எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 அக்டோபர், 2010

விட்டிலாயிராமல் விலகியிரு...

மின்சாரமற்ற பொழுதுகளில்
மின்சார உற்பத்தியானில்
எரிப்பான் அற்ற நேரங்களில்..

கும்மிருட்டு மூலையில் கிடந்த
என்னைத் தேடி எடுத்து
ஒளிர்ப்பானில் பற்றவைத்த போது..

உணர்ந்தேன்.. உன் கைகளில்..
பஃப்களின் வெண்குழல் வத்திகளும்
புளித்த பார்லித் தண்ணீரின் வாசமும்..


உன் கை பட்டதால்
உணர்வற்று உருகிக் கொண்டிருந்தேன்..
சொட்டுச் சொட்டாய்..
உனக்காயும் எனக்காயும் ..

ஒளிர்ந்து கொண்டிருந்தேன்..
வேறு எந்த உபயோகமுமற்று..
நம் இருவரின் இருப்பை
உணர்த்த மட்டுமே..

ஒளியீர்ப்பு விசையாய்
என் புன்னகை பட்டு
ஒளிர்ந்து கொண்டிருந்தது
உன் கண்கள்..

இருட்டில் நவ்வாப்பழமாய்
உன் கண்கள் கனிந்து
கசிந்து கொண்டிருந்தன அன்பில்..

ஒரு விட்டிலைப் போல
உருமாறிக் கொண்டிருந்தாய்.. நீ...
வினோத தாகம் ஆட்கொள்ள..

இறகுகள் சடசடக்க என் மேல்
மோதிப் பற்றியெரியும்
ஆவலில் பறக்க யத்தனித்தாய்..

உன் நலம் மட்டுமே நாடும் நான்
என்னைச் சுற்றிச் சுழன்ற
காற்றைப் பற்றி இழுத்துப்
போர்த்துக் கொண்டேன்..

ஒளிந்த என்மேல் விழுந்த நீ
வெம்மையை உணர்ந்திருந்தாய்..
ஆயினும் உயிர்த்திருந்தாய்..

மரித்து விடாமல் உயிர்த்திரு
விட்டிலாயிராமல் விலகியிரு..
எல்லா விளக்குகளிடமிருந்தும் ...

டிஸ்கி ..1..:- இது அக்டோபர் 10 ம் தேதி திண்ணையில் வெளிவந்துள்ளது..

டிஸ்கி..2..:- இதை எழுத தூண்டிய அபுல் கலாம் ஆசாதின் எரியும் திரி...(எதிர் கவுஜயா.’. இல்லையான்னு சொல்லுங்கப்பா..:))))

டிஸ்கி..3..:- அபுல் கலாம் ஆசாத் ஜியின் உம்ரோ ஜானின் திரைச்சீலை யும் என் மனம் கவர்ந்த ஒன்று.. அதன் மறுமொழியும்தான் இது..

28 கருத்துகள்:

  1. அருமை வாழ்த்துக்கள் அக்கா, திண்ணை மட்டுமின்றி வீட்டின் அனைத்து பகுதியிலும் உங்கள் கவிதைகள் வெளிவர வாழ்த்துக்கள். ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் அக்கா!! அருமையான கவிதை!!

    பதிலளிநீக்கு
  3. நல்லாதான் இருக்கு,உங்க எதிர் மொழி.

    பதிலளிநீக்கு
  4. மரித்து விடாமல் உயிர்த்திரு
    விட்டிலாயிராமல் விலகியிரு..
    எல்லா விளக்குகளிடமிருந்தும் ...

    ஆழமான வரிகள் தேனக்கா

    பதிலளிநீக்கு
  5. அருமை...அருமை.. சகோதரி. நான் இன்னும் அபுல் கலாம்ஜியின் கவிதை வாசிக்கவில்லை......வாசித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  6. அருமை...அருமை.. சகோதரி. நான் இன்னும் அபுல் கலாம்ஜியின் கவிதை வாசிக்கவில்லை......வாசித்துவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. மரித்து விடாமல் உயிர்த்திரு
    விட்டிலாயிராமல் விலகியிரு..
    எல்லா விளக்குகளிடமிருந்தும் ...


    .....அக்கா, நல்ல கருத்துடன் உங்கள் கவிதைகள், நாளுக்கு நாள் மெருகு ஏறி கொண்டே வருகிறது. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அம்மா
    விட்டிலாயிராமல் விலகியிரு.......

    தலைப்பே கவி படுகிறது.....

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அம்மா
    விட்டிலாயிராமல் விலகியிரு.......

    தலைப்பே கவி படுகிறது.....

    பதிலளிநீக்கு
  10. தனிதமிழ் வளத்தமிழ் கவிதை
    வாசிக்க வாசிக்க அருமை

    பதிலளிநீக்கு
  11. இரண்டு முறை படித்துவிட்டேன்.. அருமை அக்கா ( சக்தியின் வழி :) )

    பதிலளிநீக்கு
  12. உருவகம் எல்லாம் புதுசு,புதுசா இருக்குப்பா...ம்.. நானும் இப்படி எழுதணும்னு தான் பார்க்கிறேன்..முடியலேயே..
    பாராட்டுக்கள்....

    பதிலளிநீக்கு
  13. நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
    மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

    பதிலளிநீக்கு
  14. என்னைச் சுற்றிச் சுழன்ற
    காற்றைப் பற்றி இழுத்துப்
    போர்த்துக் கொண்டேன்..//
    கற்பனை செய்தேன் அழகாக இருந்த வரிகள்.
    இழுத்து போர்த்தும் போது விட்டிலினிடம் இருந்தும்
    தப்பிக்க வேண்டும்.
    விளக்கும் அணைந்து விடக் கூடாது.
    அது தான் சாதுர்யம்.

    பதிலளிநீக்கு
  15. திண்ணையில் வெளியானதற்கு பாராட்டுக்கள்.

    எல்லா வரிகளுமே அழகு.

    பதிலளிநீக்கு
  16. பாராட்டுக்கள்! திண்ணையில் கவிதை வெளியானதற்கு. கவிதை நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
  17. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்கள் அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு ஒவ்வொரு வாரமும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில்
    ஜீஜிக்ஸ் அதிகம் பார்க்கப்பட்ட சமுதாய, பொழுதுபோக்கு நோக்கோடு எழுதும்
    தலை சிறந்த எழுத்தாளர்களை ஊக்குவித்து வாரம் 500 பரிசும் தருகிறார்கள் .உங்களுடைய சக ப்ளாகர்ஸ் நிறைய பேர் பரிசும் பெற்றிருகிரார்கள் .(இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில்
    வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி) இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம் .ஜீஜிக்ஸ் தளத்தை பற்றிய ஒரு ப்ளாகரின் விமர்சனத்தை காண இங்கே கிளிக் செய்யவும் http://adrasaka.blogspot.com/2010/08/500.html

    பதிலளிநீக்கு
  18. கவிதை நடை அற்புதம்
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. நன்றி சசி., மேனகா., அருணா., ஆசியா., சக்தி., முத்து., சித்ரா., தினேஷ்., வெறும்பய., சரவணன்., யாதவன்., பித்தனின் வாக்கு., வினோ., காஞ்சனா., ஆர் ஆர் ஆர்., ஈவா., ரூஃபினா., ஸ்ரீராம்., ஆகாய மனிதன்., தியா., குமார்., ஜிஜி., ஸ்வேதா., இந்திரா..

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...