உள்ளதுதான்...அப்படித்தானே சென்னையிலும் முன்பு ஒதுக்குப் புறமாக இருந்தது இப்போது பல வீடுகளின் நடுவில் இருக்கின்றன...

    என்றாலும் உங்கள் கருத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  3. நன்றி டிடி சகோ

    நன்றி ரமணி சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ். ஆம் நகர்ப் புறத்தில் ஒவ்வொரு பெரிய பில்டிங்குக்கும் வெளியில் இவை அமைந்துள்ளன. அங்கே பெரிய ப்ரச்சனை வருத்தம் ஒன்றுமில்லை. இது எல்லாம் சிறுநகரங்களில் பாரம்பர்யமாக வாழ்ந்து வருபவர்க்கு ஏற்றுக் கொள்ள சிரமமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...