எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 நவம்பர், 2011

ஒளிந்து பிடித்தல்...

ஒற்றைச் சாரளம் வழி
வெண்துண்டாய் விழும் நிலவை
உண்டபடி பிரயாணிக்கும் கண்கள்..

கீற்றாய்ப் பிரிக்கும்
ஜன்னல் கம்பிகளிலிருந்து
மீனாய் உருவுகிறது நிலவை.


விழுங்க விழுங்க நழுவிச்
செல்லும் நிலவு பிடித்து
நடுநிசியில் ஒரு கண்ணாமூச்சி.

பச்சைத் தண்ணீராய்க்
கிடக்கும் தரையில்
சோப்பு நுரையாய் நிலவு.

நதி நீராய் நுரை
அலசிச் செல்கிறது
படிவழி வழிந்து தழுவும் காற்று..

மஞ்சள் வெய்யில் குடித்து
பச்சை துப்பிய மரங்கள்
பாலருந்திக் கிடக்கின்றன..

கருஞ்சட்டியிலிருந்து
பாலமுது பெருகி களைத்த கண்களை
கழுவிச் செல்கிறது.

தேயும் ஒளியோடு ஒளியும் நிலவு
மறுநாளும் தவழ்ந்து வருகிறது
ஒளிந்து பிடித்து விளையாட..

டிஸ்கி:- அக்டோபர் 20, 2011 அதீதம் தீபாவளிச் சிறப்பிதழில் வெளியானது.

13 கருத்துகள்:

  1. \\தேயும் ஒளியோடு ஒளியும் நிலவு
    மறுநாளும் தவழ்ந்து வருகிறது
    ஒளிந்து பிடித்து விளையாட..//

    அருமை மேடம்.

    பதிலளிநீக்கு
  2. பச்சைத் தண்ணீராய்க்
    கிடக்கும் தரையில்
    சோப்பு நுரையாய் நிலவு.//எவ்வளவு ரசித்து எழுதி இருக்கீங்க தேனு!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. நிலவோடு விளையாட பிடிக்காமல் போகுமா?

    பதிலளிநீக்கு
  4. ரசனையிலும் வித்தியாசமான கண்ணோட்டம் கொண்ட வரிகள் ஒளிந்து பிடித்து விளையாடி உறவு கொள்கிறது.பகிர்விற்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
  5. விழுங்க விழுங்க நழுவிச்
    செல்லும் நிலவு பிடித்து
    நடுநிசியில் ஒரு கண்ணாமூச்சி.

    -மிக ரசிக்க வைத்த வரிகள். நிலவு என்றும் ரசனைக்குரிய விஷயம்தான். கவிதையை ரசித்ததைப் போலவே அழகாக, பொருத்தமாக நீங்கள் வைத்திருக்கும் படத்தையும் ரசித்தேன். பிரமாதம்க்கா...

    பதிலளிநீக்கு
  6. அதீதத்தில் வாசித்து மிகவும் ரசித்த கவிதை:)!

    பதிலளிநீக்கு
  7. ஒளிந்து பிடித்தல்...அதுவும் நிலவோடு !

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஸாதிகா.

    நன்றி ரமேஷ்

    நன்றி ராஜி

    நன்றி சாந்தி

    நன்றி கணேஷ்

    நன்றி சிநேகிதி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி குமார்

    நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...