எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2011

சிரசாமிர்தம்...

சிரசாமிர்தம் வேண்டி
மந்தாரமலை பிடித்து

ஆதிஷேஷன்.,
வாசுகி தேடி..

கார்கோடகன்
காளிங்கன் தீண்டி

பதஞ்சலியைச்
சரணடைந்தேன்


குண்டலினியை
மேலெழுப்ப..

மனமோஹினி பகிர்ந்து
சிரசும் உடலும் துண்டாய்

ராகுவும் கேதுவுமாய்
காமமும் ஞானமுமாய்..

பல்லாயிரம் தலையோடும்
தளையோடும் தினம் உயிர்த்து..

சொட்டுச் சொட்டாய்
வடிகிறது சிரச்சேதமாய்

டிஸ்கி:- இந்தக் கவிதை மார்ச் 2011., உயிரோசையில் வெளிவந்தது.

6 கருத்துகள்:

  1. விஷ்ணு மோகினிக்குப் பதில் மனமோகினியால் சிரசும் உடலும் துண்டாகி தினம் உயிர்த்து சொட்டுச் சொட்டாய் வடிவது அமிர்தம் அல்லவே தேனக்கா... இப்படியொரு உருவகக் கவிதை படித்து நாளாயிற்று. நிறைவு தந்தது.

    பதிலளிநீக்கு
  2. நன்றி..
    அப்படியே கொஞ்சம் நம்ம கடைக்கும் வாங்க
    http://mydreamonhome.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. அருமை அக்கா.. வித்தியாசமாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. நன்றி கணேஷ்

    நன்றி வினோத்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி அமல்ராஜ்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...