எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

மீ டூ - சில குழப்பங்களும் சில புரிதல்களும்.

சென்ற சில நாட்களாக அதிகம் விவாதிக்கபடும் வார்த்தை - மீ டூ.

இந்த மீ டூ பற்றி - சில பிரபலங்கள் சொன்னால் அது டிவி டிபேட்டுக்கு உரிய விஷயம். அதில் இருக்கும் உண்மையை அவரவர்க்குத் தக்கபடி எடுத்துக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. இதில் ரேஸ், ஏஜ், க்ளாஸ் எதுவும் கிடையாது.

சாதாரணர்களுக்கு இல்லையா மீ டூ ப்ராப்ளம். ஏதேனும் ஒரு பருவத்தில் இதைக் கடந்தே இன்றிருக்கும் அனைவரும் வந்திருப்பார்கள். இதில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தோர் பற்றி செய்தி அதிகம் வருகிறது. அதுவும் ஆண் குழந்தைகளை அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களே சீண்டி இருக்கிறார்கள் என்பது அதிர வைத்த விஷயம்.

முகநூலில் பகிரப்படும் பல மீ டூக்கள் வேண்டாத முன்னாள் நண்பரைத் தாக்க ஒரு துருப்புச்சீட்டாகப் பயன்படுகிறது. “டீச்சர் இவன் என் சடையை பிடிச்சு இழுத்துட்டான் “ என்பதாகவே பல மீ டூக்கள் இருக்கின்றன.

உண்மையான மீடூவை சிலரே பகிர்ந்திருக்கிறார்கள். அது மிகப்பெரும் அதிர்ச்சியும் கண்ணீரும் அளித்த சம்பவம். இந்த மாதிரி மீ டூக்களில் அவர்கள் பண பேரத்துக்கு உட்பட்டு இழந்த பல லட்சங்கள் மட்டுமல்ல அடைந்த மனச்சோர்வும் மனச்சிதைவும் பதைக்க வைத்தது. மீண்டு எழுந்தவர்களைப் பார்க்கும்போது பிரமிப்பும் இன்னும் அவர்களுக்கு மனவலிமை பெருகவேண்டும் எனவும் வேண்டத் தோன்றியது.


பதின்பருவத்தில் சிலர் கடந்த இந்த மீ டூக்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் தொடர் ரேப்பிஸ்டுகள் அல்ல. சந்தர்ப்ப சூழல் காரணமாக தவறு செய்தவர்கள். நெருங்கிய உறவினராய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால் மதிப்பிற்குரிய உறவினராய் இருக்கும்போது எப்படி தண்டிப்பது என்பதை சிந்திக்க வேண்டியது அவசியம். முதலில் பாதிக்கப்பட்டவரையும் பாதித்தவரையும் ஒரு கவுன்சிலிங்குக்கு உட்படுத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.

பிரபலமாயினும் சரி, சாதாரணர் ஆயினும் சரி ( டிவியில் )  இந்தப் பெண்கள்  மீடூவை ஏன் இத்தனை நாள் வெளியிடவில்லை, இன்றைக்கு என்ன புதிதாய்  என்று கேட்கிறார்கள். நான் யார் பக்கமும் வக்காலத்து வாங்கவில்லை என்றாலும் அந்தப் பெண்களின் பொறுமை எல்லை மீறியதன் விளைவே இது எனச் சொல்வேன். யாரிடம் சொல்வது , சொன்னால் எடுபடுமா என்ற தயக்கமும் பயமும் சிந்தனையும் ஆட்டிப் படைக்க அதை ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதிரடியாய் வெளியிட்டு விடுகிறார்கள்.

சாதாரணர்களுக்கு நிகழும் மீ டூக்கள் அவர்களின் சமூக பயம் காரணமாக வெளிப்படுத்துவது தவிர்க்கப்படுகின்றன. இவற்றில் அநீதியின் எல்லை எது என்று வரையறுக்க முடியாவிட்டாலும் அவற்றை அவர்கள் தமக்குள்  தமக்குத் தெரிந்த வழியில் தீர்த்துக் கொள்கின்றனர்.

சமூக வலைத்தளங்களில் மற்றும் மீடியாக்களில் பணிபுரியும் பெண்கள் இதனை ஒரு முறையாவது சந்தித்து  இருக்கலாம். அளவீடுகள் வேறுபடலாமே தவிர அப்படி என்றால் என்ன என்று யாரும் கேட்டுவிட முடியாது. தற்காலிகப் பணியில் இருப்பவர்கள் இதைத் தவிர்த்து விட முடிகிறது. அல்லது விலகிவிட முடிகிறது. பாதுகாப்பான இடத்தில் வருமானம் குறைவு என்றாலோ அல்லது இல்லை என்றாலோ கூட பணி புரிவதில் எந்த வருத்தமும் இருப்பது இல்லை. எந்தக் காலத்திலும் இவர்களின் வருமானத்தை நம்பி குடும்பம் இல்லை என்பதும் ஒரு காரணம்.

ஆனால் நிரந்தரப் பணியில் இருப்பவர்கள்(  நிரந்தரமாக ஒரு ப்ராஜெக்ட் அல்லது நிறுவனம்)  அவர்களின் மேலதிகாரியின் இம்மாதிரி நடத்தையைப் ( தொடர்ந்து பணிபுரிய வேண்டிய சூழல், அவர் மிகுந்த நல்லவர் ஆனால் சிற்சில சமயம் எல்லை மீறுகிறார். , அதாவது இரட்டை அர்த்தத்தில் பேசுவது, தவறான பார்வை, தவறான வார்த்தைகள் ) பணியிடப் பாலியல் பலாத்காரம் என்ற பெயரில் புகார் செய்தால் தொடர்ந்து அவரோடு பணி புரிவது எப்படி. ? இதை விசாரிப்பவர்கள் இதற்குத் தகுந்த தீர்வளித்துள்ளார்களா. ?   இதற்கு நிறுவனங்களின் பதில் என்ன. ?  

5 கருத்துகள்:

  1. பாலியல் தொந்தரவுகளை எதிர்க்கும் பெண்களைவிட சூழ்நிலை காரணமாக சகித்துக் கொள்ளும் பெண்களும்,தனக்குச் சாதகமாக பயன்படுத்த்கிக்கொள்ளும் பெண்களும் அதிகமாகிவிட்டனர் என்பது எனது கருத்து.

    இப்படியான ஆண்களின் ஆசை தீர்க்கும் குணம் ,வழிகளும் அதிகமாகிதான் உள்ளது.வாய்ப்புகள் எளிமையாகவே அமைகின்றது.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்பா :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  3. நல்லா பொறூப்புடன் எழுதி இருக்கீங்க..

    வைரமுத்துவைப் பத்தி பல பெண்கள் அனானிமஸாக சொல்லியிருப்பது, நம்ம ஊர் தமிழ்ப் பேராசிரியர்கள நினைவு படுத்தியது.

    போன ஜெனெரேசனில் எங்க குடும்பத்தில் எல்லாம் பெண்கள் வேலைக்குப் போவதையே அனுமதிக்க மாட்டாங்க, காரணம்? ஆண்கள் அப்படி இப்படி நடந்து கொள்வார்கள் என்பதால். சினிமா என்றால் கேட்கவே வேணாம்.

    சினிமால எல்லா ஆம்பளயும் யோக்கியனாக எதிர்பார்ப்பது என்னவோ அதிகம் எதிர் பார்ப்பது போலுல்ள்ளது.

    ஒரு நடிகை ஒரு நடிகருடன் காதல் சீனில் நடிக்கும்போது அவர் வரம்பு மீறீனாரா இல்லையா என்பதை எப்படி சொல்வது? வரம்பு மீறூவதுதான் ரசிகர்கள கவரும் என்றூ எதிர்பார்க்கப் படும்போது..நடிகர் லைனை க்ராஸ் பண்ணீயே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்ல என்னை தங்கைபோல்தான் நினைக்கணூம் என்றூ வாதம் செய்வது கேலிக்கூத்து.

    கமலஹாசன் ஶ்ரீதேவி இறந்த பிறகு அவரை தங்கை என்றது எரிச்சலைத்தான் தந்தது. எதுக்கு இப்படி ஒரு பொய் சொல்லணூம் என்றூ

    இதில் சின்மயி குற்றச் சாட்டில் அத்தனை பெரிய அத்துமீறல் தெரியவில்லை. எனக்கென்னவோ வைரமுத்து இவரை அழைத்து இருந்தாலும் சும்மா சுவிட்சர்லாந்தில் தனிமையில் வாடும்போது சும்மா சாட் பண்ணக் கூட அழைத்து இருக்கலாம். இவர் மிகைப் படுத்திச் சொல்வது போலல்லாமல். இருந்தாலும் எனக்கு உண்மை என்னனு தெரியாது.

    தன் கணவனை எதற்கு எடுத்தாலும் உலகிலேயே யோக்கியன் என்பதுபோல் இவர் ட்வீட்டில் சொல்வது சின்னப் பிள்ளப்பிள்ளத்தனம். இவர் அம்மா வாழ்க்கை பற்றீ தெரியவில்லை. சிங்கிள் மதராக இவரை வளர்த்து ஆளாக்கி இருக்கார். அப்பா இல்லாத்தால், அம்மா வாழ்க்கை இப்படி ஆனதால், இவருக்கு ஆண்கள் மீது அதிக சந்தேகங்கள் வர வாய்ப்புண்டு. இவர் மனநிலை சாதாரண குடும்பத்தில் பொறூப்பான தந்தை தாய் என்றூ வளர்ந்த பெண்கள் போலில்லாமல் இருப்பது போல் உள்ளது.

    பொதுவாக ஆண்கள் தவறூ செய்திருப்பார்கள் என்றூதான் பலரும் நம்புகிறார்கள். ஆண்களூம்தான். இருந்தாலும் இப்படியே பார்த்தால் எல்லா ஆண்களயும் பிடிச்சு உள்ளேஎ போட வேண்டிவரும். அப்படி நடந்தால், எத்தனை ஆண்கள் வெளீயே இருப்பாங்க?

    சின்மயி ஹஸ்பண்ட், சித்தார்த் ரெண்டு பேரு மட்டுமா?

    -----------------

    இந்தியாவில் அடல்ட்டரி லீகல். அதாவது ஒரு பெண்/ஆண் தாம்பத்ய உறவில் உள்ள பார்ட்னரை ஏமாத்தலாம். அதில் சட்டப்படி தவறேதும் இல்லை. இப்படி தவறூ செய்தவர்கள் எப்படி இந்நிலைக்கு ஆளானாங்க? முதல் படி செக்சுவவல் அட்வாண்ஸ். சரியா? அப்படி செய்யும்போது

    1) சரி என்றூ அவ்வுறவுக்கு தானும் போயிவிடுவது தப்பில்லை. அது பெண் உரிமை அல்லது ஆண் உரிமை.

    2) When you dont think he is the right person for you. what do they do? என் கையைப் பிடிச்சான். என்னிடம் தவறா நடந்தான். மீ டூனு குய்யோ முறயோனு கத்துறது.

    இது இரண்டிலுமே முதல்ப்படி "inappropriate sexual advance" இருக்கு. Correct?!!

    இந்த முதல் வகுப்பில் இதற்கு இணங்கிய பெண்கள் பத்தி மீடூ என்ன சொல்லுது? மேதை சாலினி என்ன சொல்றார்? Thats OK? Legal? அங்கே செக்ஸூவல் அட்வாண்ஸ் தப்பில்லை. ஏனென்றால் பெண்ணூக்கு அந்த தவறான அனுகுமுற பிடிச்சு இருக்கு. அப்டினா??

    Sexual advances are the first step for both cases.

    How can you say the second one is wrong then?

    Because when one is making sexual advance you would not know what will be the result. It could be case 1) or 2). Correct?

    There is lot more to analyze here I think.

    BTW, Child molesting is something I cant stand. So I am not having any argument there, at least for now.

    பதிலளிநீக்கு
  4. மீ டூ (Mee Too) முகநூலில் பகிரப்படும் சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகள் குறித்து இடம்பெற்ற விவாதம் இன்றைய எதார்த்தத்தைப் படம் பிடித்து காட்டியிருப்பது உண்மை. என்றாலும் பலரின் முகமூடிகள் கிழிகிறதே. சம்பந்தப்பட்டவர் பிதற்றுகிராரே. பொது வாழ்வில் CHECKS & BALANCES MEETOO வினால் வந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  5. மிக விலாவாரியான அலசல் வருண். நன்றி கருத்துப் பகிர்வுக்கு. நிறைய சிந்திக்க வைத்தது.

    உண்மைதான் முத்துசாமி சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...