புதன், 30 நவம்பர், 2011

வேரோடிக் கிடந்தவை.

மக்கிப்போன ஒரு
சினிமா ஸ்டூடியோ
அதிபரின் விசிட்டிங் கார்டு...
வியாபாரம் படுத்த ஒரு
வெளிநாட்டுத் தந்திக் காயிதம்...
நட்டமாய்ப் போன
பங்குச் சந்தை பத்திரங்கள்...
எந்தக் காலப் பிரபலங்களோ
கறுப்பு வெள்ளையில் கூட்டமாய்...ஒரு பழைய பனை விசிறி
துண்ணூத்து மடல்...
எண்ணெய் சிக்குத் தலையணை...
எப்போதோ கீழே விழுந்து
தைத்த கண்ணிமையின் துகள்...
வெட்டுப்பட்டு மூலையில்
கிடக்கும் நகம்...
மரஸ்டூலில் பொருத்திய
அலுமினியக் கம்மோடு...
கால் நீட்டி அமர வாகான
பிரம்புக் குறிச்சி...

பச்சைச் செடியின்
பால் வாசனையிலேயே
பரிதவித்தும்
முயங்கியும் கிடந்து
கண்ணில் படாத
இதெல்லாம் பட்டு..
பட்டுப் போன
செடியின் வேர்..
வேரோடிக் கிடந்த
அடையாளங்களாய் ..

டிஸ்கி:- இந்தக் கவிதை ஏப்ரல் முதல் வாரம் 2011 உயிரோசையில் வெளியானது.

8 கருத்துகள் :

ராமலக்ஷ்மி சொன்னது…

வேரோடிக் கிடந்த அடையாளங்களாய் கவிதை காட்டியிருக்கும் அனைத்தும் அருமை தேனம்மை.

middleclassmadhavi சொன்னது…

ஆழமான கவிதை! ரொம்ப யோசிக்க வைத்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்

balakavithaigal சொன்னது…

அடையாளங்களை தொலைத்தவர்களுக்கு நினைவூட்டிய தேனம்மைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்

மதுரை சரவணன் சொன்னது…

adaiyaalangkal arumai..vaalththukkal

மங்கையர் உலகம் சொன்னது…

வணக்கம்...
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவீல் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com/

நேசமித்ரன் சொன்னது…

வாழ்த்துகள் தேனம்மை !

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி மாதவி

நன்றி பாலா

நன்றி சரவணன்

நன்றி மங்கையர் உலகம்

நன்றி நேசன்..:)

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...