டைட்டானிக். இந்தப் பேரைக் கேட்டதும் என்ன ஞாபகம் வருது உங்களுக்கு. ஒரு பிரம்மாண்டமான உல்லாசப் பயணக் கப்பலும்., அதில் சந்தோஷப் பறவைகளாய்த் திரிந்த இரண்டு காதலர்களும்தானே.. கடல் நிறைய ரகசியங்களைப் புதைத்து வைத்திருக்கு. அதில் ஒன்று இந்த டைட்டானிக் கப்பல். நிறைய பள்ளத்தாக்குகளும்., மலைகளும்., எரிமலைகளும்., அபாயகரமான பனிப்பாறைகளும் கடலுக்குள்ளே மறைஞ்சிருக்கு. இந்தப் பனிப்பாறைகளில் மோதித்தான் டைட்டானிக் என்ற கப்பல் நிறைய பேரோட கனவுகளோட சேர்த்து வாழ்க்கையையும் மூழ்கடிச்சிருச்சு.
MRS. RHODA MARY 'ROSA ABBOTT' ( NEE' HUNT) என்பவரும் அதில் பயணம் செய்த பிரயாணி. அவர் பேரை மட்டும், பயணம் செய்ததை மட்டும் எடுத்துக்கிட்டு டைட்டானிக் படம் நம்ம எம்ஜியார் பாணியில் ஒரு காதல் கதையா ( ஏழைப்பையன் பணக்காரப்பெண்ணை விரும்புவது ) படமா எடுக்கப்பட்டிருக்கிறது.
20TH CENTUARY FOX ., PARAMOUNT PICTURES ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது இந்தப் படம். இயக்கம் ஜேம்ஸ் காமரூன். லியானார்டோ டீ காப்ரியோ ஹீரோவாவும்., கேத் வின்ஸ்லேட் ரோஸ் ஆகவும், பில்லி ஸேன் ரோஸின் நிச்சயிக்கப்பட்ட கணவனாகவும் நடித்த இந்தப் படம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டது. அஹா எவ்வளவுன்னா கேக்குறீங்க.. மூச்சை இழுத்துப் பிடிச்சுக்குங்க.. இது கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டது. டைட்டானிக் கப்பலைத் திரும்ப PLAYAS DE ROSRITO , BAJACALIFORNIA ஆகிய இடங்களில் உருவாக்கி SCALE MODEL & COMPUTER- GENERATED IMAGERY மூலமா இது மூழ்கினதத் திரும்ப நிகழ்த்திப் படம் பிடிச்சிருக்காங்க.
1995 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் டிசம்பர் 19, 1997 இல் வெளியிடப்பட்டபோது பெரும் பணத்தையும் புகழையும் சர்ச்சையையும் சம்பாதித்தது. 14 அகாடமி அவார்டுகளும்., 7 ஆஸ்கார் அவார்டுகளும்., பெஸ்ட் டைரக்டர்., பெஸ்ட் ஃபிலிம் போன்ற அவார்டுகளும் பெற்ற இந்தப் படத்தோட அவரோட அவதார் படம்தான் அடுத்த போட்டிக்கு வந்தது. அமெரிக்காவின் AFI’s 10 top 10 யின் ஆறாவது சிறந்த EPIC FILM ஆ இதுதான் இன்றும் திகழுது.
இனி இது சார்ந்த உண்மைகளைப் பார்ப்போம். தன்னோட முதல் பிரயாணத்திலேயே தன்னோட கடைசி முடிவை அடைந்தது இந்தக் கப்பல். மூழ்கவே மூழ்காது. விபத்து ஏற்படவே ஏற்படாதுன்னு சொல்லித் தயாரிக்கப்பட்ட கப்பல் இது.
இந்தக் கப்பல் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பல்.வைட் ஸ்டார் லைன் என்பவர் இதன் உரிமையாளர். இதை உருவாக்கியவர்கள் வட அயர்லாந்தைச் சேர்ந்த ஹார்லெண்ட் மற்றும் வூல்ஃப். இதைக் கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆயின. ஏப்ரல் 10, 1912 இல் பிரயாணத்தைத் தொடங்கி ஏப்ரல் 15 , 1915 இல் வட அட்லாண்டிக்கில் ஒரு பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சுமார் 1500 பேர் கொல்லப்பட்டது மிகப் பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. செப்டம்பர் 1., 1985 இல் கடலில் 12,000 அடி ஆழத்திலிருக்கும் கப்பலை ரொபேர்ட் பலார்ட் தலைமையான ஒரு ஆய்வாளர் குழு கண்டு பிடித்தது.
இங்கிலாந்தின் சௌதாம்டனிலிருந்து அமெரிக்க நியூயார்க்குக்கு காப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் தலைமையில் புறப்பட்ட இக்கப்பலில் மூன்றாம் வகுப்பில் அமெரிக்காவில் குடியேற சென்ற எளிய மக்கள் அதிகமாகவும், முதல் வகுப்பில் புகழ் பெற்ற கோடீஸ்வரர்கள் அதிகமாகவும் இருந்தார்கள். பனிப்பாறைகள் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட செய்திகள் டைட்டானிக்கை சென்று அடையவே இல்லை.. மோதி மூழ்க ஆரம்பித்தபின் முதல், இரண்டாம் வகுப்புப் பிரயாணிகள் போல் எளிதாய் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளால் லைஃப் போட்டுகளில் இறங்க முடியவில்லை. மொத்தம் 2.223 பேரில் 1517 பேர் உயிரிழந்தனர். 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையோர் கடலில் குளிர் தாங்காமையால் இறந்தனர்.
அவர்களுள் காப்பாற்றப்பட்ட ஒருத்திதான் மிசஸ் ரோடா மேரி ‘ ரோஸா அப்பாட்”. அதன் கடைசி பயணி ”மில்லிவினா டீன்” என்ற பெண்ணும் மே 2009 இல் மரணம் அடைந்தார். கப்பலில் பயணம் செய்த போது 2 மாதக் குழந்தையாக இருந்ததால் அவருக்கு அது எதுவும் நினைவில்லை. அவரது அம்மாவும் அப்பாவும் அவரை ஒரு லைவ் போட்டில் வைத்து அனுப்பியதால் காப்பாற்றப்பட்டார்.
ரோசாவின் வாழ்க்கை நாம படத்துல பார்க்குறதுக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. ரோட் ஐலாண்டைச் சேர்ந்த ஒரு வெயிட் சாம்பியனின் மனைவியான ரோடா அப்பாட்டுக்கு 35 வயது. ஆனால் அவர் தன் கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார். நம்ம தமிழ்ப் பொண்ணுங்களைப் போல நார்மல் உயரம்.மாநிறம்., நல்ல அடர்த்தியான நீண்ட கூந்தல். அவருக்கு 16 வயதில் ரோஸ்மோர்., 13 வயதில் யூஜின்னு ரெண்டு பையன்கள் உண்டு. ரோசா சால்வேஷன் ஆர்மியில் பணியாற்றியவர்.
கணவரோடு விவகாரத்து ஏற்பட்ட பின் தன் தாயோடு இங்கிலாந்தில் வசித்து வந்தாங்க. தன்னோட பையன்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கணும்கிற ஆசையில் அங்கே இருந்தாங்க. ஆனா பசங்க ரெண்டு பேருக்கும் அமெரிக்கா திரும்ப போகணும்னு ஆசை. தன்னோட குழந்தைகள் விருப்பத்தை நிறைவேத்த ரோசா இந்த பயணிகள் கப்பல்ல மூன்றாம் வகுப்பில் டிக்கெட் புக் செய்தாங்க.
பயணத்தின் போது பனிப்பாறையில் மோதுகிறது கப்பல். அப்போ அதில் பயணம் செய்த அத்தனை பேரையும் ஒன்றாக உயிர்பயம் உண்டாக்கி முதல் வகுப்பு மூன்றாம் வகுப்பு எல்லாம் இல்லாமல் செய்கிறது. இருந்து முதல் வகுப்புக்காரகளுக்கு முதலில் லைவ் போட்டில் இடம் கிடைக்கிறது. மூன்றாம் வகுப்பினருக்கு அந்த அளவு இடம் கிடைக்கவில்லை . என்ன சோகம். ரோசா தன் இரு மகன்களோடு போட்டில் ஏறுகிறார். டெக்கிலிருந்து குதித்த அவரின் இருமகன்களும் பாலன்ஸ் தவறி தண்ணீரில் விழுகிறார்கள். உடலை உறையவைக்கும் உறைபனி நீரில் கால்கள் மரக்கட்டையாக அவர் லைஃப் பெல்ட்டோடு கிடந்து முதலுதவிப் படையினரால் கண்டுபிடிக்கப்படுகிறார். இரு மகன்களையும் காப்பாற்ற முடியவில்லை.
இவருடைய அறைக்குப் பக்கத்தில் இருந்த ஆமி ஸ்டான்லி சொல்கிறார். இவர் தன்மகன்கள் கூடவே இருக்க விரும்பினார். முடியாமல் போய் விட்டது. இவரின் தலையில் ஒரு கார்க் மாட்டி இருந்தது .அதை கஷ்டப்பட்டு வெகுநேரம் கழித்து ஒரு சீப்பால் எடுத்தேன் என்று. இவர் மட்டும் காப்பாற்றப்பட்டு கப்பலில் ஸ்மோக்கிங் ரூமுக்கு அருகிலேயே வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார். அந்த அளவு இவரது கால் பாதிப்படைந்திருக்கிறது . இரண்டு வாரங்களுக்கு நிற்கக்கூட முடியவில்லை. இவரது மகன் ரோசாமூர் கொயர் பாய்ஸாக சர்வீஸ் செய்த க்ரேஸ் எபிஸ்கோபல் சர்ச் இவர் மீண்டு வர உதவியது.இவர் அமெரிக்கா திரும்பிச் செல்லவும் அந்த சர்ச்சே உதவியது.
காதலைப்போன்று வாழ்வின் அனைத்து உன்னதமான உணர்ச்சிகளையும் ஒரு பனிப்பாறை மோதல் அழித்து விடுகின்றது என்பதை காட்டவே இவரை ஒரு கேரக்டராக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காப்டனாக இருந்த எட்வர்ட் ஜான் ஸ்மித்தின் சிகரெட் பெட்டி மிகப் பெரும் தொகைக்கு ஏலத்துக்குப் போனதாம். இது போல வாழ்ந்தவர்கள் பலரை உயிரோடு ஜலசாமாதியாக்கி இருக்கும் டைட்டானிக்கில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு பொருளின் பின்னேயும் ஒவ்வொரு உயிரின் ஸ்வாசமும் அதன் ஸ்பரிசமும் உள்ளது. டைட்டானிக் என்பது மூழ்கினாலும் நம் மனதில் அழிய முடியாத அழிக்க முடியாத பெயராக ., ஒரு துயரின் சரித்திரச் சின்னமாக ஆகிவிட்டது என்பது என்னவோ உண்மை.
டிஸ்கி:- இந்தக் கட்டுரை அக்.2011 லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில் வெளிவந்தது.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.
2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.

தெரியாத தகவல்களை அறியத் தந்துள்ளீர்கள். சுவாரஸ்யமான கட்டுரை தேனம்மை.
பதிலளிநீக்குநல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
நல்ல பதிவு.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
உண்மைக்கதையில் அறியாத தகவல்.
பதிலளிநீக்குஅடேங்கப்பா, நிஜக்கதைக்கும் படக்கதைக்கும் சம்பந்தமேயில்லாம இருக்குதே!! நம்ம ஊர் டைரக்டர்களையே மிஞ்சிட்டாங்களே!! :-)))))))
பதிலளிநீக்குரியல் ரோசாவுக்கும், ரீல் ரோசாவுக்கும்தான் எவ்வளவு வேறுபாடுகள்....
பதிலளிநீக்குஜூப்பர் தகவல்கள் தேனக்கா.
சினிமாவில் பார்த்த ரோஸ் தெரியும். உண்மை வாழ்க்கையில் ரோஸ்க்கு்ப் பின்னணிக் கதை இவ்வளவு இருப்பது இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அருமையான கட்டுரை அக்கா!
பதிலளிநீக்குதகவல்கள் அறியக்கிடைத்தன.
பதிலளிநீக்குநன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி ரத்னவேல் சார்
நன்றி விச்சு
நன்றி ஹுசைனம்மா
நன்றி சாந்தி
நன்றி கணேஷ்
நன்றி மாதேவி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!