எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 28 ஜனவரி, 2019
மகனைக்கூடத் தண்டித்த மனுநீதிச் சோழன்:- தினமலர் சிறுவர்மலர் - 2.
சனி, 26 ஜனவரி, 2019
சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் சார் சொல்லும் நமக்கு நாமே திட்டம்.
வெள்ளி, 25 ஜனவரி, 2019
புதன், 23 ஜனவரி, 2019
செவ்வந்திச் சரங்களும் சிறுமுயல் குட்டிகளும்.
#Desi_Ppl. !
2022. எல்லாரும் பொறுப்பா போஸ்ட் போடும்போது நாம மட்டும் நாடோடி மாதிரி போஸ்ட் போடுறமே.. ஹாஹா கொஞ்சம் கில்டியாதான் இருக்கு.
2023. இன்னும் துவங்கவே இல்லை
அனைத்தும் சொல்லி முடித்துவிட்டதுபோல் இருக்கிறது.
2024. கூடா காமம் விளக்கும் கதைகள் அதிகம் சிலாகிக்கப்படுகின்றன, வாசிக்கப்படுகின்றன. கரமுண்டார் வீடு, மாதொரு பாகன், அபிதா, மோகமுள்.
2025. அதாண்டா இதாண்டா அலமாண்டா இதாண்டா. :) காலை வணக்கம் மக்காஸ்.
திங்கள், 21 ஜனவரி, 2019
சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.
சனி, 19 ஜனவரி, 2019
சாட்டர்டே போஸ்ட். திரு விவிஎஸ் ஸாரின் சுட்ட பணமும் சுடாத பணமும்.
சுட்ட பழம் வேணுமா ? சுடாத பழம் வேணுமா ?
”அதோ சைக்கிள்ல வராரே, அவர் பேரு என்னன்னு தெரியுமா ஸார் ?” என்று சஸ்பென்ஸ் வைத்தார் முத்தையா.
நானும் அவரும் நடந்து வந்து கொண்டிருந்தோம். தென்காசி பஸ் ஸ்டாண்ட் அருகில். நான் வங்கியில் பணியாற்றிய 1980 இல்.
“ஊஹூம். தெரியாது” என்றேன்.
“லட்சாதிபதி ஸார்.”
வியாழன், 17 ஜனவரி, 2019
கார்த்திக்கின் பார்வையில் - விடுதலை வேந்தர்கள் விமர்சனம்.
புதன், 16 ஜனவரி, 2019
குங்குமப் பொட்டின் மங்கலம்.
குங்குமப்
பொட்டின் மங்கலம்.
”குங்குமம் மங்கல மங்கையர்
குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், ”குங்குமப் பொட்டின்
மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்” என்ற பாடலும் குங்குமத்தின் மங்களகரத்தை அறிவிக்கின்றன.
”மனாலக்கலவை” என்று குங்குமத்தை புலவர் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில்
விவரிக்கிறார்.
”மலைபடு திரவியம்”
என்று மிளகு, அகில், குங்குமத்தை தமிழ் இலக்கிய அகராதி தெரிவிக்கிறது. இவற்றிலிருந்து
மணமான மகளிர் வகிட்டில் குங்குமம் வைக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லாதிருந்தும்
குங்குமத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.
இந்தக் குங்குமத்தில் மல்லிகை மணம் தாழம்பூ மணம் கொண்டவையும் உண்டு. அதேபோல் சிவப்பு நிறம் மட்டுமில்லாமல் பிங்க் நிறம், பச்சை நிறம் ஆரஞ்சு நிறம் அரக்கு நிறக் குங்குமங்களும் உண்டு. மதுரை மீனாட்சி குங்குமம், காசிக்குங்குமம் சிலோன் குங்குமம் ஆகியனவும் புழக்கத்தில் உள்ளன.
ஞாயிறு, 13 ஜனவரி, 2019
யசோவர்மனின் குறை தீர்த்த அருணன். தினமலர் சிறுவர்மலர் - 52.
சனி, 12 ஜனவரி, 2019
சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் ஸார் கூறும் பாப்பாவுக்கு ஒரு பாலிஸி.
சைல்டிஷ் ஜோக் ! ”ஹலோ, ஸ்ரீனிவாசன் ஸார், பாப்பாவுக்கு ஒரு பாலிஸி போடணும். ஒடனே வாங்க.” நண்பர் சுரேஷ் பாபு அவசரப்படுத்தினார். சுரேஷ் என் நீண்ட கால நண்பர். வங்கியில் பணி. நானும் போனேன். ஆனால் குழந்தைகளுக்குப் பாலிஸி போடுவது என்பது இரண்டாம் பட்சம்தான். முதலில் குடும்பத் தலைவருக்கு. பிறகுதான் பிள்ளைகளுக்கு. குழந்தைகள் பாலிஸியில் ஒரு அட்வாண்டேஜ் உண்டு. பாலிஸி எடுத்த அன்றே என்ன தொகை எப்போதெல்லாம் பணம் திரும்ப வரும் என்று சொல்லி விடுவார்கள். அஷ்யூர்ட். தொகை. கியாரண்டீட் அடிஷன் என்பார்கள். மற்ற பாலிஸிகளில் அப்படியில்லை. வருடா வருடம் போனஸ் கொடுப்பார்கள். அது அந்த வருடம் காப்பீட்டு நிறுவனம் ஈட்டும் லாபத்தைப் பொருத்தது. பரமபத விளையாட்டின் பாம்பு ஏணி போல் ஏறலாம். இறங்கலாம்.
வெள்ளி, 11 ஜனவரி, 2019
மாதொருபாகன் – ஒரு பார்வை.
மாதொருபாகன்
புதினம் புனைவாய் இருக்கும்வரை அதில் ப்ரச்சனையில்லை. அதில் யூக வரலாற்றுத் தரவுகள் இருக்கின்றன என்று கோடு காட்டினால் ப்ரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். 2010 இல் வெளிவந்த இந்த நாவலை இந்த வருடம் காரைக்குடி புக்ஃபேரில் வாங்கினேன்.
தேவாத்தா, மாச்சாமி, கூளாயி என்று தெய்வங்களையும் கரட்டூர், ஆட்டூர், அடையூர் என்று ஊர்களையும் குறிப்பிட்டு வெளியாகி இருக்கும் இந்நூல் பன்னிரெண்டாம் பதிப்பு. மாடர்ன் சிந்தனைகள் கொண்ட இன்றைக்கும் இதை இப்படியே குறிப்பிட்ட இனத்துக்கு சார்பாகக் காட்டினால் குத்திக் கொல்லத்தான் வருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
திங்கள், 7 ஜனவரி, 2019
வலிமை மிக்க வாலி.! தினமலர் சிறுவர்மலர் - 51.
சனி, 5 ஜனவரி, 2019
சாட்டர்டே போஸ்ட். விவிஎஸ் சார் சொல்லும் “காஃப்ஃபீடு “!
வெள்ளி, 4 ஜனவரி, 2019
அஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.
“தஞ்சாவூரு மண்ணு எடுத்துத் தாமிரபரணித் தண்ணியவிட்டு சேர்த்து சேர்த்து
செய்ததிந்தப் பொம்மை” என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். பெண்ணைக் குறித்துப்
பாடப்பட்ட பாடலானாலும் பானை வகைகள் டெல்டா போன்ற பகுதிகளில் இருக்கும் களிமண்
கொண்டு ஆற்று நீரால் பிசையப்பட்டு வனையப்படுவதை இப்பாடல் அழகாக விவரிக்கின்றது.
அதே போல் திருமணமானதும் தம்பதியர் வாழ்வு செல்வச் செழிப்போடு சிறந்தோங்கினால் ’பானை
பிடித்தவள் பாக்கியசாலி’ என்று சொல்வதும் உண்டு.
வியாழன், 3 ஜனவரி, 2019
ஹோகனேக்கல் தொங்கு பாலம்.- HOGENAKKAL HANGING BRIDGE.
அங்கே தொங்கும் பாலத்துல போய் பார்த்ததையும் அங்கே இருந்த பச்சைப் புல்வெளிகளையும் என் காமிரா கண்ணால பார்த்து எடுத்துட்டு வந்திருக்கேன் உங்களுக்காக மக்காஸ்.
தமிழ்நாடு வனத்துறை போர்டு.
வனவிலங்குகள் செல்லும் பாதை என்பதால் முன் அனுமதி பெற்றே போகணும்.













