புதன், 20 ஜூன், 2012

ரகசிய சுனாமி

என்னுள்ளே உறைந்து
என்னுடன் இறந்துவிடும்
ரகசியங்கள் பனிக்கட்டிகளாய்..

பென்குவின்கள்
வழுக்கும் பாறையில் விளையாடி
மீன் பிடித்துண்ணும்..

சங்குகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் நுழைந்து
மென்தசைகள் சுவைத்து


ஆக்டோபஸ்களும்
ஜெல்லி மீன்களும்
இறுகப்பிடித்துறிஞ்ச

கடலோடியாய் அலைகளுள்
புணர்ச்சிக்குப் பின்னான
தளர்ந்த அயர்ச்சியில்

கரையோர நண்டுகள்
மண்கிளறி அகலக்காலிட்டு
பக்கம் பக்கமாய் ஓட..

கால்நனைத்துக் காத்திருக்கும்
எனை விழுங்க வருகிறது
ஆழிப் பேரலை அரவத்துடன்..

ஆலிலையில் நீ பிழைக்க
சுருட்டிச் செல்கிறது
நீர்ப்பாய் என்னை.

 டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 5, 2011 திண்ணையில் வெளியானது

6 கருத்துகள் :

Ramani சொன்னது…

சிந்தனைக் கடலில் மூழ்கித்
தத்தளித்துப் பின் கரைசேரும்
அற்புதக் கலைஞர்கள் குறித்த
இந்தக் கவிதை அற்புதம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மனசாட்சி™ சொன்னது…

ம்.... ரகசிய சுனாமி சொன்ன விதம்

செய்தாலி சொன்னது…

m(:

arumai kavithaayini

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அருமை.!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி. வித்யாசமான கண்ணோட்டம்

நன்றி மனசாட்சி

நன்றி செய்தாலி

நன்றி வரலாற்று சுவடுகள்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...