எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010

நன்றி மறப்பது நன்றன்று..



என் அன்பு அம்மா..எம். ஏ. சுசீலாம்மா.. நான் தேனீ என்றால் இவர்கள் தமிழ்த் தேனீ... இன்று நான் எழுதும் தமிழுக்குக் காரணமானவர்கள்.. ஃபாத்திமா கல்லூரியில் எங்கள் வசந்தம்.. என் நன்றி முழுவதும் இவங்களுக்குத்தான்..

இவர்களுடைய வலைத்தளம் ஆகஸ்ட் மாத லேடீஸ் ஸ்பெஷலில் அறிமுகமாகி இருக்கு.. (கல்வி) பெற்ற மகளை சான்றோள் எனக் கேட்ட தாயாய் என் அம்மா நெகிழ்ந்த போது நான் பிறந்த பயனை அடைந்தேன்.. என் அம்மாவின் மொழி பெயர்ப்பில் இடியட்டை(அசடன்) படிக்கும் ஆவலில் நான்.. சீக்கிரம் கிடைக்கும் அந்த சந்தோஷம் ...!!!




இவங்கதான் வலைத்தளங்களில் எழுதும் நம்ம பெரியன்னை ருக்மணி அம்மா.. புன்னகை சிந்தும் இந்த முகமும் அகமும் எழுத்துக்களும் நன்மை சார்ந்தவை.. அறிவுரைகளையும் அழகாய்ச் சொல்வார்கள்.. இவர்களோட திருக்குறள் கதைகள் இந்த மாதமும் படிச்சு மகிழுங்கள்..
இவங்க என் முகப்புத்தகத் தோழி ஜெயா நல்லப்பன்.. கம்பீரமானவங்க.. எழுத்திலும் செயலிலும்..
கிட்டத்தட்ட 5000 நண்பர்கள் உடையவங்க... எப்ப தூங்குறாங்க.. எப்ப விழிக்கிறாங்கன்னே தெரியாது.. அவ்வளவு சுறுசுறுப்பு.. அவங்களோட ரோஜா கவிதை உங்களுக்காக யங் லேடீஸ் பக்கங்களில்..
காசுமழையில் நம்ம சித்ரா நாகப்பன் உங்களுடைய சேமிப்பு .,முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வழங்கிய ஆலோசனைகளைப் படிச்சுப் பயன் பெறுங்க..
அப்புறம் இந்த மாதம் நான் பயணங்களில் இருந்ததால் என்னோட புதுப் படைப்பு அனுப்ப முடியாமல் போயிருச்சு.. .. அட அப்பிடி எல்லாம் உங்களை நிம்மதியா விட்டுருவோமா என்ன.. கவிதையோ., கதையோ., கட்டுரையோ அடுத்த மாசம் புதுசா வந்து மிரட்டுவோமில்ல..தயாராயிருங்க மக்காஸ்..
வாழும் வரை போராடுங்கள்.., நீங்க நினைச்ச இடத்தை அடையும் வரை...!!!
சந்தர்ப்பம் வரும் போது பயன்படுத்திக் கொள்ளுங்கள் ...சிகரங்களை எட்டுவீர்கள்..
எனவே..அடுத்த மாத லேடீஸ் ஸ்பெஷல் இஷ்யூவை வண்ணப் படுத்த உங்க SMS கவிதைகள்., முதலீட்டுக் கேள்வி பதில்கள் ., படைப்புகளை அனுப்புங்க..
அனுப்ப வேண்டிய முகவரி:-
sms number : - 78459 70162...
டிஸ்கி 1 :- என் பிறந்த நாளில் தன் வலைத்தளத்தில் கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன் என்று என்னை தனி இடுகை போட்டு வாழ்த்திய வெற்றிவேல் சார் அவர்களுக்கு நன்றி..( நன்றி மறப்பது நன்றன்று இது.. இரண்டாவது )
டிஸ்கி 2 :- என்னுடைய நட்பூ கவிதையை வெளியிட்ட இளமை விகடனாருக்கு.. ( இது மூன்றாவது..)
டிஸ்கி 3 :- என் எழுத்துக்களைக் கவனித்து என்னால் இன்னும் சிறப்பாகவும் செய்ய முடியும் என என்னை ஊக்குவிக்கும் கிரிஜாம்மா அவர்களுக்கு..( இது நாலாவது) ..எனவே நன்றி மறப்பது நன்றன்று.. அன்றே சொல்லிவிடல் வேண்டும்..:))

17 கருத்துகள்:

  1. தேனம்மை சரியான பாதைக்கு வந்து உள்ளமைக்கு வாழ்த்துகள்.

    உங்கள் தமிழ் அம்மாவை அறிமுகப்படுத்தி இருந்தேனே பார்த்தீகளா?

    அவர்கள் பற்றிய மேற்கொண்டு விபரங்கள் தெரிவிக்கவும்.

    ரொம்பவும் அநியாயத்திற்கு அடக்கம் போலிருக்கு.

    சிறப்பாக இடுகை அவர்களுடையது.

    உங்களுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அசடனை படிக்கும் ஆவல் எனக்கும் பற்றிக்கொண்டது...

    தேனக்கா மதுரை பாத்திமா கல்லூரியா???

    உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் நன்றி தேனக்கா...

    பதிலளிநீக்கு
  3. பார்த்தேன், படித்தேன், ரசித்தேன்.....

    பதிலளிநீக்கு
  4. நன்றி மறப்பது நன்றன்று...
    உன்மைதான் உங்களை நன்றியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு நன்றி தேனக்கா.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் தமிழ் நடை நல்லாருக்கு.

    பதிலளிநீக்கு
  6. மனது நிறைய அன்பும், இனிமையும் நன்றி உணர்வும் ஊக்கமும் உள்ள தேன் அக்காவிற்கு, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. தேனக்கா நீங்க அறிமுகப்படுத்தும் அழகே தனிதான்..!!

    பதிலளிநீக்கு
  8. நினைவலைகளோடு எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றி தேனக்கா.

    பதிலளிநீக்கு
  9. தேனக்கா,அருமையான பகிர்வு.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அக்கா.. நீங்க நன்றி சொன்ன விதமே.... அழகு...!!
    அருமை அக்கா, அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி..!!

    பதிலளிநீக்கு
  11. I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    பதிலளிநீக்கு
  12. நன்றி ஜோதிஜி., கனி.,குரு.,குமார்., ரிஷபன் மீனா., சித்து., கலா நேசன்.,ஜெய்,., ராம்ஜி., ஹேமா., ஆசியா., ஆனந்தி ., ஸ்வேதா சஞ்சனா..

    பதிலளிநீக்கு
  13. I've a close relative of ur Susilaammaa here near me in Dikshith Thenammai.

    பதிலளிநீக்கு
  14. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...