ஜெர்மனி கோலோனில் இருக்கும் இந்த சர்ச்சின் கட்டிடக்கலை, முகப்புச் சிற்பங்கள், மார்பிள் & கிரானைட் சிற்பத் தொகுதிகள், (புனிதர்கள் மட்டுமல்ல வித்யாசமான உருவங்களும் பொறிக்கப்பட்டிருப்பது), ஜன்னல் கண்ணாடிகளில் வரலாறு சொல்லும் வண்ண ஓவியங்கள், ஸ்வாலோஸ் நெஸ்ட் எனப்படும் மிகப்பெரும் இசைக்கருவி அனைத்தையும் இன்னும் ஒரு இடுகையில் சொல்லி இருக்கிறேன்.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெரோ க்ராஸையும் ஆர்ச்பிஷப்களின்/புனிதர்களின் கல்லறைச் சிற்பங்களையும், இயேசுவின் வாழ்வியல் சிற்பங்களையும் சிலுவைப்பாதையையும் நீங்கள் இங்கே காணலாம்.
எட்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கட்டப்பட்ட இந்த அற்புத கதீட்ரலை ஜெர்மனி சென்றால் காண மறவாதீர்கள்.முழுக்க முழுக்க ஜெர்மானியக் கட்டிடக் கலையில் ரைன் நதிக்கரையில் இரட்டைக் கூம்பு வடிவக் கோபுரங்கள் கொண்டு அமைக்கப்பட்டது.
வெளியே இருக்கும் இச்சிற்பங்கள் அபோஸ்தலர்களைப் போலத் தோன்றுகிறது. இரட்டைக் கோபுரங்கள் கொண்ட கதீட்ரல் இது. 12 ஆம் நூற்றாண்டில் இருந்து15 ஆம் நூற்றாண்டு வரை கட்டியும் கட்டி முடிக்க முடியல. அதுனால் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளாக இதைக் கட்டி முடிச்சிருக்காங்க. அதுக்கு ஏத்த அளவு இதுல மார்பிள் வேலைப்பாடுகளும் உண்டு.
விதானம் ரொம்ப உயரம்.!
திருப்பலி கொடுக்கும் மேடை. நேராக இருப்பதுதான் ப்ரேயர் ஹாலும் நேவ் எனப்படும் கூடமும்.
புனிதர்களின் கல்லறைகளோடு ஜெரோ க்ராஸ் இருப்பதையும் முன்பே படம் பிடித்துப் போட்டிருக்கிறேன்.
கதீட்ரல் முழுக்கப் புனிதர்களின் சமாதியும் இருக்கு. மிகப் பெரிய சர்ச் இது. எனவே நடந்து நடந்து காலே வலித்து விட்டது.
Kasol & Kheerganga Weekend Trip ( Kasol Trek, Kheerganga Trek, Kheerganga Trip )
பதிலளிநீக்குYou like trekking to the best time to visit Kasol and Kheerganga. March to early June are the best times to visit if you prefer a warmer weather and a warmer springtime. However, it would be ideal for a snow-trek in November or late January, if you are hoping for colder weather.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!