எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 ஜூன், 2012

டீசலுக்கு மாற்று ஜட்ரோப்பா கர்க்காஸ்.. ( JATROPHA CORCUS FOR DIESEL)

பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறி இருக்கும் இந்த நேரம் ஒரு சாமானியன் டீசலை நோக்கிப் படையெடுக்கிறான். ( நடந்து போறது , சைக்கிள்ல போறது எல்லாம் தூர தேச இடங்களுக்கு சரிப்பட்டு வராது.. கார் வைத்திருப்பவர்கள் பெட்ரோலுக்கு மாற்றாக காஸ் சிலிண்டரையோ அல்லது டீசல் காரையோதான் உபயோகிக்க வேண்டிவரும். சூரிய சக்தியால் இயங்கும் வண்டிகளின் உபயோகம் அதிகரிக்கும் வரை பெட்ரோல் டீசல்தான் கதி.. பெட்ரோல் பங்குகள் எல்லாம் இப்போதைக்கு  சினிமா களைமாக்ஸ் சண்டைக்காட்சி  ஷீட்டிங் ஸ்பாட் போல ஆகிவிட்டன..


இந்த சூழலில் டீசலுக்கு மாற்று ஜட்ரோப்பா  கர்க்காஸ்.. இது ஒரு காட்டாமணக்குச் செடி வகையைச் சார்ந்தது. ( சீர்காழி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நகருக்குச் செல்லும் வழியில் இந்தப் பலகை இருக்கிறது.) இதிலிருந்து கிடைக்கப்பெறும் எண்ணெய் டீசலுக்கு மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகிறது.

இந்தச் செடியை மிக எளிதாக வளர்க்கவும் பராமரிக்கவும் முடியுமாம்.  இதற்கான தண்ணீர்த் தேவையும் குறைவு.

ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 15 மெட்ரிக் டன் எண்ணெய் கிடைக்கிறது.


இந்த எண்ணெய் வீட்டு விளக்கெரிக்கவும், மெழுவர்த்தி சோப்பு செய்யவும் பயன்படுகிறதாம். டீசல் பம்ப்செட்டுகளுக்கும் மாற்று எரிபொருளாகப் பயன்படுகிறதாம்.இது ஒரு மூலிகை மருந்தாகவும்  ( குறிப்பாகப் புற்றுநோய்க்குப்) பயன்படுகிறதாம்.

இந்த எண்ணெய் உபயோகத்தினால் கச்சா எண்ணெய் இறக்குமதியையும் அதற்கான செலவீனங்களையும் குறைக்க முடியுமாம்.

இதை எரிபொருளாகப் பயன்படுத்தி பரிசோதனை முறையில் சதாப்தி ரயில் எக்ஸ்ப்ரஸ் புதுதில்லிக்கும், அம்ரிஸ்டருக்கும் இடையே ஓட்டப்பட்டு வெற்றியும் காணப்பட்டதாம்.

இன்னும் பல பலன்களைக் கொண்டதாம் இச்செடி.( நமக்கு எது என்று இனம் காணத் தெரியவில்லை.. எல்லாம் அசோக மரம் போலவே இருந்தது).  இந்தக் குறிப்பு பொதுமக்கள் நலனுக்காக தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தினரால் அளிக்கப்படுகிறது .  எனக் குறிப்பிடப்பட்டிருந்தது அந்தப் பலகையில்.. சீக்கிரம் இந்தப் பயிரை வளர்த்து இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவைகளைப் பூர்த்தி செய்தால் என்ன..

கண்முன்னே தெரியும் பலன்களை நாம் ஏன் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டுவராமல் இருக்கிறோம்.. எங்கே சீர்திருத்தம் தேவை..?




4 கருத்துகள்:

  1. மத்திய அரசு பயோ டீசல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டது என போன மாசம் பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் சொல்லிவிட்டது.

    நீங்கள் காட்டியுள்ள பலகை திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது வைத்ததாக இருக்கும்.

    ஆமணக்கு எண்ணை என இல்லை அனைத்து தாவர் எண்ணையும் பயோடீசலாக்கலாம்.

    பயோ டீசலில் உள்ளப்பிரச்சினை என்னவெனில் 2 மாதங்களுக்குள் பயன்ப்படுத்திவிட வேண்டும், தாவர எண்ணை என்பதால் ஆக்சிஜனேற்றம் ஆகிவிடும்.

    சமையல் எண்ணை சிக்கு பிடித்து விட்டது சொல்வார்களே அது தான்.

    மேலும் விரிவாக எனது பதிவில் சொல்லியுள்ளேன்.

    பயோடீசல்

    பதிலளிநீக்கு
  2. நன்றி வரலாற்று சுவடுகள்

    நன்றி வலைஞன்

    நன்றி வவ்வால்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...