குழந்தைமை:-
*****************
இல்லத்தரசி
யதாஸ்தானம்
உள்ளிருந்து
குழந்தையும் குமரியும்
குதித்தபடி எப்போதும்..
மனதில் எழும்
குழந்தை வாசனை
முகரும்போதெல்லாம்
குழந்தையாகிறேன்.
கண்ணீரோடு கத்துவது
விசும்பலோடு சமாதானமாவது
நீர்க்கோட்டுக் கன்னத்துடன்
கைபிடித்துச் சிரிப்பது
கன்னங்களின் உப்பு
சமாதான இனிப்பு
ருசித்துக் கிடக்கிறது
கொஞ்சப்படும்போது..
விடுமுறை தினங்களில்
என் குழந்தைகளும்
அவர்களின் நண்பர்களும்
அவர்களின் பொம்மைகளும்
ஒன்றாகிறோம்.
வீட்டுள் விளையாடும்
விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றி பெற
என்னுள்ளிருக்கும்
சிறுமி பிடிவாதம் பிடிக்கிறாள்.
அவளை பெரியமனுஷியாக்கி
தோற்க மனமில்லாமல்
தோற்கிறேன்..
என்னை விடச்
சின்னக் குழந்தைகளிடம்..
******************************************
தாய்மையின் தூய்மை..:- (ஆணின் மொழியில்.)
**************************
அன்பாலே சமைந்தவளே..
அன்பையே சமைத்தவளே..
ஆவியோடு சேர்ந்தாயே..
ஆசீர்வாதம் செய்தாயே..
உன் ஊனையே உருக்கி
உதிரத்தை பாலா பெருக்கி
ஊட்டி மகிழ்ந்தவளே..
உள்ளன்போடு பகிர்ந்தவளே..
ஆதியிலே நீ மட்டும் இருந்தே..
பாதியில நான் அங்கு விளைந்தேன்..
அம்மா உன் பாதியுடல் எடுத்து
என் மீதி உடல் கொடுத்தாய்.
உன் துப்பட்டாவோ முந்தானையோ
பாதுகாப்புக் கவசமாய்
எப்போதும் என்னைச் சுற்றி இருக்கும்
பரவசப் பூந்தோட்டமே.
திருமணமாகி இருதுருவம் ஈர்த்து
இருவரும் சமமானமே.
இரும்பையும் இளக்கும்அன்பு
இதயத்தை நிறைக்கும் பண்பு.
எனை ஆளாக்கி விட்ட தாயே..
தன் ஆளாய் ஏற்ற தாரமே.,
அரவணைக்கும் அன்பு மகளே..
உங்க அன்பாலே சாந்தி அடைஞ்சேன்..
உன் முகம் பார்த்துதான் பிறந்தேன்
உன் முகம் பார்த்துதான் வளர்ந்தேன்..
உன் முகம் பார்த்துத்தான் வாழ்ந்தேன்..
உன் முகம் பார்த்து நான் பூரிக்கிறேன்..
சாதி சண்டை ., வர்க்க பேதம்.,
பெண்ணடிமை ஏதும் இல்லை
தாய் தாரம் மகளெல்லாம்
தன்னிறைவோடு வாழ்ந்திடணும்.
நிலவுலகோ மண்ணுலகோ
செவ்வாயோ வெள்ளியோ
கணவனோ மனைவியோ
பேதமெல்லாம் தாய்க்கு இல்லை.
என் ரத்தமெல்லாம்
உன் பால் வாசம்.
என் சித்தமெல்லாம்
உன் சாத்துவீகம்.
நீதியோடு கோல் பிடித்து
நிம்மதியை கொடுத்திடம்மா..
நிறைந்திருக்கும் அமைதி நீயே
வெற்றி தரும் கொற்றவையே..
பாசம் கொட்டும் பரதேவதே
அம்மா என்னும் அன்பு பொம்மை
என் அண்டம் உந்தன் பார்வைக்குள்ளே
அரவணைச்சு அமைதி கொடும்மா
தூய்மையான தேவதையே
துணையாய் நீயும் தோள்கொடம்மா
வாழ்நாளெல்லாம் என் பக்கமிருந்து
வளர இன்னும் வாழ்த்து அம்மா.
டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 1- 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.
*****************
இல்லத்தரசி
யதாஸ்தானம்
உள்ளிருந்து
குழந்தையும் குமரியும்
குதித்தபடி எப்போதும்..
மனதில் எழும்
குழந்தை வாசனை
முகரும்போதெல்லாம்
குழந்தையாகிறேன்.
கண்ணீரோடு கத்துவது
விசும்பலோடு சமாதானமாவது
நீர்க்கோட்டுக் கன்னத்துடன்
கைபிடித்துச் சிரிப்பது
கன்னங்களின் உப்பு
சமாதான இனிப்பு
ருசித்துக் கிடக்கிறது
கொஞ்சப்படும்போது..
விடுமுறை தினங்களில்
என் குழந்தைகளும்
அவர்களின் நண்பர்களும்
அவர்களின் பொம்மைகளும்
ஒன்றாகிறோம்.
வீட்டுள் விளையாடும்
விளையாட்டுப் போட்டிகளில்
வெற்றி பெற
என்னுள்ளிருக்கும்
சிறுமி பிடிவாதம் பிடிக்கிறாள்.
அவளை பெரியமனுஷியாக்கி
தோற்க மனமில்லாமல்
தோற்கிறேன்..
என்னை விடச்
சின்னக் குழந்தைகளிடம்..
******************************************
தாய்மையின் தூய்மை..:- (ஆணின் மொழியில்.)
**************************
அன்பாலே சமைந்தவளே..
அன்பையே சமைத்தவளே..
ஆவியோடு சேர்ந்தாயே..
ஆசீர்வாதம் செய்தாயே..
உன் ஊனையே உருக்கி
உதிரத்தை பாலா பெருக்கி
ஊட்டி மகிழ்ந்தவளே..
உள்ளன்போடு பகிர்ந்தவளே..
ஆதியிலே நீ மட்டும் இருந்தே..
பாதியில நான் அங்கு விளைந்தேன்..
அம்மா உன் பாதியுடல் எடுத்து
என் மீதி உடல் கொடுத்தாய்.
உன் துப்பட்டாவோ முந்தானையோ
பாதுகாப்புக் கவசமாய்
எப்போதும் என்னைச் சுற்றி இருக்கும்
பரவசப் பூந்தோட்டமே.
திருமணமாகி இருதுருவம் ஈர்த்து
இருவரும் சமமானமே.
இரும்பையும் இளக்கும்அன்பு
இதயத்தை நிறைக்கும் பண்பு.
எனை ஆளாக்கி விட்ட தாயே..
தன் ஆளாய் ஏற்ற தாரமே.,
அரவணைக்கும் அன்பு மகளே..
உங்க அன்பாலே சாந்தி அடைஞ்சேன்..
உன் முகம் பார்த்துதான் பிறந்தேன்
உன் முகம் பார்த்துதான் வளர்ந்தேன்..
உன் முகம் பார்த்துத்தான் வாழ்ந்தேன்..
உன் முகம் பார்த்து நான் பூரிக்கிறேன்..
சாதி சண்டை ., வர்க்க பேதம்.,
பெண்ணடிமை ஏதும் இல்லை
தாய் தாரம் மகளெல்லாம்
தன்னிறைவோடு வாழ்ந்திடணும்.
நிலவுலகோ மண்ணுலகோ
செவ்வாயோ வெள்ளியோ
கணவனோ மனைவியோ
பேதமெல்லாம் தாய்க்கு இல்லை.
என் ரத்தமெல்லாம்
உன் பால் வாசம்.
என் சித்தமெல்லாம்
உன் சாத்துவீகம்.
நீதியோடு கோல் பிடித்து
நிம்மதியை கொடுத்திடம்மா..
நிறைந்திருக்கும் அமைதி நீயே
வெற்றி தரும் கொற்றவையே..
பாசம் கொட்டும் பரதேவதே
அம்மா என்னும் அன்பு பொம்மை
என் அண்டம் உந்தன் பார்வைக்குள்ளே
அரவணைச்சு அமைதி கொடும்மா
தூய்மையான தேவதையே
துணையாய் நீயும் தோள்கொடம்மா
வாழ்நாளெல்லாம் என் பக்கமிருந்து
வளர இன்னும் வாழ்த்து அம்மா.
டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் 1- 15 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.
வார்த்தைகளில் உணர்வுகள் வெடித்து சிதறுகின்றன..!
பதிலளிநீக்குரெண்டுமே அருமை தேனக்கா..
பதிலளிநீக்குகுழந்தைமை என்பது தவறான வார்த்தைப் பிரயோகம்.
பதிலளிநீக்குதாய்மை என்ற சொல் வழக்கில் இருப்பதால் தந்தைமை என்பீர்களா?
குழந்தைமை என்றார் குழந்தைக்குப் போட்டிருக்கும் மை அல்லது குழந்தை வைத்திருக்கும் மை என்பதுதான் பொருள்..
அருமையாக எழுதியுள்ளீர் நல்வாழ்த்து.
பதிலளிநீக்குநன்றி வரலாற்று சுவடுகள்
பதிலளிநீக்குநன்றி சாரல்
நன்றி அறிவன். மொழி வழக்கு என்பது மாறுகிறது என சொல்வேன் நான்.நாம் பேசுவதெல்லாமே தமிழ்தானா சொல்லுங்கள்.
நன்றி கவி அழகன்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!