வியாழன், 3 நவம்பர், 2011

போருக்குப் பின் அமைதி.

சாரட்டா., ஜட்காவா.,
ரிக்‌ஷாவா., ஜெட்டா.,
எல்லா சக்கரமும் ஒண்ணுதான்..
நீ கூட அமர்ந்து வந்தால்..

பறந்து கூட்டிச் செல்கிறாயா..
நடந்து கூட்டிச் செல்கிறாயா என்பதல்ல..
கூட இருந்து கூட்டிச் செல்கிறாயா..


ருசியா இருக்குமென
உண்பாயென நினைத்து
உன் தோட்டக் கனிகளை
அணிலாய்க் கடித்துப் பரிமாறி..

அங்கதம் தெறிக்கும் பேச்சில்
அங்கதன் படை குழப்பிய
வனக்காடாய்...

பேசத் தெரியவில்லை எனக்கு ..
பேசப் பிடிக்கவில்லை உனக்கு.

உன் மௌனம் எது வரை..
அந்த மொழி படிக்கவில்லை நான்..
எதுவும் உரத்துச் சொன்னால்தான் உணக்கை ..

கலிங்கமா., பானிப்பட்டா.,
குருஷேத்திரமா. ..நிச்சயம்
எதுவும் கடந்து போகும்..
உன் அனுசரணையுடன்..

டிஸ்கி:- இந்தக் கவிதை செப்.14.2011 அதீதத்தில் வெளிவந்தது.

16 கருத்துகள் :

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

//பேசத் தெரியவில்லை எனக்கு ..
பேசப் பிடிக்கவில்லை உனக்கு.

//
நல்ல வரிகள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்


தலை, தளபதி மற்றும் புத்தர்

தமிழ் உதயம் சொன்னது…

காதல் துணையை பெருமைப்படுத்திய கவிதை.

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையான மன உணர்வுகளை அழகாகப் பகிர்ந்த கவிதை. ஜூப்பரு தேனக்கா.

கணேஷ் சொன்னது…

இந்த வரி பிடிச்சது, அந்த வரி பிடிச்சதுன்னு எடுத்துச் சொல்ல முடியலையே. மொத்த வரிகளும் அருமை. காதலைப் போல மென்மையாக, இனிமையாக அமைந்திருக்கிறது தேனக்கா...

சே.குமார் சொன்னது…

//பறந்து கூட்டிச் செல்கிறாயா..
நடந்து கூட்டிச் செல்கிறாயா என்பதல்ல..
கூட இருந்து கூட்டிச் செல்கிறாயா..//

//கலிங்கமா., பானிப்பட்டா.,
குருஷேத்திரமா. ..நிச்சயம்
எதுவும் கடந்து போகும்..
உன் அனுசரணையுடன்..//


கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள் அக்கா.

ஹேமா சொன்னது…

காதல் அருகில இருந்தால் எல்லாம் இப்பிடித்தான் ஆகிறது தேனக்கா.அனுபவம் !

அ. வேல்முருகன் சொன்னது…

கூடவே இருப்பது
குதுகலம்தான்

சிலநேரங்களில்
சுமையென பட்டால்
கலிங்கமோ, பானிப்பட்டோ........

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//ருசியா இருக்குமென
உண்பாயென நினைத்து
உன் தோட்டக் கனிகளை
அணிலாய்க் கடித்துப் பரிமாறி..
//

//
பேசத் தெரியவில்லை எனக்கு ..
பேசப் பிடிக்கவில்லை உனக்கு.

உன் மௌனம் எது வரை..
அந்த மொழி படிக்கவில்லை நான்..//


உணர்வுகளை வெளிப்படுத்தும் ஜோரான வரிகள். பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல கவிதை.

/எதுவும் கடந்து போகும்..
உன் அனுசரணையுடன்../

அருமை தேனம்மை:)!

உலக சினிமா ரசிகன் சொன்னது…

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பேசத் தெரியவில்லை எனக்கு ..
பேசப் பிடிக்கவில்லை உனக்கு.

அனுசரணையான பகிர்வு. பாராட்டுக்கள்>.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜா

நன்றி ரமேஷ்

நன்றி சாந்தி

நன்றி கணேஷ்

நன்றி குமார்

நன்றி ஹேமா

நன்றி வேல்முருகன்..!

நன்றி கோபால் சார்

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி உலக சினிமா ரசிகன்

நன்றி ராஜி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Selvam Muniyandi சொன்னது…

you kavithai lines are simply super. i written some tamil kavithai. please check and give ur comments

http://alanselvam.blogspot.com/

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி செல்வம்..;)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...