எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முத்தக் குருவிகளும் .. முருங்கைப் பூக்களும்..

உன் முத்தங்கள் ஒரு குருவியைப் போன்று கீச்சென்ற சத்தத்துடன் என் இதழ்க்கூட்டில் வந்தமர்கின்றன.. இப்படி எத்தனை குருவிகள் ஒளிந்திருக்கின்றன என திறந்து பார்த்தேன்.. அனைத்தும் வெட்கத்தில் செவ்வண்ணமாய் என் இதழ்களை நிரப்பி..

சிகரெட் புகைப்பவனின் வளையங்களாய் உன் முத்தங்களை என்னை நோக்கி பறக்க விடுகிறாய்.. என் இதழ்களில் அவை மாலையாய் விழுகின்றன.. சமயத்தில் மௌனமாய் இருக்கும் என் இதழ்களில் மலர் வளையமாயும்..

வெள்ளி, 4 டிசம்பர், 2009

முத்துச் சிப்பி

நாட்காட்டியோ மணிகாட்டியோ
திசைகாட்டியோ இல்லாத
ஊர்த்துவப் பொழுது...

தாம்புக்கயிறறுந்த குடம்
மெல்ல மெல்ல மூழ்குவதுபோல
உன் முத்த அலைகளுக்குள்...

கிணற்றைப்போல என்னை
விழுங்கிக் கொண்டிருந்தாய் நீ

வினோத மேகம் போல
என் உதடுகள்
மழை பொழியப் பொழிய
வெளுக்காமல் கறுத்து...

மீண்டும் மீண்டும்
மழை தேடும்
சாதகப்பறவையாய் நீ ...

உன் உதடுகளுக்குள்
சிப்பிக்குள் சிக்கிய
நன்னீர் சொட்டுப் போலும்
அன்னியப் பொருள் போலும்
இறுக்கி விளைந்த முத்தாய்
என் உதடு....
Related Posts Plugin for WordPress, Blogger...