வெள்ளி, 2 டிசம்பர், 2011

ரொமான்ஸ் மழை.. சூரியக்கதிரில்..அலுவலகம் சென்றபின்னும்
மணத்துக் கொண்டிருந்தது
கணவனின் ஆஃப்டர்ஷேவ்
லோஷன் தடவிய முத்தம்.

மீசையில் டையிட்டுக்
காய்ந்த கணவனை
முத்தமிட்டமிட்டபோது
மனைவிக்கும் மீசை வந்தது.படித்த பேப்பர்கள் நடுவில்
ஆலிலைக் கிருஷ்ணனாய்க்
களைத்துத் துயில்கிறார்
விடுமுறை நாளில் கணவர்.

கொக்கின் வாய் மீனாகிறது
ஒரு ப்ரெஞ்சு முத்தத்தில்
சிக்கிய உதடு.

சாயம் பூசாமல் எப்போதுமே
சிவந்து கிடக்கின்றன
சாயப்பட்டறையாய் என் உதடுகள்
உன் முத்தத்தால்.

அடித்த மழை
அணைக்க வைக்கிறது
வெம்மையான விளக்கையும்
வெதுவெதுப்பான உன்னையும்.

அமேசான் காடுகள்
அடர்த்தியானதாம்
ஆண்மையான உன் மார்பை விடவா.

அணைக்கும் மழையில்
நனைந்து கொண்டிருந்தோம்
நகரமும் நானும்.


டிஸ்கி:- இந்தக் கவிதைகள் 2011 ஆகஸ்ட் சூரியக் கதிரில் வெளிவந்துள்ளன.


14 கருத்துகள் :

ஸாதிகா சொன்னது…

தேனூஊஊ....ரொமான்ஸ் மழை அதிகமாக பொழிகிறதே!

ஸாதிகா சொன்னது…

தோழி....இந்த கவிதையை அச்சிவடிவில் பத்திரிகையில் படித்து விட்டு ரொம்பவுமே சிரித்தேன்.உடனே உங்களுக்கும் போனும் போட்டேன்.நீங்கள்தான் எடுக்கவே இல்லை.:(

அமைதிச்சாரல் சொன்னது…

ரொமான்ஸ் மழை அசத்தல்.. :-))

அடிக்கடி இப்படியும் பெய்யட்டும் கவிதை மழை.

கணேஷ் சொன்னது…

மழையை நீங்கள் பாடியதை ரசித்ததைப் போலவே இந்த ரொமான்ஸ் மழையையும் ரசித்தேன். படித்த பேப்பர்களின் நடுவில் ஆலிலைக் கண்ணனாய் கணவர் துயிலும் வரிகள் அருமை. அணைக்கும் மழையில் நனைந்து கொண்டிருந்தோம் நகரமும் நானும்... என்னா வரிகள்! (என்னிக்காவது நான் கவிதைன்னு எதையாச்சும் ட்ரை பண்ணினா அதுக்கு நீங்கதான் இன்ஸ்பிரேஷனா இருப்பீங்கக்கா...)

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமையான கவிதை

Rathnavel சொன்னது…

அருமை அம்மா.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

கருத்துள்ள கவிதை..
வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகிய உங்கள் கவிதை மழையில் நீண்ட நாட்களுக்குப்பிறகு நனைந்தேன் நானும், இன்று. மிஸ் பண்ணாமல் படித்ததை மிகவும் மகிழ்ச்சியாய் உணர்ந்தேன்.

//அமேசான் காடுகள்
அடர்த்தியானதாம்
ஆண்மையான உன் மார்பை விடவா.//

முத்தமழைகளின் அனைத்து வரிகளுக்கும் சபாஷ்! ;)))))

===========================

தேனம்மை லெக்ஷ்மணன் said...
//நல்ல சிறுகதை கோபால் சார். முடிவில் இன்றைய பெண்கள் மறந்துவிட்ட நிறைய விஷயங்களை சொல்லியுள்ளீர்கள்.//

மிக்க நன்றி, மேடம்.


//ஒரு பெண் தாய்மை வாசனையோடு கடந்து போவது போல் இருந்தது..//

ஆஹா! தங்களின் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளன. தாய்மை அடைந்த பெண்களுக்கு ஏற்படும் பூரிப்பை எனக்கு இந்த வரிகளால் உணர்த்தியதில் அதன் வாசனையை என்னாலும் அறிய முடிந்தது. நீங்க நீங்க தான்! ;)))))

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

[எனக்கு சமீபகாலமாக சில விசித்திரமான பிரச்சனைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால்
அதிகமாக வலைப்பக்கம் வர முடியாமல் உள்ளது. அதனால் நீண்ட நாட்களாக உங்கள் பக்கமும் வரவே இல்லை. தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். மீண்டும் இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போமாக!]

=======================

இன்று வந்து இந்தக்கவிதையைப் படிக்கவாவது பாக்யம் செய்துள்ளேன்.
சூப்பரான கவிதை - சூரியக்கதிரில் வர வேண்டுமென்றால் ’சும்மா’வா என்கிறீர்களா!! அதுவும் சரி தான்.

அன்புடன் vgk

r.v.saravanan சொன்னது…

ரோமன்ஸ் மழை துளிகள் (வரிகள்) ஒவ்வௌன்றும் அசத்தல்

r.v.saravanan சொன்னது…

நான் எனது தளத்தில் எழுதி வரும் தொடர்கதை நேரமிருக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள்

Priya சொன்னது…

ரொமான்ஸ் மழை அருமை!!!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஸாதிகா

நன்றி சாந்தி

நன்றி கணேஷ்

நன்றி ராஜா

நன்றி ரத்னவேல் சார்

நன்றி சௌந்தர்.

நன்றி கோபால் சார்

நன்றி சரவணன்

நன்றி ப்ரியா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

விச்சு சொன்னது…

இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...