ஆடிமாதம் என்றால் நமக்குத் தள்ளுபடிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு ஆடித் தள்ளுபடி, ஆடிக் கழிவு என்று பழைய சரக்குகளை எல்லாம் விற்றுவிடுவார்கள். ஆனால் ஈரோட்டில் தாமோதர் சந்துரு அண்ணன் குடும்பத்தார் பேத்தி ஆராதனாவுடன் ஆடி 18 ஐக் காவிரியில் கொண்டாடி முளப்பாரி கொட்டி இருக்கிறார்கள். .
குடும்பத்துடன் காவிரியில் நீராடி சாமிக்குப் படையல் இட்டு முளைப்பாரிகளையும் பூரண கும்பத்தையும் வைத்து 7 சாளக்கிராமங்களுக்கு மஞ்சள் குங்குமமிட்டு கருப்பண்ண சாமியையும் காவடியையும் வைத்து தீபம் காட்டி வணங்கி முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறார்கள்.
வளையல் காதோலை கருகமணி பூப்போட்டு சித்ரான்னம் படைத்து வணங்கி இருக்கிறார்கள். வீட்டில் சில நாட்களுக்கு முன் ப்ளாஸ்டிக் பேசின்களில் மண் போட்டு பச்சைப் பயிறு அல்லது 21 வகையான தானியங்களைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி முளைக்கச் செய்கிறார்கள். இதற்குத் தினமும் பூஜை செய்வார்கள். அது நன்கு உயரமாக முளைத்து எழுந்தால் அந்த வருடம்வெள்ளாமை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.