எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

மூலம்

மூலம்

சிறிது நடுக்கமாகத்தான் இருந்தது மெச்சிக்கு அந்த ஜாதக விபரங்களைப் பார்த்ததும். மகனுக்குக் கல்யாணத்துக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள் மெச்சியும் அவள் கணவர் அழகப்பனும்.

பையனுக்கு ஆறு நட்சத்திரங்கள் ஆகாது என்று கீழச்சீவல்பட்டி ஜோசியர் குறித்து கொடுத்திருந்தார். ஆனால் வச்சு அடிப்பது போல அந்த ஆறு நட்சத்திரங்களும் மாறிமாறிப் பெண் ஜாதகங்களில் வந்து கொண்டிருந்தன, எல்லாம் பொருந்தி இருந்தால் மெச்சி வீடு சார்ந்த அதே கோயிலையும், அதே பிரிவையும் சேர்ந்த பெண்களாகவே வந்தனர். அப்படி என்றால் சகோதரி முறையாச்சே பண்ணக் கூடாதே என விலக்க வேண்டியதாயிற்று. 

பத்தும் பத்தாததற்கு மகன் வயதில் உள்ள பெண்களுக்கு பத்துப் பதினைந்து வயதுக்குள் உள்ள குழந்தைகள் வேறு இருந்தார்கள். சில சமயம் மகனை விடப் பத்து வயது சிறிய பெண்களும் விவாகரத்தாகி இருந்தார்கள். திருமண மேட்ரிமோனிகளைச் சுற்றிச் சுற்றி வந்தும் மகனைப் போல பத்தாண்டுகளாக மறு திருமணம் ஆகாமல் அன்று கண்ட அதே இருபது முப்பது பெண்களே எஞ்சி இருந்தார்கள். அவர்களுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை இவனுக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதுதான் ஒரே பொருத்தம்.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

வியாழன், 3 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6271 - 6280 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6271.திருமந்திரம்  - 601 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/t5GILsFz1qo


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6272.திருமந்திரம்  - 602 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/eXvmVan9TIM


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 2 செப்டம்பர், 2026

புனிதப் போராளி மாய் பாகோ

புனிதப் போராளி மாய் பாகோ

நாட்டிற்காகப் போராடியவர்களைப் பார்த்திருக்கிறோம். அந்நியர்கள் வசப்படலாகாது என்று ஆத்மஹத்தி செய்து கொண்டவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தன்னுடைய சீக்கிய மதத்தைக் காக்கவும் அதன் குருவான குரு கோவிந்த் சிங் ஜிக்குக் காவலாக இருக்கவும் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்துடன் தைரியமாக மோதியவர் மாய் பாகோ. சீக்கியர்களின் மீட்பர் இந்த மாய் பாகோ எனப்படும் மாதா பாக் கவுர் என்ற பெண்மணி என்று சொன்னால் மிகையாகாது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்தவர். துணிச்சல் மிக்கவர். சமத்துவ சமூகத்தைப் பாதுகாக்க விரும்பியவர். கவுர் என்றால் இளவரசி. மாய் மற்றும் மாதா என்றால் அம்மா என்று பொருள்படும்

மாய் பாகோ 1705 இல் முகலாயர்களுக்கு எதிரான முக்த்சார் போரில் முகலாயர்களின் 10,000 வீரர்கள் கொண்ட படையுடன் 40 சீக்கிய வீரர்களை மட்டுமே கொண்டு போரிட்ட, அசாத்தியத் துணிச்சல் கொண்ட பெண் துறவி. ஆனந்த்பூர் சாஹிப்பின் முற்றுகையின் போது 40 சீக்கியர்கள்  சாலி முக்தே) குரு கோவிந்த் சிங்கைக் கைவிடும்படி நேர்ந்தது. ஒரு பெண்ணாய் இருந்தும் ஆண்போல் துணிவு கொண்டு அவர்களை குருவுக்கு ஆதரவாக ஒன்று திரட்டி மீண்டும் முகலாயர்களுக்கு எதிராகச் சண்டையிடும்படிக் கொண்டு வந்தார்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

யூ ட்யூபில் 6251 - 6260 வீடியோக்கள்

6251.விநாயகர் துதி 2 l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/P45qoiNm82A


#கணபதி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#GANAPATHI, #THENAMMAILAKSHMANAN,



6252.ஐயப்ப மாலா மந்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/rd7tueFZn6E


#ஐயப்பமாலாமந்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

பிடிமண்

 பிடிமண்

ரோட்டை ஒட்டிய பாலத்தின் அடியில் இருந்தது அந்தப் பெட்டிக் கடை. அந்த ரோட்டின் மேலேயே பாலத்தின் கைப்பிடிச் சுவரில் ஒரு பிள்ளையார் கோவிலும் இருந்தது. பெட்டிக்கடைக்காரரே பிள்ளையார் கோவிலையும் பூசாரி போல் பார்த்துக் கொண்டு இருந்தார். இன்னோவாவை விட்டு இறங்கிக் கடைக்கருகே சென்று விசாரித்தார் பழனி, “இங்கே ராஜநாயகம்கிறது யாரு ?” ”நாந்தான்” என்று பெட்டிக் கடை ஓலையைப் பிடித்தபடி எழுந்து சரிவான பாதையில் மேலேறி வந்தார் கடைக்காரர்.

”இங்க ஜாதகம் எல்லாம் பார்க்கிறதுன்னு சொன்னாங்களே”,ஐயத்தோடு கேட்டார் பழனி. “ஆமா நாந்தான் பார்ப்பேன். இருங்க வரேன். என்றவர் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் குடித்து விட்டு இவருக்கும் நீட்டினார். ”இல்லங்க வேண்டாம். ஒரு ஜாதகம் பார்க்கணும்”

சனி, 29 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6241 - 6250 வீடியோக்கள். புத்தக மதிப்புரைகள்.

6241.புகழ்க் கன்னி l சாமி பழனியப்பன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1IdRU7LDxN4


#புகழ்க்கன்னி, #சாமிபழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#pugalkanni, #samipalaniappan, #thenammailakshmanan, 



6242.நாளமில்லாச் சுரப்பிகளும் மரபுவழி மருத்துவ முறைகளும் l எஸ் கதீஜா நாச்சியார் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XD4Q9PjOZk8


#நாளமில்லாச்சுரப்பிகள், #மரபுவழிமருத்துவமுறை,  #கதீஜாநாச்சியார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#endocrineglands, #kathijanachiyar, #thenammailakshmanan,

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 9

 **ஒற்றைச் செடியாய்த்

தனித்திருப்பது பிடித்திருக்கிறது.
எவ்வுயிர்க்கும் வானமும்
மழையும் வெய்யிலும் ஒன்றுதானே.

 

**தேடுகிறாயா எனத்
தெரிந்துகொள்ளவே
காணாமல் அடிக்கிறேன் என்னை.

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6231 - 6240 வீடியோக்கள்.

6231.இருவாட்சி l  காதல் வனம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=6rv9i5KZkSU


#இருவாட்சி, #காதல்வனம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#iruvatchi, #jathalvanam, #thenammailakshmanan, 



6232.சாக்கோட்டை வீரசேகரர் உமையாம்பிகை கோயில் l  புதுவயல் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=eNKNgVb6wZE


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,

புதன், 26 ஆகஸ்ட், 2026

இரண்டாவது நாவல் - அத்யாயம் - 9

 

9

”அக்கினியாத்தா எங்கள ஏன்தா இப்பிடிச் சோதிக்கிறே. ” மனமுருகிக் கையேந்திக் கேட்டுக் கொண்டிருந்தாக ஆவுடையப்பன். உங்கிட்ட உத்தரவு வாங்கித்தானே இந்தப் புள்ளைக்குக் கலியாணம் பண்ணினேன். ஆத்தா இல்லாத புள்ள மனக்கொறை இருக்கப்புடாதுன்னு புள்ளைகிட்டயும் கேட்டுத்தானே செஞ்சோம். மாப்பிள்ளைக்கு ரத்தப் புத்தாமே. என்ன செய்வேன் ஆத்தா?”

அவுகளை விட அதிகமாகக் கலங்கிக் கொண்டிருந்தாக கருப்பஞ்செட்டி. ”எங்க ஆத்தா போல உன்னயத்தானே நம்புனோம். எங்கள ஏன் கைவிட்டே.”

”சரி தம்பி கிளம்புங்க ஆறுமாசமா வைத்தியம் பார்க்குறோம். சரியாயிரும்னு நம்புவோம். வேலுவோட போய் பொங்கச்சீரைக் கொடுத்துட்டு வாங்க”.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6201 - 6210 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6201.திருமந்திரம்  - 591 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/q_ZWvQFIv6M


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6202.திருமந்திரம்  - 592 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/aOa2p8VYBRA


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

பந்த பாசங்களைச் சீர்ப்படுத்தும் ஸ்ரீதேவி மந்திரம்


உலகில் உள்ள பெண் வடிவங்கள் எல்லாம் நம் தாயின் வடிவங்களே என்று கூறும் மந்திரம் ஒன்று உள்ளது. மேலும் நம் மனக்கவலையை நீக்கவும், பந்தபாசங்களை அறுக்கவும், அதே சமயம் ஞானம் கிட்டவும் அம் மந்திரம் உதவுகிறது என்று அறியும்போது வியப்பு மேலிடுகிறதுதானே. அது என்ன மந்திரம் என்று அறிய ஆவலாய் இருக்கிறது அல்லவா!  மேலும் அந்த மந்திரம் எப்படி ஒரு மன்னனுக்கும் மனிதனுக்கும் உதவியது என்றும் பார்ப்போம்.


முன்னொரு காலத்தில் சுரதன் என்னும் அரசன் தன்னுடைய நாட்டை ஆண்டு வந்தான். திடீரென அவனுடைய அண்டை நாட்டு மன்னர்கள் அவன் மீது படையெடுத்தனர். அவனுடைய நாட்டை சூழ்ந்து வளைத்து முற்றுகையிட்டனர். எதிர்பாராத அந்தத் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த மன்னன் அதற்குத் தயாராக தன்னுடைய படையை வைத்து இல்லாததால் தோல்வி அடைந்தான். எனவே நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. மனம் நொந்து அவன் காட்டை அடைந்தான். மரங்கள் சூழ்ந்த அந்த அடர்வனத்துக்குள் மனம் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான்.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6191 - 6200 வீடியோக்கள். திருமூலரின் திருமந்திரம்.

6191.திருமந்திரம்  - 581 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/nTxAa8VGlUk


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,



6192.திருமந்திரம்  - 582 l திருமூலர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/_oXjNT2Zs2E


#திருமந்திரம், #திருமூலர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUMANTHIRAM, #THIRUMOOLAR, #THENAMMAILAKSHMANAN,

சனி, 22 ஆகஸ்ட், 2026

மக்கள் திலகம் எம்ஜிஆர்

 மக்கள் திலகம் எம்ஜிஆர்


மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்.. உள்ளம் என்றொரு ஊர் இருக்கும். அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்.. கடமை அது கடமை.. எத்தனை எத்தனையோ நூறு பாடல்கள் இருந்தும் இப்பாடல்தான் மக்கள் திலகம் எம்ஜியாரை மக்கள் தலைவனாக வடிவமைத்த பாடல். நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் என்பதோடு முதன்மையாகத் தாயைத் தெய்வமாகப் போற்றியவர், மக்களிடம் பரிவு கொண்டவர், மனிதாபிமானம் மிக்கவர், விருந்தோம்பல் மற்றும் கொடைக்குணம் கொண்டவர் எம்ஜியார்.

கொடுத்துச் சிவந்த கரம்,  கலியுகக் கடவுள்,  பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர்,  இதய தெய்வம்,  வாத்தியார்,  இதயக்கனி என்றெல்லாம் புகழப்படும் திரு எம் ஜி ராமச்சந்திரன் தமிழகத் திரைப்பட உலகையும் தமிழக அரசியலையும் ஒருசேரக் கலக்கியவர். இவருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும் திரு.தமிழ்வாணன் அவர்கள் வழங்கிய மக்கள் திலகம் என்ற பட்டமே மிகப் பொருத்தமானதாக தோன்றுகிறது. நடிகர்களில் ஆலயம் கட்டப்பட்டது என்றால் அது முதலில் எம்ஜிஆருக்கு என்றே சொல்ல வேண்டும். இன்றும் இருக்கும் அந்த ஆலயம் திருநின்றவூர் நத்தம்மேடு கிராமத்தில் உள்ளது. கலைவாணன் சாந்தி தம்பதியினர் எம்ஜிஆருக்காகக் கோவிலை அமைத்துக் கும்பாபிஷேகம் செய்து உள்ளார்கள்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6161 - 6170 வீடியோக்கள்.

6161.ஸ்ரீ மாதா புவனேஸ்வரி துதி l ஸ்ரீ தேவி பாகவதம் l தேனம்மை லட்சுமணன்

https://www.youtube.com/shorts/pBconIAO5wI


#ஸ்ரீதேவிபாகவதம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIDEVIBHAGHAVATAM, #THENAMMAILAKSHMANAN,



6162.திருப்பரங்குன்றம் முருகன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/y8l2gYT1S3o


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்

233.


4641.புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் தாளாளர்கள் கவிதா, சுப்ரமணியன் ஆகியோரின் புதல்வன் ரகு மருமகள் அழகு ஆகியோரின் பேபி ஷவர் நிகழ்ச்சி எஸ் ஆர் மஹாலில் நடைபெற்றது.  அப்போது  தேனம்மை லெக்ஷ்மணனின்," கருப்பை நம் உயிர்ப்பை, காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள்" ஆகிய மூன்று நூல்களையும் முன்னாள் அமைச்சர் திருமிகு ரகுபதி அவர்கள் வெளியிட்டார்கள்.


ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்

பதிமூன்றாம் அத்யாயம் எட்டாவது ஸ்லோகம்


    ராஞி தர்மிணி தர்மிஷ்டா:

பாபே பாபா: ஸமே ஸமா: l

    ராஜானம் அனுவர்(த்)தன்தே

யதா ராஜா ததா ப்ரஜா: ll

சனி, 15 ஆகஸ்ட், 2026

யூ ட்யூபில் 6151 - 6160 வீடியோக்கள்.

6151.நாச்சியாரம்மன் l  ரெ.முத்துக்கணேசன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/il04qgiQCAI


#அம்மன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



6152.நிலாவின் ஒளி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/L80qvthmOrs


#முருகா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...