எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 நவம்பர், 2011

பதின்பருவ பி்ள்ளைகளின் அம்மா..

அற்புதம்தான்..
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது..!

கொஞ்சம் கொஞ்சல்
கொஞ்சம் பொய்
கொஞ்சம் உரைத்தல்
கொஞ்சம் மறைத்தல்


எல்லாம் உணர்ந்தும்
அற்புதம்தான்..
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது..!

படபடவென்று
சண்டையிடும்போதும்
பக்கத்தில் வராதேயென
தூக்கி எறிந்து பேசும்போதும்

அற்புதம்தான்..
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது..!

போர்வைக்குள் மறைந்து
பின்னிரவுவரை
கதைத்தாலும்
பீருக்குள் கரைந்து
பின்னிருக்கையில் தடுமாறிவந்து
வதைத்தாலும்

அற்புதம்தான்..
வளரும் பிள்ளைகளின்
அம்மாவாய் இருப்பது..!

உள் வைத்து உணவூட்டியது
போல் எளிதில்லை
வெளியில் உணர்வூட்டுவது.
என்றாலும்

வயிற்றில் சுமந்தவள்
மேலேற்றும் கவலையோடு
மனதிலும் சுமக்கிறாளென
உணர்ந்தால் தெரியும்...

அற்புதம்தான்..
பிள்ளைகளே...
அம்மா எப்போதும்..!

டிஸ்கி:- இந்தக் கவிதை 2011 செப்டம்பர் நம்தோழியில் வெளிவந்துள்ளது.

11 கருத்துகள்:

  1. அற்புதம் தான். உங்கள் கவிதைகள் எப்போதும்.

    பதிலளிநீக்கு
  2. மகனிடம் என்ன குறைகளைக் கண்ட போதிலும் அவனை மனதில் சுமப்பவள் தாய். தாய்மையின் தத்துவம் அருமையான கவிதையாக வெளிப்பட்டுள்ளது. சூப்பர்ப்...

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. தேனக்கா,

    அற்புதமே தாயும், பிள்ளையுமாய் இருத்தல்.

    பதிலளிநீக்கு
  5. குழந்தைகளின் குறைகள் அம்மாக்களின் கண்ணுக்கு தெரியறதேயில்லை :-)

    பதிலளிநீக்கு
  6. வழக்கம் போல கவிதை அழகு, கலக்கல், வாழ்த்துக்கள் தேனம்மை...!!!

    பதிலளிநீக்கு
  7. அனுபவித்துச் சொல்கிறேன்.. அருமை!

    பதிலளிநீக்கு
  8. நன்றி கோபால்

    நன்றி சாந்தி

    நன்றி மனோ.

    நன்றி மாதவி

    நன்றி பாமா

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...