எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 18 அக்டோபர், 2010

வட்டங்கள் இறக்கிய கிணறு..

வட்டங்கள் இறக்கிய கிணறு...
வட்டச் சிற்றலைகளுடன்..

மழைத்துளி உண்ணும்
சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..

சில படிக்கட்டுகளோடும்..
சில பாழடைந்தும்..
சில குப்பைகளோடும்...
சில வாழ விரும்பாதவர்களோடும்..


தோண்டித் தூரெடுத்தால்
ஊற்றாயும் ..
வாழ்வின் சாறாயும்..

சுவரோரமாய்ப் பாசங்களும்..
செங்கல் பெயர்ந்த தடங்களும்..
பசலையும்.. தீயின் வடுவுமாய்..
ரகசியங்கள் உறைந்து..

தவளைகளும் .. சில மீன்களும்..
தொலைத்த பொருட்களும்..
தொலைய நினைத்த மனிதர்களும்..

பம்புசெட்டும் .. கீரைப் பாத்திகளும்..
உயிர்தழுவும் உன்னதக் காற்றும்..
உயிர்ப் பயிர்களின் தலையசைப்பும்..

காற்றும் நீரும் கலவி...
லயமும் சரமுமாய்...
இரைக்க.. இரக்க..
இறைத்து .. இரைந்து..

சகடைச் சத்தங்களும்
வாளியின் முத்தங்களும்..
ஆள்துளையின் இயந்திர
நாதங்களும்.. சந்தங்களும் சுமந்து..

வலை வீச முடியாது ..
கல்லெறியலாம்..
எல்லாம் விழுங்கி
மெல்லலைகளுடன்
வட்டங்கள் இறக்கிய கிணறு..

டிஸ்கி.. 1 .. :- இது அக்டோபர் 17 ., 2010 திண்ணையில் வெளிவந்துள்ளது .
டிஸ்கி.. 2.. :- என் அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா..

28 கருத்துகள்:

  1. //வலை வீச முடியாது ..
    கல்லெறியலாம்..
    எல்லாம் விழுங்கி
    மெல்லலைகளுடன்
    வட்டங்கள் இறக்கிய கிணறு..//

    சின்ன வயதில் வீட்டிலிருந்த கிணற்றின் நியாபகம் வந்து போகிறது அக்கா.. அருமை

    பதிலளிநீக்கு
  2. கிணறு தோண்ட பூதம் வரும் என்பார்கள் ஆனா இப்படி கவிதை பாடி மகிழ்வித்துல்லீர்கள் கிணற்றை..........

    அருமையான பதிவு........

    பதிலளிநீக்கு
  3. அழகு க‌விதை..அம்மாவிற்கு வாழ்த்துக்க‌ள்..அதென்ன சும்மாவின் அம்மா..பேரை பார்த்த‌துமே சிரிப்பு தாங்க‌ல‌..ரொம்ப‌த்தான் லொள்ளு..

    பதிலளிநீக்கு
  4. வட்டங்கள் இறங்கிய கிணறு

    அருமை

    பதிலளிநீக்கு
  5. திண்ணையில் வாசித்ததுமே மிகப் பிடித்துப் போனது இக்கவிதை..
    //வலை வீச முடியாது ..
    கல்லெறியலாம்..
    எல்லாம் விழுங்கி
    மெல்லலைகளுடன்//

    அருமை தேனம்மை.

    பதிலளிநீக்கு
  6. எல்லாவற்றையும் கவிதையாக்க உங்களால் மட்டும் முடியும்... அதுவும் அழகாக.

    பதிலளிநீக்கு
  7. என் அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா..


    .....அப்படி போடுங்க!!!!! சூப்பர்! கண்டிப்பாக போய் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. நல்லா இருக்குங்க தேனம்மை.அதைவிட சும்மாவின் அம்மா ..பேஷ் பேஷ்

    பதிலளிநீக்கு
  9. விவசாய வீழ்ச்சியின் படிமமாக கருதுகிறேன்

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  10. மிக அருமையான கவிதை......வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. நன்று. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. / ரகசியங்கள் உறைந்து.. /

    உண்மை தாங்க...

    பதிலளிநீக்கு
  13. //வலை வீச முடியாது ..
    கல்லெறியலாம்..
    எல்லாம் விழுங்கி
    மெல்லலைகளுடன்//

    எழுத, எழுத சுரக்கும் கவிதை...
    அழகு.

    பதிலளிநீக்கு
  14. //கல்லெறியலாம்..
    எல்லாம் விழுங்கி
    மெல்லலைகளுடன்
    வட்டங்கள் இறக்கிய கிணறு..//

    அருமையான
    கவிதை..
    அம்மாவின் புது வலைத்தளம் சும்மாவின் அம்மா படித்தேன். நல்லா இருக்குங்க..வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. அருமையான கவிதை..!
    நல்லா இருக்கு அக்கா.

    பதிலளிநீக்கு
  16. அழகாக எழுதி இருக்கிறீர்கள். அம்மாவின் வலைத்தளத்துக்கு 'சும்மாவின் அம்மா' பெயரை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  17. அழகா அழகா வரிகள், அத்தனையும் அழகு தேனு. அதிலும் உங்க வீட்டில் எங்கு உடகார்ந்தாலும் கவிதை தேனாய் காதில் விழும் என்று நினைகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான வரிகளில் அழகிய கவிதை தேனம்மை

    பதிலளிநீக்கு
  19. நல்லா இருக்கு...அக்கா..
    அம்மாவிற்கு நல்வரவு...மற்றும் வாழ்த்துக்கள்.. :-))

    பதிலளிநீக்கு
  20. நன்றாக இருக்கிறது தேனம்மை...
    ஆனால்
    ###மழைத்துளி உண்ணும்
    சாதகப் பட்சியாய் வாய் பிளந்து..###

    இது போன்ற வரிகள்
    பல இடங்களில் வருவது
    ஒரு சலிப்பையும் ஒரெமாதிரியான
    தன்மையையும் ஏற்படுத்துகிறது..
    அதை உங்களின் "பாணி" என்று
    எடுத்துக்கொண்டாலும்கூட...

    ###வலை வீச முடியாது ..
    கல்லெறியலாம்..
    எல்லாம் விழுங்கி
    மெல்லலைகளுடன்
    வட்டங்கள் இறக்கிய கிணறு..###

    இந்த இடம் அழகாக உள்ளது.
    அந்த பத்தி ஒரு முழுமையைத்
    தொடுகிறது....
    இது போலப் பல வடிவங்களில்
    கவிதையின் உள்ப்பத்திகள்
    அமைந்தால் இன்னும் அருமையாக
    இருக்கும்...வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  21. நன்றி சசி., பாலாஜி., செந்தில்., வெறும் பய., டி வி ஆர்., வி ஆர்., தினேஷ்., சை கொ ப., அஹமத்., வேலு., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., தேவன்., சித்ரா., பத்மா., அமைதிச்சாரல்., விஜய்., நித்திலம்., வினோ., வசந்த்., அம்பிகா., ஜிஜி., குமார்., ஸ்ரீராம்., விஜி., சக்தி., ஆனந்தி., ஹரி

    பதிலளிநீக்கு
  22. நன்றி சசி., பாலாஜி., செந்தில்., வெறும் பய., டி வி ஆர்., வி ஆர்., தினேஷ்., சை கொ ப., அஹமத்., வேலு., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., தேவன்., சித்ரா., பத்மா., அமைதிச்சாரல்., விஜய்., நித்திலம்., வினோ., வசந்த்., அம்பிகா., ஜிஜி., குமார்., ஸ்ரீராம்., விஜி., சக்தி., ஆனந்தி., ஹரி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...