எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

மணல் சிற்பம்..

மணல் சிற்பம்.:-
********************

கடற்கரையில் நீ
அளைந்த மணலை
துப்பட்டாவில் ரகசியமாய்
அள்ளி வந்தேன்.

கண்ணாடிப் பைக்குள்
இடம் மாறி
அன்றைய மாலையோடு
உறைந்திருக்கிறது அது.


உன் கை ரேகைகள்
சிப்பி வடிவில்
உருமாறிக் கிடக்கின்றன.

உன் விரல்களின் உப்பும்
இனிக்கிறது அதில்.
வியர்வையின் வாசமும்
ஈரக்கசிவோடு.

நினைக்கும்பொதெல்லாம்
முகத்தில் தடவி
மணல் ஓவியமாகிறேன்.

என் முகத்தில்
ஒரு கடல் பிறந்து
அலையடிக்கத் துவங்குகிறது.

அழியுமுன் அள்ளுகிறாய்
மணற்சிற்பமாய்
என் முகத்தை உன் கைகளுக்குள்.

டிஸ்கி:- இந்தக் கவிதை ஃபிப். 13,2012 காதலர் தின சிறப்பிதழான அதீதத்தில் வெளிவந்துள்ளது.


9 கருத்துகள்:

  1. என் முகத்தில் ஒரு கடல் பிறந்து அலையடிக்கத் துவங்குகிறது. அழியுமுன் அள்ளுகிறாய் மணல் சிற்பமாய் என் முகத்தை உன் கைகளுக்குள்! -வியக்க, ரசிக்க வைத்த வரிகள். அருமையான கவிதைக்கா... பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  2. உயிருள்ள மணல்சிற்பம். துப்பட்டாவில் அள்ளி வருமளவு கொள்ளை ஆசையா?

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ்

    நன்றி ராகவன்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி ரிஷ்வன்

    நன்றி விச்சு

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...