
திருமண நாளன்று மாலை மாற்றும் நிகழ்வின் போது என் அக்கா பின்னாலிருந்து என்னை இழுத்து விட ,மாலை போட வந்தவர் தடுமாற, விழுந்துவிடப் போகிறார் என நான் பிடித்து விட்டேன், அதற்கு பாரு பாரு புருஷனை விட்டுத் தராம இப்பவே தாங்கி பிடிக்கிறாள் என்று கேலி செய்தனர். முதலிரவு அறையில் கதவை மூடிவிட்டார்கள் என்று நான் நினைத்துக்கொண்டு ஏன் இப்படி சோர்வாக இருக்கிறீர்கள் என்று கேட்க,உன்னை பார்க்கப்போகிறோம் என்று நினைத்தவுடன், பயத்தால் காய்ச்சல் வந்து விட்டது என கிண்டலாக அவர் கூற, கதவின் பின்னாலிருந்து என் உறவினர்களின் சிரிப்பொலியும், பார்த்துமா ஏற்கனவே காய்ச்சல்ல இருக்கரவருக்கு ஜன்னி வர வச்சிடாத என நகைப்புடன் கூற, வெட்கத்தால் தலை குனிந்தேன். முதலிரவு அறைக்கு வெளியில் கிருஷ்ணனின் ராச லீலை பாடல்களை பாடி கும்மி அடிப்பது,எங்கள் சம்பிரதாயம்.இந்த சடங்கிற்கு அச்சா பங்கம் தட்டுதல் என்பது பெயர்.
ரஞ்சனா கிருஷ்ணன்.

நல்ல நகைசுவை
பதிலளிநீக்குஇன்று என் வலையில்
பதிலளிநீக்குகவிதைவீதி செளந்தர்க்கு போட்டியாக ஒரு பதிவு
மாப்பிள்ளைக்குக் காய்ச்சல் சரியாப் போச்சா;)
பதிலளிநீக்குநன்றி ராஜா..
பதிலளிநீக்குநன்றி வல்லிசிம்ஹன்..
இத்தனை வருஷம் ஆச்சே .. நிச்சயமா காய்ச்சல் குணமாகி இருக்கணும்..:)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!