எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அவள் ஒரு தொடர் (பாதிப்பு) பதிவு...

விதூஷும் தமிழ்மகனும் ஒரு தொடர் பதிவெழுத அழைத்து இருந்தார்கள்.. விதி யாரை விட்டது .. அட மக்காஸ் உங்களைத்தான் பார்த்து பரிதாபப் படுறேன்.. ம்ம் என்சாய்ய்ய் ...!!!

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் என்ன..?
Thenammai Lakshmanan என்று இருந்தது.. உங்கள் கேள்வி பார்த்து தமிழுக்கு மாறிட்டேன்.. இப்போ நான் உஜாலாவில் ...மன்னிச்சுக்குங்க உவர்மண்ணில் போட்ட சுத்த தமிழச்சி தேனம்மை லெக்ஷ்மணன்..

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா ? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன..?
அப்பா அம்மாவைதான் கேக்கணும் தவிட்டுக்கு வாங்கும் போது வேறு பேர் இருந்துச்சான்னு.. ( எங்க வீட்டுல அப்போ வேலை செய்த சிகப்பி அக்கா அப்பிடி சொல்லியிருக்கு .. உன்னை தவிட்டுக்கு வாங்கி இருக்குன்னு) ..
தேனம்மை என்பது என் அப்பத்தா பேரு.. அப்பிடி இனிப்பா இருப்பேன்னு வைச்சு ஏமாந்து இருக்கலாம்.. லெக்ஷ்மணன் என்பது என் கணவர் பேரு .. அவரோட பேரு காரணம் எல்லாம் சொல்லணுமா.. !!


3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி..
என்னோட தமிழம்மா சுசீலாம்மாதான் காரணம்.. வேணாம் அவங்களை யாரும் கோபிக்காதீங்க.. நல்லது நெனைச்சு செஞ்சுட்டாங்க....:))

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
தமிழ்மணம்., திரட்டி ( இப்போ காணாமப் போச்சு ) தமிழிஷ் என்ற இண்ட்லியில் சேர்த்தேன் ( நன்றி . விஜய் ) முகப்புத்தகத்திலும்..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டதுண்டா..? ஆம் என்றால் ஏன்..?அதன் விளைவு என்ன..? இல்லை என்றால் ஏன்..?
முதலில் என்னை தொடர் பதிவு எழுத அழைத்தவர் மணிகண்டன்.. தீபாவளி பற்றியது .. ( இப்ப வருத்தப்படுறாராம்.. நோ நோ ஃபீலிங்ஸ் மணி ) .. அதை பார்த்து டைரக்டர் சேரன் முகப் புத்தகத்தில்... உங்க கல்கண்டு வடை பற்றிய நம்ம பக்கத்து ரெசிபி படிச்சேன்னார்.. அன்னிக்கு பேச ஆரம்பிச்சவர் ரொம்ப நல்ல நண்பராயிட்டார்.. நல்லவேளை வடையை பார்சல் பண்ணாம விட்டேன்..

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவு எழுதுறீங்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா..?
பொழுது போக்குக்கு எழுதுறதுக்கே அங்க இங்க கூவ வேண்டியதாக்கீது.. இதுல துட்டு சம்பாதிக்கணும்னா படிக்க வர்றவங்க ஓஓஒடிப் போய்ருவாங்க.. மச்சி..

7. நீங்கள் எத்தனை வலைப்பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.. ? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன..?
மூன்று.. ஒன்று சும்மா.. இன்னொன்று chumma .. மூன்றாவது THENU'S RECIPES
ஒரு தமிழ் வலைப் பதிவு., இன்னொன்று ஆங்கிலம்., மூன்றாவது தமிழும் ஆங்கிலமும்..( அதுல ஒண்ணு ., இதுல ஒண்ணு ., ரெண்டுலயும் பிச்சுப் பிச்சு ஒண்ணு ஹிஹிஹி)..

8. மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா ? ஆம் என்றால் யார் அந்தப் பதிவர் ..? ஏன்..?
நேசன்.. நேசன்., நேசன்...

9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதல் உங்களைத் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ? அவரைப் பற்றி.. ? அந்த பாராட்டைப் பற்றி..?
திரு . இராகவன் நைஜீரியா.. அவரைப் பற்றி ஒரு இடுகையே போடலாம்.. ஊக்குவித்தலும் ஆலோசனை சொன்னதுமான உன்னதமான நண்பர்..

10. கடைசியாக --- விருப்பமிருந்தால் உங்களைப் பற்றிப் பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றிக் கூறுங்கள்..
நான் தனியா சொல்ல ஏதும் இருக்கா என்ன.. என் பேரிலிருந்து உடை வரை தம்பி தங்கைகளே விலாவாரியா கருத்து சொல்லி இருக்காங்க.. அக்காக்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்லன்னு .. நானும் ஒரு பிரபல பதிவர்தான்னு நிரூபிச்ச அவங்களுக்கு எல்லாம் என் நன்றிகள்..

29 கருத்துகள்:

  1. நகைச்சுவையான பதில்கள்...ரசித்தேன் அக்கா!!

    பதிலளிநீக்கு
  2. மிக நல்ல பதில்கள்... கொஞ்சம் கும்மி அடிக்கலாம் என்றுதான் ஆசை... போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்..

    பதிலளிநீக்கு
  3. இதற்காக பல நாட்கள் காத்திருந்தேன். நல்ல பதில்கள். இரண்டாவது பதிலில் மற்றும் ஒரு சின்ன திருத்தம். உங்கள் வலைப்பதிவில் தோன்றும் பெயர் உண்மையான பெயர் இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயருக்கும் விளக்கம் கேட்டேன். உண்மையான பெயருக்கு விளக்கம் கேட்கவில்லை.

    அருமையான நகைச்சுவையான பதிவு. மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

    http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html

    பதிலளிநீக்கு
  4. உங்க பெயர் தமிழுக்கு மாறியது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  5. நன்றி மேனகா., ரகவன்., தமிழ் மகன்., தமிழ் உதயம் ., ஜமால்..

    பதிலளிநீக்கு
  6. கலக்கிட்டீங்க தேனக்கா.. ரொம்ப பிடிச்சிருக்கு உங்க பதில்கள்.

    பதிலளிநீக்கு
  7. ரசிக்கும் படியா சிரிக்கும்படியான பதில்கள் தேனக்கா...

    நான் இவ்வளவு நாளா நேசன் அண்ணே ரெம்ப நல்லவேருனு நெனச்சேன்...இல்லையா???

    பதிலளிநீக்கு
  8. அக்கா உங்களைத் தவிட்டுக்கு வாங்கினாங்களா...என்னை தேயிலைத் தோட்டத்தில கண்டெடுத்ததாச் சொல்லுவாங்க !உங்க பெயரைத் தமிழில் நீண்ட நாளா எதிர்பார்த்தேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அக்கா, எல்லா பதிலும் அசத்தல்... :-))
    உங்களை போலவே...!! ;-))

    பதிலளிநீக்கு
  10. துள்ளலான் விடைகள் தேனம்மை.
    :)

    ரசித்தேன் !!

    அடடே ! என் பேருமா ? அன்புக்கு நன்றி மக்கா !

    @சீமானே ! என்ன மாப்பு நல்ல விதமாத்தானே சொல்லியிருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  11. நல்லா இருக்கு தேனம்மை . எனக்கும் நேசனை நினைத்தால் பொறாமை தான். ஏன்னா எனக்கு கவிதை புரியாது . உங்க குரு பக்திக்கு என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. ஹ ஹ ஹ... சூப்பர் கேள்வி... கலக்கல் பதில்கள்...

    உங்கள ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கேன்... நன்றிங்க
    http://appavithangamani.blogspot.com/2010/08/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  13. சகோ தேனம்மை..உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய பதில்கள்.மிகவுமே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. சீரியஸான சில கேள்விகளுக்கு கூட ....நகைச்சுவையான பதில்கள் ...
    ச்சும்மா ...
    பின்றிங்க அக்கா ..!!

    பதிலளிநீக்கு
  16. நேரில் பேசும் தொனியில் கலகலப்பான பதில்கள்

    பதிலளிநீக்கு
  17. நன்றி மேனகா., இராகவன்.,தமிழ் மகன்., ரமேஷ்., ஜமால்.,குமார்.,ஸ்டார்ஜன்., சத்ரியன்., கனி ., ஹேமா.,கலாநேசன்., முனியப்பன்சார்., அமைதிசாரல்., ராம்ஜி., ஆனந்தி.,நேசன்., சசி., மகி.,பொன்ராஜ்., அப்பாவி தங்கமணி.,ஸாதிகா., உஜிலா தேவி ., பாபு., ரிஷபன்.,சாந்தி.

    பதிலளிநீக்கு
  18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
  19. anbu akka,

    kavithayil mattumalla comediya ezhutharathulayum kalakkareenga.

    Ravishna

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...