எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

THE MULE - REVIEW. தி ம்யூல் - ஒரு பார்வை.

THE MULE - REVIEW. தி ம்யூல் - ஒரு பார்வை.

க்ளிண்ட் ஈஸ்ட்வுட்  தயாரித்து நடித்த படம். 90 வயதுக்காரரான லியோ ஷார்ப்  என்ற  போதைப்பொருள் கடத்தல்காரரைப் பற்றி வெளிவந்த ( நியூயார்க் டைம்ஸ் ) பத்ரிக்கைச் செய்தியை மையமா வைச்சு வெளிவந்த படம் இது.

கதாநாயகன் பேர் ஏர்ல் ஸ்டோன்  ( க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ) இவர் ஒரு தோட்டக்கலை நிபுணர் & முன்னாள் போர் வீரர். குடும்பத்தைக் கவனிக்காமல் தோட்டமே கதி என்று கிடக்கும் இவர் பணத்தட்டுப்பாட்டால் அவதியுறுகிறார். தன் பேத்தியின் நிச்சயதார்த்த சமயம் வெறுங்கையோடு வரும் அவரைக் குடும்பம் மதிப்பதில்லை. அப்போது  அவரை  அணுகும் ஒருவன் ( மெக்ஸிகன் ட்ரக் ஏஜெண்ட் ) ஒரு பொருளைக் (கோகெய்ன் ) குறிப்பிட்ட இடத்தில் சேர்த்தால் பணம் கிடைக்குமென்று கூறுகிறான்.

அதை ஒத்துக்கொண்டு அவர் சினெலௌ கார்ட்டெல் என்ற நிறுவனத்துக்கு ட்ரக்ஸ் கடத்தும் கூரியராக செயல்பட்டு வருகிறார். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போதைப்பொருளைக் கொண்டு சேர்த்தால் கட்டுக்கட்டாகப் பணம் கிடைக்கவும் தொடர்ந்து பணத்தேவை ஏற்படவும் இதையே தொழிலாகச் செய்கிறார். எப்படி யார் கடத்துகிறார்கள் எனத் தெரியவிடாமல் ப்ராட்லி கூப்பர், லாரன்ஸ் ஃபிஷ்பர்ன், மைக்கேல் பென்னா ஆகிய போதைத் தடுப்பு அமலாக்கப் பிரிவினரைத் திணறடிக்கிறார்.

ஒரு விதத்தில் மென்மையாகவும் அழகாகவும் சென்றாலும் இன்னொரு புறம் போதைப்பொருள் கடத்தல் அழகிகளுடன் உறவு என்று செல்கிறது. நடுநடுவே இதில் ஈடுபடும் இளைஞர்களுக்கு உங்களுக்கு வயசு இருக்கு வாழ்க்கை இருக்கு எனவே இதில் ஈடுபடாதீங்க என்று அறிவுரை வேறு சொல்கிறார் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்.

இவரது மனைவி (ஆண்டி கார்சியா ) , மகள் (ஆலிசன் ஈஸ்ட்வுட் ), பேத்தி (தைஸா ஃபார்மிங்கா )  தவிர்த்துக் காட்டப்படும் பெண்கள் அனைவருமே இவருடன் பணத்துக்காக உறவு கொள்ள வந்த விலைமகளிராகவே காட்டப்படுகின்றார்கள்.

ஹைவேஸில் கடத்தலைக் கண்டுபிடிக்க வரும் போலீஸ்காரர்களுக்கு இனிப்பு கார்ன் போன்ற உணவு வகைகளைக் கொடுப்பதும் மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க பொடி ஒன்றைத் தூவித் தப்பிப்பதுமாக இருக்கிறார்.

ஒரு இடத்தில் கறுப்பினத்தம்பதிகள் கார் ப்ரேக் டவுனாகி நிற்க டயர் மாற்ற உதவச் செல்கிறார். அப்போது அத்தம்பதிகளை ப்ளாக் (இது இனப்பாகுபாடின் குறியீடு என்று விமர்சகர்கள் குதறி இருக்கிறார்கள் ) என்று அழைத்துப் பேசுகிறார். இது கூட மாற்றத் தெரியாத சமூகம்தான் இது வெறுமனே படிப்பறிவு மட்டும்தான் எனப் பகடி செய்கிறார்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் காரின் பின் புறம் கிடக்க அவரைப் பின் தொடரும் போதைக்கும்பல் டென்ஷனாகி நகம் கடிக்கிறது. அவர் செய்வதை எல்லாம் கேட்க ரகசிய மைக் பொருத்தி இருக்கிறார்கள். அவர் கேட்கும் பழம் பாடல்களை அவர்களும் கேட்டுச் சிரிப்பது அழகு.

அடுத்தடுத்துப் புதுக்கார், புது செல்ஃபோன்கள், புது அழகிகள் , புது ப்ரேஸ்லெட் என பணத்துக்காக கிட்டத்தட்ட 300 கிலோ வரை ஓரிரு மாதங்களில் இவர் போதைப்பொருளைக் கடத்த ( நம்மூர் குருவி படத்தை ஞாபகம் கொள்க ) ஒரு கட்டத்தில் போதைத் தடுப்பு அமலாக்கப் பிரிவு  இவரைப் பிடிக்கிறது .

இதற்கு முன் கடைசியாக இவர் போதைப்பொருளைக் கடத்தும்போது மனைவி மரணப்படுக்கையில் இருப்பதாகத் தகவல் கிடைக்க மகள் வெறுத்துப் பேச உடன் மனைவியுடன் இருக்கச் செல்கிறார். கணவனின் கையில் மனைவியின் உயிர் பிரிய போலீஸ் பிடியில் அகப்படுகிறார்.

கோர்ட்டில் வக்கீலும் குடும்பமும் சப்போர்ட் செய்தாலும் தன் குற்றத்தை நேர்மையாக ஒப்புக்கொண்டு ஜெயிலுக்குச் செல்கிறார்.அங்கேயும் பூந்தோட்டத்தைப் பராமரிக்கிறார்.

தான் குடும்பத்துக்கும் மனைவிக்கும் மகளுக்கும் உரிய சமயத்தில் எதையும் செய்யவில்லை என வருந்துகிறார். முக்கிய தருணங்களில் உடன் இருக்கவில்லை என்றும் கூறுகிறார். அப்போது தந்தையிடம்  YOU ARE A LATE BLOOMER என்று மகள் கூறும் இடம் நெகிழ்வு.

கணவன் மனைவிக்கிடையேயான அந்நியோன்யமும் உரையாடலும் புரிந்து கொள்ளலும் அழகு. அந்த மனைவி கேரக்டரில் ஆண்டி கார்சியா அழகான பொருத்தமான தேர்வு.

மொத்தத்தில் பூக்களை விடப் பணம் முக்கியம் என்ற யதார்த்தத்தைச் சொன்னபடம். ஆனால் அதையும் அநியாய முறையில் சம்பாதித்தால் ஜெயில்தான் என்பதையும் அழுத்திச் சொன்னதால் பிடித்திருந்தது.

இந்தப் படத்துக்கு என்னோட ரேட்டிங் நாலு ஸ்டார்.  ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.



  



2 கருத்துகள்:

  1. நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...