செவ்வாய், 29 நவம்பர், 2011

டாக்டர் ஆக முடியாத டாக்டர் ..ஆஸ்வின் ஸ்டான்லி ( போராடி ஜெயித்த பெண்கள்)

ஒரு பெண் படித்திருந்தால் எத்தனை டிகிரி வாங்கி இருக்கலாம். ஒன்று., அல்லது இரண்டு., அதிகபட்சம் மூன்று முதல் ஐந்து வரை இருக்கலாம்.. ஆனால் கன்யாகுமரி கரும்பாட்டூரைச் சேர்ந்த ஆஸ்வின் ஸ்டான்லி கிட்டத்தட்ட 9 டிகிரிகள் படித்திருக்கிறார்.. டாக்டராக ஆசைப்பட்டு ப்ளஸ்டூவில் சரியாக செய்யாததால் டாக்டர் படிக்க முடியாமல் இருந்தும் பி ஹெச்டி படித்து டாக்டராகி சாதனை நிகழ்த்தியுள்ளார்..

அப்பா ஸ்டான்லி சுபமணி., அம்மா அமலா பேபி., ஒரு தங்கை ஒரு தம்பி எனக் கொண்ட இவர் குடும்பம் மிகுந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவக் குடும்பம். இரவில் பைபிள் படித்து கூட்டு ஜெபம் செய்துதான் தூங்கச் செல்வார்கள். அப்பா தற்போது இல்லை. அவர் பிஸிகல் எஜுகேஷன் டீச்சராக இருந்தார். அம்மா . தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அக்கவுண்டன் சுப்பரிண்டெண்ட் ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மத நம்பிக்கை அதிகம் உள்ள குடும்பம் என்பதால் சினிமா ட்ராமா ஒன்றும் செல்வது கிடையாது.கதை புத்தகம் கூட படிப்பது கிடையாது. ஸ்ட்ரிக்ட் ரிலிஜியஸ் குடும்பம்.


இவர் பத்தாம் வகுப்பு வரை நாகர்கோயில் டத்தே பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயின்றிருக்கிறார். ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ அல்லாசியஸ் பெண்கள் மேல் நிலைப் பள்ளியிலும்., பி எஸ்சி., செயிண்ட் மேரீஸ் காலேஜ் தூத்துக்குடியிலும்., எம் எஸ்சி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றிருக்கிறார்.

எம் பில் கடல்வாழ் உயிரியல் ஆராய்ச்சி நிலையம் பரங்கிப்பேட்டையிலும்.., ( CENTRE OF ADVANCED STUDY IN MARINE BIOLOGY ) ( IN MARINE BIOLOGY AND OCEANOGRAPHY ) பி ஹெச் டி தஞ்சாவூர் பூண்டி புஷ்பம் ஆண்கள் கல்லூரியிலும் ( கிட்டத்தட்ட 4000 ஆண்கள் உள்ள கல்லூரியில் ஒரு பெண்ணுக்கு அட்மிஷன் கிடையாது என மறுக்கப்பட்ட போது போராடி சீட் வாங்கி ) படித்திருக்கிறார்.

யூ சி ஜி ஒரு மாத ப்ராஜக்டாக முத்துப்பேட்டை காடுகளில் பி ஹெச்டி ( சர்வே ஆஃப் நேச்சுரல் ரிசோர்சஸ்) செய்திருக்கிறார். பின் எம் எஸ் படித்து என் ஜி ஓ ரீஜனல் ப்ரோக்ராம்., ஆஃபீசராகப் பணியாற்றி இருக்கிறார்.. (HANDLING ALL THE POSTAL DEVELOPEMENT PROJECT ).

இவருடைய அம்மா தவிர அனைத்து உறவினர்களும் டீச்சராக இருந்ததால் இவருக்கு டீச்சராக விருப்பம் இல்லை. எனவே டாக்டராக நினைத்தார். ப்ளஸ்டூவில் குறைவான மதிப்பெண் வாங்கியதும் அனைத்து உறவினர்களும் பேபியின் பொண்ணு டாக்டராக வருவான்னு நினைச்சோம். டீச்சராகவாவது வருவாளா என கிண்டலடிக்க.. அதுவரை வகுப்பு தோறும் 100/100 மதிப்பெண் வாங்கிய இவர் தன் சொந்தக்காரர்களிலேயே மிக அதிகமாகப் படித்துவிட வேண்டும். அதுவும் யாரும் படிக்காத துறையில் டாக்டரேட் பட்டம் வாங்க வேண்டும். மிக அதிக அளவில் டிகிரிகள் வாங்க வேண்டும் என்றுதான் 9 டிகிரிகள் வாங்கும் வரை உறுதியோடு போராடிப் படித்துள்ளார்.

எனவே மரைன் பயாலஜி எடுத்துப் படித்தார். பிஎட் வரை 9 டிகிரிகள் படித்து உறவினர்களிலேயே அதிகம் படித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு..

மெரைன் பயாலஜியில் ப்ளான்க்டான்ஸ் -- நுண்ணுயிரிகள் பற்றிப் படிக்க வேண்டி வந்தது. மைக்ரோஸ்கோப் என்றாலே பிடிக்காத இவர் 3 மாதம் கழித்து ரீரெஜிஸ்டர் செய்து மாங்க்ரோவ் போன்சாய் ஆராய்ச்சியை செய்தார். அதுவும் லாபில் மட்டுமே செய்ய வேண்டி வந்ததால் 3 மாதம் கழித்து திரும்ப ரெஜிஸ்டர் செய்து எக்காலஜி எடுத்துப் படித்தார். ஹில்செ எனப்படும் சின்ன போட்டில் 5., 6 பேர் சென்று ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒரிடத்தில் போட் நகராததால் அனைவரும் இறங்கித் தள்ள இவரும் தள்ளி இருக்கிறார். அப்போது சிப்பி காலில் அறுத்து அங்கங்கு ரத்தம் வடிய ஆரம்பித்தது. பெண்களுக்கு சிரமமாய் இருக்கக்கூடும் என்பதால்தான் ஆராய்ச்சிக் கூடத்துக்குள்ளேயே ஆராய்ச்சி செய்யும் பணிகள் வழங்கப்படுவதாக ஆசிரியர் சொன்னவுடன் இவர் அதை எல்லாம் தாங்கி கற்றுக் கொள்ள வேண்டும் என உறுதியாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பிச்சாவரத்தில் 24 வகையான செடிகளில் முக்கியமான் 10 செடிகளைத் தேர்வு செய்து அவற்றின் வளர்ச்சியை ஆராய்ந்திருக்கிறார். வெளிச்சம் உள்ளபோது.,, வெளிச்சம் இல்லாதபோது., க்ளோரோபில் எப்படி யுவி ரேடியேஷனை உறிஞ்சுகிறது என அனலைஸ் செய்திருக்கிறார். , எம் பில் டிகிரிக்காக.

முத்துப்பேட்டை காட்டில் 93-97 இல் முடித்தபோது அது ஒரு பைபிளைப் போன்று இருந்தது என குறிப்பிடுகிறார். மண்., தாவரங்கள்., நண்டு., நத்தை., மீன்., இறால்., என நீர் வாழ்விலங்கு மற்றும் அதன் சூழல் குறித்த முழுமையான பகிர்வாக இருந்திருக்கிறதுது. 5 வருடம் படித்து நல்ல தீசிஸ் செய்திருக்கிறார். மாங்குரோவ் காடுகளில் இறால் வளர்ப்பு மூலம் உண்டாகும் கழிவுகளைக் கட்டுப்படுத்துவது பற்றி கண்டுபிடித்திருக்கிறார்.

சீர்காழி பெருந்தோட்டத்தில் நட்டு இறால் பண்ணையை நிர்மாணித்து கண்காணித்தபோது அது பண்ணையில் நீர்க்கசிவு இல்லாமல் இருந்தது மற்றும் எக்ஸ்ட்ரா ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட் ஆக இருந்தது.

2010 இல் ICAR INDIANCONCIL FOR AGRICULTURAL RESEARCH AWARD வழங்கப்பட்டது., இது போல இறால் பண்ணைகளின் கழுவுகளைக் கட்டுப்படுத்தியமைக்காக. இவர் பரிந்துரைத்த படி BISMI PRAWN FORUM இன்று வரை இதே போல செயல்படுவதால் இயற்கையோடு ஒத்து இருப்பதால் மிகவும் வெற்றிகரமாக செயல்படுவதாக சொன்னார். மற்றவை நன்னீர்க் காடுகளிலும்., மணல் திட்டுக்களிலும் நட்டு வைப்பதால் சீக்கிரம் அழிந்து விடுகின்றன் அல்லது சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன என்றார்.

முத்துப்பேட்டையில் பரி & சார் முறையில் கனால்கள் நன்கு பராமரிக்கபட்டு ட்ரெடிஷனல் கியர் முறையில் இறால் பிடிக்கப்படுவதாக கூறினார். ஃபிஷ் & போன் டெக்னாலஜியில் மொத்த கனாலும் மூழ்கி விருவதாக சொன்னார். சதுப்பு நிலக்காடுகள் முழுவதும் மூழ்கி இருக்கும் என மக்கள் நினைப்பது போல் அல்லாமல் 30 சதவிகிதம் தான் மூழ்கி இருக்கும் மீதி 70 சதவிகிதம் எக்ஸ்போஷராகத்தான் இருக்கும் என சொன்னார்.

குஜராத்தில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெசர்ட் எக்காலஜி யில் 2 வருடம் வேலையும் ஆராய்ச்சியும் செய்து சலைன் லாண்ட் டெவலப்மெண்ட் ., சைட் ஸ்பெசிஃபிகேஷன் சொல்யூஷன் மூலம் வளார்ச்சிக்குத் துணை புரிந்துள்ளார். ஸ்ரீலங்கா., தாய்லாந்து., சிங்கப்பூர்., மலேஷியா ., இந்தியா ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார்.

தற்போது எக்கோ பாலன்ஸ் கன்சல்டன்ஸி மூலம் பரோடாவில் ஃப்ரீலான்ஸிங்கா தன்னுடைய பணியை செய்து வருகிறார். நவி மும்பை ஏர்ப்போர்ட் இல் ஆஃபிஷியல் கன்சல்டண்டாகவும் காரைக்கால் ஏர்ப்போட்டிலும் ஏர்ப்போர்ட் கன்சல்டண்ட் ஆகவும் செயல்படுகிறார்.

மாங்க்ரோவ் என்பது 4 செடிகளை ஊன்றுவதில் இல்லை, மொத்தமாக சதுப்பு நிலப்பாதுகாப்பு செய்ய வேண்டும். அதுவே நம்ம எக்கோ சிஸ்டத்துக்கு நல்லது என்று கூறிய அவரிடம் அவர் பணி சிறக்க வாழ்த்தி விடைபெற்றோம் .

7 கருத்துகள் :

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

காலை வணக்கம், அடுத்த பதிவாக நீங்க எழுதி படைப்புகள் வராத பத்திரிக்கை ஏதாவது இருக்கா? என பதிவு போடவும் ஹி ஹி பை ஒய் திஸ் கொலை வெறி ரசிகர் மன்றம் ஹி ஹி

ராமலக்ஷ்மி சொன்னது…

நல்ல பகிர்வு தேனம்மை. நன்றி.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க...

அமைதிச்சாரல் சொன்னது…

வாசிக்கவே ரொம்ப சந்தோஷமா இருந்தது தேனம்மை. மத்தவங்க முன்னாடி சாதிச்சுக் காட்டிட்டாங்க.

middleclassmadhavi சொன்னது…

சாதனைப் பெண்ணைப் பற்றிய ஆச்சரியப் பதிவுக்கு நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி சிபி

நன்றி ராமலெக்ஷ்மி

நன்றி பிரகாஷ்

நன்றி சாந்தி

நன்றி மாதவி.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...