எனது நூல்கள்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

மதச்சார்பற்ற நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளில் கூட சிறுபான்மையினரும் சில சமயம் பெரும்பான்மையினரும் தங்கள் மத வழிபாடுகளை நிம்மதியாக நிறைவேற்ற முடிந்ததில்லை.

ஆனால் சென்றவருடம்  நவம்பர் மாதம் துபாய் சென்றிருந்தபோது என் சகோதரன் எமிரேட்ஸ் பள்ளியில் நடைபெற்ற ஸ்கந்தர் சஷ்டி விழாவுக்கு அழைத்துச் சென்றிருந்தான்.

கிட்டத்தட்ட ஆயிரம்பேர் அமர்ந்து கண்டு களிக்கக்கூடிய  ஆடிட்டோரியம் . காவடி, கரகம், தமிழிசையில் இறைப்பாடல்கள், திருப்புகழ், யாகசாலை, தேரில் முருகன் உலா, கோயில் போன்ற கோபுர அமைப்பினுள்  தனித்தனியாக விநாயகர், முருகன் சன்னதி, சுவாமி புறப்பாடு, அழைப்பு, நீர்மோர், பானகம், உணவு போன்ற கோலாகலங்கள் ஒன்றுவிடாமல் சிரமேற்று நடத்தி இருந்தார்கள் விழாக்குழுவினர். மிக அமைதியான ஆன்மீக அனுபவம். இசையில் இறைவனை அடைந்தோம். அவ்வளவு பாடல்கள். துபாயில் இருந்துகொண்டு இசை கற்று சின்னஞ்சிறு குழவிகளின் மென்பூ குரலில் திருப்புகழ் கேட்டது காதெல்லாம் , மனமெல்லாம் பொங்கி வழிந்த அமிர்தம்.

மதச்சார்புள்ள நாடுகள் என்று அழைக்கப்படுபவை  அரேபிய நாடுகள். ஆனால் அங்கே பள்ளியின் முகப்பில் எமிரேட்ஸின் ஆட்சியாளர்கள் படத்துடன்  தாங்கள் வாழும் நாடு சிறக்கவும் உலக அமைதிக்காகவும், எமிரேட்ஸின் தொடர்ந்த வளர்ச்சிக்கும் -- தங்கள் வளர்ச்சிக்கும் ப்ரார்த்தனைகள் செய்தும் மற்றும் இவ்விழா நடக்க அனுமதித்த அவர்களுக்கு நன்றி கூறியும் ஸ்கந்தர் சஷ்டி குழுவினர் இந்த போஸ்டரை வைத்திருந்தார்கள். 

அங்கே பணிபுரியும் எல்லா மக்களும் தங்கள் வழிபாட்டுக்காக கோயில்கள் அமைக்கவும் வழிபடவும் உரிமை வழங்கி உள்ளது பாராட்டத்தக்கது.  ( பர் துபாயில் தேரா க்ரீக்கில்  கோயில்கள் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது -- அங்கே குருத்வாரா, சிவன், கிருஷ்ணர்  கோயில்கள் இருக்கின்றன.) 

மனிதநேயம் மிக்க இந்த ஆட்சியாளர்களுக்கு  என் வலைத்தளம் சும்மாவின்  சார்பாகவும் நன்றிகள்.

துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா பற்றி இங்கே படிக்கலாம்.
நம் அன்பிற்குரிய பிரபல வலைப்பதிவர் சுப்புத்தாத்தாவின் குரலில்  யூ ட்யூபில் ஒலிக்கும் இந்தப் பாடல் மிக அருமை.Published on Nov 20, 2013
Ms.Thenammai Lakshmanan in her blog www.honeylaksh.blogspot.com has illustrated the Murugan Festival at Dubai.
She has also admired the song sung by the kids there in praise of the Divine Hymn.
We thank Madam Thenammai Lakshmanan for the wonderful hymn.


“ சரவணபவ என்பது ஆறெழுத்து மந்திரம்
ஆறுமுகம் என்பது ஐந்தெழுத்து மந்திரம்
கந்தன் என்பது நான்கெழுத்து மந்திரம்
முருகா என்பது மூன்றெழுத்து மந்திரம்
வேலா என்பது இரண்டெழுத்து மந்திரம்
ஓம் என்பது ஓரெழுத்து மந்திரம். “

இந்தப் பாடலை என் வலைத்தளத்தில் இருந்து எடுத்து அழகாக இசைத்துப் பாடி இருக்கீங்க சூர்யா சார்.  நன்றி .

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1. வெளிநாட்டு ஷாப்பிங்.

2. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

3.ஷேக் ஸாயத் ரோட்..SHEIKH ZAYAD ROAD.

4. இனியெல்லாம் சுகமே. (துபாய் நகரத்தார் சங்கம். )

5. துபாயில் ஸ்கந்தர் சஷ்டி விழா. (2013)

6. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

7. 3500 திர்ஹாமும் 350 திர்ஹாமும்.. 

8. விமானப் பயணத்தில் ஒரு துண்டு வானம் ஒரு துண்டு பூமி. 

9. தரையில் இறங்கும் உலோகப் பறவை..

10. சாட்டர்டே போஸ்ட். சுபஸ்ரீ ஸ்ரீராமும் துபாய் கோயிலும்.

11. புர்ஜ் கலீஃபா. BURJ KALIFA.

12. வொண்டர் பஸ். WONDER BUS.(DUBAI) 

13.புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

14. ஸ்கந்தர் சஷ்டியும் மதச்சார்பின்மையும்.(EMIRATES SPECIAL)

15. சாட்டர்டே போஸ்ட். ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கக் கழுகுக் கொடியுடன் அருண் கருப்பையா. !

16. சாட்டர்டே போஸ்ட், துபாயில் பெண்கள் தொழுகை பற்றி ஜலீலா கமால்.

17. வாழ நினைத்தால் வாழலாம்.


5 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

சே. குமார் சொன்னது…

பாடல் அருமை...
நல்ல பகிர்வு.

Karuppu Pakkangal சொன்னது…

மிக மிக அருமை.. படிக்கும்போது பக்தி பரவசமடைந்தேன்..!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி யாழ்பாவண்ணன்

நன்றி குமார்

நன்றி கருப்பு பக்கங்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...