எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 ஏப்ரல், 2021

வாடிகன் சர்ச்சில் காவிய ஓவியங்களும் பலி பீடங்களும்.

 யூரோப் டூரின் போது வாடிகன் சர்ச்சில் மொஸைக்கில் வரையப்பட்ட/செதுக்கி ஒட்டப்பட்ட சில ஓவியங்களைப் பார்த்தேன். கவர்ந்த சிலவற்றைக் காமிராவால் சிறைப்பிடித்தேன். அவை உங்கள் பார்வைக்கு. 

மகதலேனாவை மறக்க முடியுமா உங்களால். பைபிளில் எனக்குப் பிடித்த ஒரு பெண் அவள். ஏசுபிரானே, “ உங்களில் தவறு செய்யாதோர் அவள் மீது கல்லெறியுங்கள் “ என்று அவள் மீது உன்மத்தத்துடன் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய கூட்டத்திடம் அறிவுறுத்திய கருணைக்குரியவள்.

இங்கே பதினாறாம் நூற்றாண்டில் கிறிஸ்டோஃபோரோ ரோன்கல்லி  வரைந்த அசல் ஓவியத்திலிருந்து, அனனியாஸ் & சபிரா என்ற தம்பதியின் தண்டனையை குறிக்கும் மொசைக் ஓவியமும் பலிபீடமும் (1725-1727). செயின்ட் பீட்டரிடம் பொய் சொன்ன பிறகு, சபீரா அப்போஸ்தலருக்கு முன்பாக தரையில் விழ பின்னணியில் இரண்டு இளைஞர்கள் அவரது கணவர் அனனியாஸின் சடலத்தை எடுத்துச் செல்கின்றனர். 

பொய்யைத் தண்டிக்கும் பலிபீடம். 

ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ப்ளேக் நோய் பாதிப்பின் போது ரோம் நகர மக்களைக் காத்த  புனிதர் இவர். பெயர் செயிண்ட் செபஸ்டியன். இவர் பெயரால் அமைந்த இந்த ஓவியத்தின் முன்பு பலி பீடமும் ( பூசையின் போது பயன்படுவது ) , போப் இரண்டாம் ஜான் பாலின் கல்லறையும் அமைந்துள்ளது. 

நோய் நீக்கும் பலிபீடம்

ரபேலின் மரணப் படுக்கை ஓவியம். இது உயிர்த்தெழுதலைக் குறிகிறது. 

ஆறு கலைஞர்கள் ஒன்பது வருடங்கள் பாடுபட்டு உருவாக்கிய மொஸைக் ஓவியம் இது. இதன் பலி பீடத்தின் கீழ் புனிதர் போப் பதினொன்றாம் இன்னொசெண்டின் கல்லறை அமைந்துள்ளது. 

விசுவாசம் & நம்பிக்கை உயிர்த்தெழுதலைக் குறிக்கும் பலிபீடம். 



தூய மரியாள்/கன்னி மேரி/மரியன்னையைச் சித்தரிக்கும் சிறப்பிக்கும் பலிபீடம்.

தூய்மையினை உகந்தேத்தும் பலிபீடம். 

ஞானஸ்நானம் கொடுக்கும் பலிபீடம். மராட்டா என்ற ஓவியர் வரைந்த மொஸைக் ஓவியம். யோர்தானில் ஏசு  ஞானஸ்நானம் பெறும் அபூர்வ ஓவியம். 

ஞானம் முகிழ்க்கும் பலிபீடம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...