எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 பிப்ரவரி, 2016

சிலந்தி



நிமிடங்கள்
சிலந்திவலைகளாய்ச் சுருங்கும்.
நேற்றுப் பிறந்த கவிதை போல

சிலந்தியோ இடம்பெயர்ந்து
புதிது புதிதாய்க் கூடுகட்டும்.
வீட்டின் அத்தனை மூலைகளிலும்

நல்ல குடிலுக்காய்
நாவும் மனமும் தவிக்க
எங்கெங்கும் அலையும் சிலந்தி

அதற்குத் தெரியாமலே
அதன் இனிய கவிதைகள் பல
ஒட்டடையாய் மூலையெங்கும்
அப்பிக் கிடக்கும்.

-- 84 ஆம் வருட டைரி.

7 கருத்துகள்:

  1. சிலந்தி வலை தந்த கவிதை
    எங்கள் மனங்களையும் சிக்க வைக்குது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //நிமிடங்கள் சிலந்திவலைகளாய்ச் சுருங்கும். நேற்றுப் பிறந்த கவிதை போல

    அதற்குத் தெரியாமலே அதன் இனிய கவிதைகள் பல ஒட்டடையாய் மூலையெங்கும்
    அப்பிக் கிடக்கும்.//

    சூப்பர் !

    84-ஆம் வருட டைரியை தூசி தட்டி இப்போ எடுக்கும்போது அதில் இத்தனை அழகான ஒட்டடைகளா ? :)

    கவிதையும் கருத்துக்களும் அழகான சிலந்தி வலையாய் என் மனதில் புகுந்து விட்டது! :)

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஹனி மேடம்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி ரமணி சார்

    நன்றி விஜிகே சார்

    நன்றி நாகேந்திர பாரதி

    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு


  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...