பால் பாட்டில்., குட்டி மெத்தை
பழைய கரடி பொம்மை.,
சேமித்து வைத்திருக்கிறேன்.
போம்மா என சொல்லி
பைக் உதைத்து மகன்
அலுவலகம் சென்ற பின்.,
என் குட்டி மகனாய்
அவை பரிணாமம் அடைந்து
என் தோள் தழுவிக் கொள்கின்றன.
******************************************
பட்டாம் பூச்சிகளும் தட்டான்களும்
பறப்பதை பார்த்திருக்கிறேன்
வயலில் உணவுண்ணும் தந்தையோடு..
பறக்கும் இயந்திர பூச்சிகளை
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
கார்ட்டூன் சேனலில் மகனோடு.
****************************************
மழைநூலைப் பிடித்து
விளையாடுகிறோம்..
நானும் என் மகளும்..
கைகள் வழி
முறுக்கிய கயிறாய்
திரிகின்றன அவை..
****************************************
பல் முளைத்த குட்டிப்பயல்கள்
கடித்து வைக்காமல் இருக்க
ஆஞ்சனேயருக்கு வடை மாலை..
சுமந்த ஆஞ்சனேயர் சொன்னார்
இரண்டு பயல்கள் இருக்கும்
வீட்டில் இதுவும் இரண்டா..
******************************************
காலில் ஊஞ்சாலை ஆடி
கை வீசம்மாவென்று வீசி
களைத்துத் தூங்கியது
கருவேப்பிலைக் கண்ணு போல்
ஒண்ணே ஒண்ணு
***************************************
தொந்தி குலுங்க
உந்தி உந்திக் காசெடுத்து
கை விரித்து பார்த்தது
காசிருக்கா என்று..
******************************************
கண்ணாமூச்சி ஆடிச் சென்றாய்
முந்தானைக்குள்
தேடிக் கொண்டு நான்..
********************************************
பள்ளிக்கு கல்லூரிக்கு
வேலைக்கு சென்றாய்
திரும்பி வந்தாய்
திருமணமாகிச் சென்றாய்
திரும்பாமலே..
*****************************************
ஹாஸ்டலுக்கு சென்ற மகன்
திரும்பி வரும் வரை
கோட்ஸ்டாண்டில்
அவன் சட்டை அசைந்து கொண்டு..
துவைக்கப்படாமல் என் துணையாய்
*******************************************
வீடெங்கும் துப்பட்டாக்கள்
வருடம் ஒரு முறை
வெளிநாட்டிலிருந்து வரும்
மகள் நினைவாய் ஆடிக் கொண்டு..
******************************************
பிள்ளைகள் இல்லையென்று
யார் சொன்னது
என் மகள் நீ
உன் மகன் நான்..
பாசத்தால் ஆனது வாழ்வு.
*******************************************
சுவற்றில் ஓவியங்கள்
வரைவான் என் மகன்..
அவன் வரைந்தவற்றின் மேல்
நகலெடுக்கிறான் அவனின் மகனும்..
***********************************************
ஆசிரமத்தில் விட்ட மகனிடம்
சொல்லவில்லை
அவன் அங்கிருந்தான் வந்தானென..
******************************************
கணனி வழி
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
மகனின் வளர்த்தியை..
வெளிநாட்டில் வேலையில் நான்...
**********************************************
பள்ளி வண்டி வந்ததும்
ஓடிச் சென்று வாலசைத்து
வழியனுப்பித் திரும்புகிறது
தினம் மகளோடு
பழமுண்ணும் அணிலொன்று..
*******************************************
எனக்கும் அவனுக்குமான
தொப்புள் கொடி உறவை
தாயத்தில் சுமந்து என் மகன்..
**********************************************
நீ போட்டுக் கொடுத்த
முதல் காபி இனிக்கிறது
சர்க்கரை அற்றும்
உன் அக்கறையால்..
*******************************************
கற்றுக் கொள் என
சொல்லவில்லை நான்
உன்னிடம் எதையும்..
என் சுவடுகளில் நடந்தே
கற்றுக் கொள்கிறாய் அனைத்தும்..
****************************************
விடுமுறை வகுப்புகளுக்கும்
எனக்காக செல்கிறாய்..
நான் பணியிலிருந்து வந்ததும்
நம் இரவு நேரக் கதைக் குறிப்பாய்
பரிமாணம் கொள்கிறது அது.
*****************************************
தாத்தா பாட்டியிடமும்
இருக்க வேண்டும்
கற்றுக் கொள்ளவேண்டும் என
ஊர் அனுப்புகிறேன்..
செல்லும் போது
கண்ணைக் கசக்கினாலும்
திரும்பும் போது இன்னும்
வளர்ந்து திரும்புகிறாய்..
*******************************************
உனக்கும் குழந்தைகள்
என் கண்ணில் இன்னும்
குழந்தையாய் நீ..
*****************************************
கையசைத்து நீ பேசும் போது
உன் அப்பாவையும்
கண்களால் பாசம் காட்டும் போது
என் அப்பாவையும்
நினைவு படுத்துகிறாய்..
******************************************
பரிட்சைக் குறிப்புகள்
எடுத்துக் கொடுக்கிறேன் நான்..
என் மருந்தை எடுத்து
தண்ணீர் தரும்
உன் நினைவுக் குறிப்பைக் கண்டு
நெகிழ்ந்து நான்..
*********************************************
நண்பர்களைப் போல
அவ்வப்போது சண்டையிட்டுக் கிடப்போம்
கத்தி முடிந்ததும்
இணைந்து கொள்வோம்
சண்டை திகைத்து புறம் ஒளிய..
************************************************
என் பாசத்தை தேவையான போது
போர்வையாக்கிக் கொள்வாய்
கோபம் வந்த போது கிழித்தெறிவாய்
***********************************************
உன் நண்பர்கள் முன்னே
நீ பெரிய மனிதனைப் போல
நடந்து கொள்வாய்
உன் குழந்தைத்தனம் பார்த்து
நகைத்துக் கிடப்பேன் நான்..
************************************************
உணவு இடைவேளையில்
உனக்குப் பிடித்த உணவு இருந்தால்
தொலை பேசுவாய்...
உணவின் நறுமணம் கமழ கமழ
************************************************
உனக்கெடுத்துச் செல்கிறாயோ
இல்லையோ
உன் நண்பர்களின் பிடித்த உணவை
உனக்கென்று சொல்லி
அதிகம் எடுத்துச் செல்வாய்..
*************************************************
அலுவலகம் செல்லுமுன்
உன்னை வண்டியில் வைத்து சுற்றுகிறேன்
நிலவு உலவுவதை
விழி விரிய பார்க்கிறது சூரியன்...
***************************************************
வண்டி சத்தம் கேட்கும் போதெல்லாம்
அழுதாயாமே எனைத் தேடி..
தூங்கும் உன் கன்னத்தில் உப்பு ரோடுகள்..
****************************************************
பட்டுக் கயிறும்., தாயத்தும் வசம்பும்
மட்டும் அணிந்து நிற்கிறாய்.
நிறுத்தப்பட்ட வண்டியில்..
உன் மெல்லிய நிர்வாணம் பார்த்து
கூ(கீச்)சுகிறது உன் கை பட்ட ஹாரன்..
******************************************************
அம்மா நீ சூப்பர் என்றோ
போம்மா நீ போர் என்றோ
நீ அடிக்கடி சொல்வதைக் கேட்டு
மனப்பாடமாகி விட்டது என் கைபேசிக்கு.
டிஸ்கி:- என் தமிழன்னையின் வலைப்பதிவு .
என் அம்மாவின் வலைப்பதிவு சும்மாவின் அம்மா.
என் மாமாவின் வலைப்பதிவு சும்மாவின் மாமா
இவை மூன்றையும் ஒரு பார்வையிடுங்கள்.
என் மற்ற இரு வலைத்தளங்கள்.
தேனூஸ் ரெசிப்பீஸ் &
டைரிக் கிறுக்கல்கள்.
இந்த வாரம் ( ஜூன் 25 - ஜூலை 2 ) தமிழ்மணத்தில் நட்சத்திர வலைப்பதிவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். சிறப்பாக செய்ய உங்கள் அனைவரின் அன்பும் தேவை மக்காஸ்.
நன்றி.. தமிழ் மணம். இண்ட்லி, ஃபேஸ் புக் & கூகுள் ப்ளஸ்.

நட்சத்திரப் பதிவின் எல்லாக் கவிதைகளும் மின்னுகின்றன:)!
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துகள் தேனம்மை!
தமிழ்மண நட்சத்திரப் பதிவரானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.
பதிலளிநீக்குகவிதைக்குழந்தைகள் அத்தனையையும் வாரியணைத்து நெகிழ்ந்தேன். எதையென்று சொல்லமுடியவில்லை. எல்லாமே மனம் வசீகரிக்கும் கவிதைகள். தன்னுள் ஈர்த்தமிழ்த்தும் ஒவ்வொன்றிலிருந்தும் வெளிவந்து அடுத்ததைப் பார்க்க அவகாசம் போதுமானதாயில்லை. அன்னையர் அனைவருக்குமான தேசிய கீதம்போல் அத்தனையும் மனம் தொட்ட உன்னதம். வாழ்த்துக்கள்.
கவிதை குழந்தைகள்
பதிலளிநீக்குகொள்ளையழகு
என் வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் கவிதாயினி
அனைத்து கவிகளும் அருமை.!
பதிலளிநீக்குவாழ்த்துகள் அக்கா!!
பதிலளிநீக்குஎல்லாமே சின்னச்சின்னதாய் அழகோ அழகாக ரசிக்கும்படி உள்ளன.
பதிலளிநீக்குமனமார்ந்த பாராட்டுக்கள்.
//பல் முளைத்த குட்டிப்பயல்கள்
பதிலளிநீக்குகடித்து வைக்காமல் இருக்க
ஆஞ்சனேயருக்கு வடை மாலை..
சுமந்த ஆஞ்சனேயர் சொன்னார்
இரண்டு பயல்கள் இருக்கும்
வீட்டில் இதுவும் இரண்டா..//
அருமை!
/ஆஞ்சனேயருக்கு வடை மாலை..
சுமந்த ஆஞ்சனேயர்/
;)))))
vikatanil vantha ungal kavithai migavum arumai
பதிலளிநீக்குby nadi
http://nadikavithai.blogspot.in/
தமிழ்மண நட்சத்திரப் பதிவரானதற்கு., தேனக்காவிற்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் :)
பதிலளிநீக்குகுழந்தைக் கவிதையைப் போலவே கவிதைக் குழந்தைகளும் கொள்ளை அழகுக்கா. தமிழ்மண நட்சத்திரத்துக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தேனக்கா,அனைத்தும் மிக அருமை.
பதிலளிநீக்குகவிதைக் குழந்தைகள் கொஞ்சுகின்றன.
பதிலளிநீக்குகாலையில் சொல்லவேண்டிய வாழ்த்து இப்பொழுது.தமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபல்வேறு தளங்களிலும் படைப்பாக்கங்கள் தந்து சுழன்றுவரும் தங்களுக்கு தமிழ்மண நட்சத்திரப்பதிவராகி நிறைய எழுதும் வாய்ப்பு. வாருங்கள், வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா...
நட்சத்திர வாரம் ஜொலிக்கட்டும்.
நட்சத்திர வாழ்த்துகள்
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துக்கள் தேனம்மை லக்ஷ்மனன் அவர்களே. கவிதைக் குழந்தைக்கும் குழந்தைக் கவிதைக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துகள் தேனம்மை! பூங்கொத்தும்!
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநட்சத்திர வாழ்த்துகள்
பதிலளிநீக்குகவிதை குழந்தைகள் விரலால் மனதை மீட்டியது அருமை.....
பதிலளிநீக்குகவிதை குழந்தைகள் விரலால் மனதை மீட்டியது அருமை.....
பதிலளிநீக்குஅட என் தேனே!!!!!!
பதிலளிநீக்குஇனிய நட்சத்திர வாழ்த்து(க்)கள்.
வணக்கம் தேனம்மா..! எதிர்காலத்தில் தேன்போன்ற இனிமையான படைப்புகளை படைப்பீர்கள் என கருதிதான் உங்களுக்கு "தேனம்மை" என பெயரிட்டார்களோ என்னவோ?
பதிலளிநீக்குதங்களின் ஒவ்வொரு படைப்பையும் வாசிக்கும்போது எனக்கு அவ்வாறுதான் தோன்றுகிறது..
தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு என்னுடைய வாழ்த்துகள்...!!
தங்களைப் போன்ற தரமிகு எழுத்தாளர்களை தனது நட்சத்திரப் பகுதியில் வெளியிட்டு பெருமைசேர்த்த "தமிழ்மணத்திற்கு" என்னுடைய நன்றி..!
இனிய நட்சத்திர வாழ்த்துகள் தேனக்கா :-)
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி கீதமஞ்சரி
நன்றி செய்தாலி
நன்றி வரலாற்று சுவடுகள்
நன்றி ஹுசைனம்மா
நன்றி கோபால் சார்
நன்றி நாடி நாராயணன் சார்
நன்றி கணேஷ்
நன்றி ஆசியா
நன்றி மாதேவி
நன்றி ராஜ நடராஜன் சார்
நன்றி அமுதவன் சார்
நன்றி குமார்
நன்றி குணசீலன்
நன்றி அமரபாரதி
நன்றி அருணா
நன்றி அப்பாத்துரை
நன்றி டி வி ஆர்
நன்றி சரளா
நன்றி துளசி
நன்றி பழனி தங்கம்
நன்றி சாரல்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!