எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 22 ஏப்ரல், 2021

பேச்சுப் போட்டியில் நடுவராக..

காரைக்குடி புத்தகத் திருவிழா கடந்த மாதம் கம்பன் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதை ஒட்டி மாணாக்கருக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செய்யுள் மனனப் போட்டியாக பாரதி பாரதிதாசன் பாடல்களில் இருந்து 40 வரிகளைச் சொல்லும் போட்டியில் பல்வேறு பள்ளிகளின் மாணாக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஒப்பித்தனர்.

இந்நிகழ்வை நடத்தியவர் ஆசிரியரும் குழந்தைக் கவிஞர் திரு அழ. வள்ளியப்பா அவர்களின் புதல்வியுமான திருமதி தேவி நாச்சியப்பன் ஆவார்கள். இவர் இப்புத்தகத் திருவிழாவின் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருமதி சந்திரா மற்றும் திருமதி ஸ்வேதா ( கார்த்திகேயன் தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ) ஆகியோரோடு மூன்று நடுவர்களுள் ஒருவராகப் பங்கேற்றேன்.///



முன்பே இது பற்றி எழுதி இருக்கிறேன். இப்போது இதில் மேலதிகப் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளேன். பவதாரிணி, மணிகண்டன், ப்யூலா அன்னம் ஆகியோர் பரிசு பெற்றார்கள். வாழ்த்துக்கள் செல்லங்களே. !!!


தன் தந்தையின் நினைவாக நிகழ்த்திய இவ்விழாவில் என்னைப் பங்கேற்க அழைத்த திருமதி தேவி நாச்சியப்பன் அவர்களுக்கு எனது நூல்களைப் பரிசளித்து மகிழ்ந்தேன். 





வெற்றி பெற்ற மாணாக்கருக்கு எனது விடுதலை வேந்தர்கள் நூலைப் பரிசளித்தேன். 








மற்றவர்களுக்கு சான்றிதழும் புத்தகப் பரிசும் வழங்கினோம் மூவரும். 



நடுவர்களாகப் பங்களிப்புச் செய்த எங்கள் மூவருக்கும் ஆசிரியர் ஜெயங்கொண்டான் (புத்தக) நினைவுப் பரிசினை அளித்தார். 







தேவி நாச்சியப்பன் மற்றும் எங்கள் மூவரின் நன்றியுரை & வாழ்த்துரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. பேசிய மாணாக்கர்கள் தமிழுக்குப் புத்துயிர் அளித்தார்கள். நன்றி அனைவருக்கும்.

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...