வெள்ளி, 22 ஜூன், 2012

அலையும் வெய்யில்

அலையும் வெய்யில்:-
**********************
பார்க் பெஞ்சுகளில்
சூடு ஏறி அமர்ந்திருந்தது.
மரங்கள் அயர்ந்து
அசைவற்று நின்றிருந்தன.
ஒற்றைப்படையாய்ப்
பூக்கள் பூத்திருந்தன.
கொரியன் புல் துண்டுகள்
பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

டெரகோட்டா குதிரை
சாயம் தெறிக்கப் பாய்ந்தது.
இலக்கற்ற பட்டாம்பூச்சி
செடிசெடியாய்ப் பறந்தது.
குழாய்களில் வழிந்த நீரை
சூரியன் உறிஞ்சியபடி இருந்தது.
உஷ்ணம் தகிக்க நிழல்களும்
ஓடத் துவங்கி இருந்தன.
காவலாளியும் பூட்டுவாருமற்று
விரியத் திறந்திருந்தது கதவு
உடைதட்டி எழுந்த அவள்
ஒரு முத்தத்தை நிராகரித்திருந்தாள்.

 டிஸ்கி :- இந்தக் கவிதை ஜூன் 12, 2012 திண்ணையில் வெளியானது


7 கருத்துகள் :

சே. குமார் சொன்னது…

அருமை...
வெயில் காலத்தின் பூங்கா கண் முன்னே வந்து சென்றது.

lekshy சொன்னது…

Good

பா.கணேஷ் சொன்னது…

அருமையான சொல்லாடல்க்கா. பிரமிக்க வைத்தது இந்தக் கவிதை. அருமை.

ஜோதிஜி திருப்பூர் சொன்னது…

Best wishes for STAR.

மாதேவி சொன்னது…

நட்சத்திர வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி குமார்

நன்றி லெக்ஷி

நன்றி கணேஷ்

நன்றி ஜோதிஜி

நன்றி மாதேவி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...