எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..

உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..

சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..



மலை வீட்டின் கணப்பாய் உனது முத்தம்.. குளிர் கட்டைகளை எரித்து அருகேயே அமர்ந்திருக்கிறேன் .. அதிக கதகதப்புக்காய்..

புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..

முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
தேனற்ற பூக்கள் உண்டா,,?

33 கருத்துகள்:

  1. //புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் ..//

    சூப்பரோ சூப்பர்.

    பதிலளிநீக்கு
  2. //தேனற்ற பூக்கள் உண்டா,,?//

    இருக்கு, "தேனக்கா"

    பதிலளிநீக்கு
  3. சகோதரிக்கு வணக்கம் ..கவிதை அருமை..//சமயத்தில் மௌனமாய் இருக்கும் இதழ்களில் மலர் வளையமாயும்// உங்கள் கவிதைகளை படிக்கும் போது அதிகமாக படிக்கத் தோன்றுகிறது...தமிழை ..:-)

    பதிலளிநீக்கு
  4. ///புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க.///

    அட அட... அக்கா ரொம்ப அழகா இருக்கு.. ரசித்து படித்தேன்... ;-))

    பதிலளிநீக்கு
  5. சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..]]

    உரைநடை வடிவில் கவிதை காதலாக கொஞ்ச(ம்) கா--மாகவும்

    பதிலளிநீக்கு
  6. முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
    தேனற்ற பூக்கள் உண்டா,,?


    நல்ல வரிகள் அருமை.

    பதிலளிநீக்கு
  7. நேச மேகம் நெருங்கும் பொழுது
    பாசம் மழை பொழியும் பொழுது
    முத்தம் என்னும் முதலாம் தூது
    சத்தம் இன்றி சங்கமிக்கும் மின்னல்
    தேனுவின் வரிகள் தேனாய் இனிக்க
    நானும் படித்தேன்; ரசித்தேன்; குடித்தேன்
    ஒருபடித்தேன் ஒருசில வரிகள்
    ஒருசில நிமிடம் ஒன்றிக்க வைத்தன:

    //புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க//

    பதிலளிநீக்கு
  8. //சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..//

    ரசித்த வரிகள்...கவிதாயினியின் ரசிகனுக்கு பரிசாய் வந்த கவிதை நன்றி தேனக்கா...

    பதிலளிநீக்கு
  9. //உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..///

    வாவ்.. அருமையான வரிகளில் காதல் ததும்புகிறது.. கவிதை ரொம்ப நல்லாருக்கு தேனக்கா..

    பதிலளிநீக்கு
  10. புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..


    ........... மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகு வரிகள்! கலக்கிட்டீங்க, அக்கா!

    பதிலளிநீக்கு
  11. அழகான சொல்லாடல் மனதுக்குள் மந்தகாசத்தை ஏற்படுத்தியது.வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு
  12. அருமை அக்கா!
    //தேனற்ற பூக்கள் உண்டா? //
    நிறைய யோசிக்க வைக்கும் வரிகள். நைஸ்!

    பதிலளிநீக்கு
  13. ///புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் ///

    உங்கள் படிமங்கள் எப்போதும் புதுசாகவே இருக்கின்றன..

    வாழ்த்துகள் தேனம்மை

    அன்புடன் வெற்றி

    பதிலளிநீக்கு
  14. ஏனுங்க அமுதா..

    இந்த அநியாயத்த என்னனு கேக்க மாட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  15. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  16. அருமையான பதிவு.இதழ்க் கூடு,நல்ல உவமை.

    பதிலளிநீக்கு
  17. //
    புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..
    //
    அசத்தறீங்க தேனம்மை..

    பதிலளிநீக்கு
  18. /சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. //

    புதுமையான கற்பனை!! ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  19. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க.

    அழகு

    பதிலளிநீக்கு
  20. //புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் // என்னே வரிகள்.....!

    பதிலளிநீக்கு
  21. //முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
    தேனற்ற பூக்கள் உண்டா,,?//

    WOW SUPERB POEM...

    பதிலளிநீக்கு
  22. நன்றி கலாநேசன்., அஹமத்., ரோஹிணி., ராம்ஜி., நசர்., குரு., சங்கவி.,பெயரில்லா., ஆனந்தி., ஜமால்., ஜெய்., தூயவன்., கலாம்.,சரவணா., கனி, அக்பர்.,ஸ்டார்ஜன்., சித்து.,பாலா., பாலாஜி., வெற்றி., கதிர்., பாபு., முருகேஸ்வரி., செல்வா., ஹுஸைனம்மா.,சக்தி., ஸாதிகா., ரியாஸ் ., ப்ரகாஷ்.,

    பதிலளிநீக்கு
  23. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  24. புத்தக அட்டையைப் போல மூடுகின்றன இமைகள் .. என் மனதின் வார்த்தைகளை நீ கண் வழி படித்து விடாமலிருக்க..

    முருங்கைப் பூவிலும் தேனெடுத்துக் கொண்டிருந்தன சில கருவண்டுகள் ..
    தேனற்ற பூக்கள் உண்டா,,?

    இதமான வரிகள் அக்கா

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...