ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஆடி பதினெட்டும் முளைக்கொட்டும்.

ஆடிமாதம் என்றால் நமக்குத் தள்ளுபடிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஆடித் தள்ளுபடி, ஆடிக் கழிவு என்று பழைய சரக்குகளை எல்லாம் விற்றுவிடுவார்கள். ஆனால் ஈரோட்டில் தாமோதர் சந்துரு அண்ணன் குடும்பத்தார் பேத்தி ஆராதனாவுடன் ஆடி 18  ஐக் காவிரியில் கொண்டாடி முளப்பாரி கொட்டி இருக்கிறார்கள். .

குடும்பத்துடன் காவிரியில் நீராடி சாமிக்குப் படையல் இட்டு முளைப்பாரிகளையும் பூரண கும்பத்தையும் வைத்து 7 சாளக்கிராமங்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கருப்பண்ண சாமியையும் காவடியையும் வைத்து தீபம் காட்டி வணங்கி  முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறார்கள்.  

வளையல் காதோலை கருகமணி பூப்போட்டு சித்ரான்னம்  படைத்து வணங்கி இருக்கிறார்கள். வீட்டில் சில நாட்களுக்கு முன் ப்ளாஸ்டிக் பேசின்களில் மண் போட்டு பச்சைப் பயிறு அல்லது 21 வகையான தானியங்களைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி முளைக்கச் செய்கிறார்கள். இதற்குத் தினமும் பூஜை செய்வார்கள். அது நன்கு உயரமாக முளைத்து எழுந்தால் அந்த வருடம்வெள்ளாமை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
அதைக் கொண்டு போய் பொங்கும் புதுப்புனலில் நீராடி பூஜை செய்து நதியை அம்மனாக வழிபட்டு முளைப்பாரியைக் கொட்டுகிறார்கள்.இதுவே முளைக்கொட்டு.
  

இது  எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் எனலாம்.
 சிலர் நோன்பும் இருப்பது உண்டு. முளைப்பாரி அல்லது முளைக்கொட்டு போடுவதற்கு வயதுக்கு வந்த, வராத சிறுபெண்களில் இருந்து  எல்லாப் பெண்களுமே முளைப்பாரி போடுகிறார்கள். 

///////இந்த முளைக்கொட்டு உற்சவம் மதுரையில் ஆரம்பிக்கையில் அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றுவார்கள். ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப் படும். பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தருவாள். வரும் முளைப்பாரிகளை எல்லாம் அம்மனுக்கு எதிரே வைத்திருப்பார்கள். பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கடைசி நாள் கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைப்பதோடு அம்மனுக்கு உற்சவம் முடியும்.///

விவசாயத்தையும் இயற்கையையும் மண் வளத்தையும் பாதுகாக்கவும். நதியின் புதுப்புனலை வரவேற்கவும் எவ்வளவு அழகான வரவேற்பு கொடுக்கிறார்கள். மண் செழிக்க நடத்தப்படும் முளைக் கொட்டு அருமையான திருவிழாதான். வாழ்கவையகம் வாழ்க வளமுடன்.

3 கருத்துகள் :

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஆடி பதினெட்டின் இன்னோரு பக்கமா இது தேனம்மா. வெகு அழகு.குட்டியும் அம்மாவும் காவிரியில் ஆட்டம் ஜோர். மதுரை மீனாட்சி மோவிலிலும் இந்தப் பண்டிகை என்றால் விவசாயத்துக்கு எவ்வளவு மேம்பாடு.அன்னை அருளால் எல்லாம் செழிக்கட்டும். மிக நன்றி பா.அத்தனை படங்களும் வெகு அழகு.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வல்லிம்மா. ஆம் அம்மா இயற்கையை வழிபடும் விதம் அழகு :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...