திங்கள், 11 ஆகஸ்ட், 2014

இருபத்து நாலு மணி நேரமும்...

இருபத்து நாலு மணி நேரமும்.
********************************

கரண்ட் கட்..

இன்வர்டரும் கீ கீ என்று கத்தியபடி நின்றுவிட்டது.

வேறு வழியில்லாமல் வாசல் கதவைத் திறந்து வைத்துவிட்டு கம்ப்யூட்டரில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தாள் லதா. பாட்டரி இன்னும் தீராமல் இருந்தது. சீக்கிரம் முடிக்கவேண்டும்.

நிழலாடியது. பக்கத்து வீட்டக்கா கடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.இருபத்து நாலு மணி நேரமும் டி வி பார்க்கும் அந்தக்கா புருஷன் பாவம். ஒழுங்கா சமைச்சுப் போடுதோ என்னமோ. பேச ஆரம்பித்தால் நிறுத்தாது.

அப்பாடா. போய்விட்டது. கொஞ்ச நாளா கரண்ட் கட் ஆவதால் பக்கத்து வீட்டில் இருந்து அழுகைக் குரல் ஒலிக்கும் சீரியல் சத்தங்கள் கேட்பதில்லை.

பக்கத்து வீட்டக்கா மகள் ”என்னம்மா .. ஆண்டி வீட்டுக் கதவு திறந்திருக்கு. பேசாம கூட வர்றீங்க “ எனக்கேட்பது மெலிதாகக் காதில் விழுந்தது லதாவுக்கு.

“அது என்ன இருபத்து நாலு மணி நேரமும் ஓயாம கம்யூட்டர்ல ஏதோ நோண்டிக்கிட்டு இருக்கு. அந்தப் பக்கம்தானே வந்தேன். அக்கான்னு கூட கூப்பிடல. புருஷன் புள்ளங்களுக்கு ஒழுங்கா சமைச்சுப் போடுதோ என்னவோ. பாவம் அவங்க.” என்று கிசுகிசுப்பாக மகளிடம் கூறியது கேட்டு வியர்த்து வழிந்தது லதாவுக்கு.

டிஸ்கி:- ஜூன் 6, 2014 , அதீதத்தில் வெளியானது.


7 கருத்துகள் :

Menaga sathia சொன்னது…

ha ha ithu super!!

Subramaniam Yogarasa சொன்னது…

ஹ!ஹ!!ஹா!!!அவரவர்............சரி விடுங்க...................................க்கா.

சே. குமார் சொன்னது…

ஹா... ஹா... அருமை....

Thenammai Lakshmanan சொன்னது…

தாங்க்ஸ்டா மேனகா :)

தாங்க்ஸ் சுப்ரமணியன் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஹுஸைனம்மா சொன்னது…

ஆமாக்கா.. டிவின்னாலாவது, பார்க்கீற நம்ம கை ஃப்ரீயா இருக்கும், ஏதாவது வேலை செஞ்சுகிட்டே பார்க்கலாம். லேப்டாப் பாக்கிறதுன்னு சொல்றோமே தவிர, கையும் பிஸிதான் என்பதால், ஒரு வேலையும் நடப்பதில்லை!! :-(

A Budding Writer(!) சொன்னது…

he he

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...