வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

குட்டிம்மாவும் குலசாமியும்.

1. செவ்வண்ணப் பறவைகளாய்
ஓடும் ரயிலுக்குள் புலம் பெயர்கிறார்கள்
கண் சிறகில் வெய்யில் விசிறிக்
கைவிரித்துத் தாவும் கைக்குழந்தைகள்.

2. காக்கையில்லாதபோது
தமக்கையின் குழந்தையை
சோறுண்ணவைக்க
அம்புலி மாமாவாகிறான்.

3. நட்சத்திரப் பருக்கைகளை
இரவுக் காக்கைக்கு வீசிவிட்டு
நிலவுக் குழந்தை துயில
மேக மெத்தையை போடுகிறது வானம்.4. பவள இதழ்களால்
முத்தமிட்டது குழந்தை..
தங்கமும் வைரமும்
தலைக்கனம் அழிந்தன.

5. விளையாடும் பொருள்அலுக்கும்போது
யானையைக் கையில் கேட்டு
அடம்பிடிக்கிறது குழந்தை..


.6. மருந்துரைக்கும் கல்
முட்டைக்கிளாஸ் விளக்கு
தொட்டிக் கம்பு
புராதனச் சின்னமாகி விட்டன
சின்னு வளர்ந்ததும்..


7. மலர்க் கண்காட்சியில்
வண்ணப் பூக்கள்
வெட்கித் தலைசாய்ந்தன
பூங்கொத்தாய் வரும்
புஜ்ஜுவைப் பார்த்து

8. அச்சுவெல்லம் கருப்பட்டி
கரும்பு ஜூஸ் கசக்கிறது
பிள்ளையின் எச்சில்பட்ட
தண்ணீரைக் குடித்ததும்..

9. . திருவிழாவில் உலா வரும்
குலசாமியைப் பார்க்க
தோளில் அமரும் குட்டிச்சாமி

10 . அம்மன் கோயில் கூழாய்
இனிக்கிறது
அம்மு கைபட்டுக் குழப்பிய சோறு.

11. தொலைக்காட்சியில் வரும்
பொம்மை வில் கேட்டு
தரையில் விழுந்து அடம்பிடிக்கிறது குழந்தை..
அடுத்து வரும் அட்டைக் கத்தி பார்த்து
அதை மறந்து இதைக் கேட்கிறது..

டிஸ்கி :- இந்தக் குட்டிம்மா தாமோதர் சந்துரு அண்ணனின் பேத்தி. (அருணின் மகள் ) மிரா. :) 

4 கருத்துகள் :

தாமோதர் சந்துரு சொன்னது…

பேத்தி மிர்ராவின் புகைப்படத்துக்கு நன்றி சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி அண்ணா :)

Thenammai Lakshmanan சொன்னது…வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அழகு அழகு!!! பாட்டுதான் நினைவுக்கு வருகின்றது. குழந்தைப் படமும், உங்கள் கவிதைகளும்....

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...