பெண் பூக்கள்
முள்ளும்
மலரும் என்கிற தலைப்புக்கு முள் மற்றும் மலர் என்று ஒரு அர்த்தம், மற்றும்
முள் கூட மலரும் என்று விளக்கம் சொல்வார்கள் அந்தக் காலத்தில்.
அதுபோலவே
இந்தப் புத்தகத்தின் தலைப்பு. பூக்களில் ஆண், பெண் உண்டா என்ற கேள்வி.
பூக்களாகிய பெண்கள் என்று ஒரு அர்த்தம். பெண்கள் எல்லாம் பூப் போன்றவர்கள்
என்று சொல்வது..கவிதைகள் எளிமையாய் இருக்க வேண்டுமா? புரியக் கஷ்டமாய் வார்த்தைகள் இடம்பெற வேண்டுமா?
பிறைசடையில்
இருந்து நழுவி
ஜடை நாகங்களில்
குடியேறி
சுவாசினிகளின்
மருதாணிக் கரங்களின்
வருடல்களில்
வெட்கத்துடன் நான்...
புரியவில்லை!
கவிதை வரிசையில் முல்லைக் கவிதை டாப்.
சப்பாத்திக் கள்ளியின் வழி சொல்லும் சோகம், அதிலேயே தன்னம்பிக்கை - அழகு!
ஆமாம், ஐயங்கார்ப் பெண்களின் மூக்கில் அப்படி என்ன விசேஷம் தேனம்மை?!!
பூசணிப் பூவுடன் விழித்துக் காத்திருக்கும் உழைப்பாளியின் இரவு சுவாரஸ்யம்.
துணையின் மனதறியாத ஆக்கிரமிப்பு அண்மை டேபிள் ரோஸில்! அதில்,
என் கண் எனும் ரிமோட்டில் உன்
மனத்தை எனக்கேற்றதாக மாற்றுகிறேன்
என் கண்ணுக்கு விருந்தாய்..
எப்படி உணர்கிறாய் உன்னை நீ..
அறிய விழைந்ததில்லை..
எப்படி உணர்கிறாய் 'உன்னை' நீ யா? 'என்னை' நீயா?
ஸ்கோர்,
பல்ஸ் போன்ற ஆங்கில வார்த்தைகளும், ஹிஜரப், ஹாசல்நட் போன்ற அந்நிய
வார்த்தைகளும் சில சமயம் கவிதையை சற்றுத் தள்ளி நிறுத்துகின்றன!
அனிச்ச மலருக்கு அடுத்தடுத்து இரண்டு பக்கங்கள். உணர்ச்சி வெள்ளம்!
அந்திமந்தாரையில் கல்கியின் பொன்னியின் செல்வப் பாத்திரங்கள்.
எப்படித்தான் எழுதுகிறீர்களோ இப்படி எல்லாம் கவிதை! படிக்க மட்டுமே தெரிகிறது எனக்கு!
பாராட்டுகள் சகோதரி தேனம்மை.
************************************
இங்கேயும் படிக்கலாம்.
http://engalblog.blogspot.com/2015/11/blog-post_24.html
மீண்டும் நன்றி எங்கள் ப்லாக் & அன்பு சகோ ஸ்ரீராம். :)
பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், ஹனி மேடம்.
பதிலளிநீக்குஅங்கு ‘எங்கள் ப்ளாக்’ பதிவிலும் 24.11.2015 அன்று என்னுடையதே முதல் கமெண்ட்:
oooooooooo
வை.கோபாலகிருஷ்ணன் said...
மிகவும் அருமையான விமர்சனம். பாராட்டுகள். வாழ்த்துகள். முதல் படத்தில், பயணத்தில் உள்ள தேனை, அப்படியே சிந்தாமல் சிதறாமல் எப்படித்தான் பிடித்தீர்களோ ! :) ஆச்சர்யப்பட்டேன். மிக்க நன்றி, ஸ்ரீராம். ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !
oooooooooo
நல்ல நூல் விமர்சனம்... ஸ்ரீராம் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களுக்கும்தான் அக்கா..
அங்கேயும் படித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅருமையாகச் சொன்னதால் தேனாக இனிக்கிறது. வாழ்த்துகள் தேன் வாழ்த்துகள் ஶ்ரீராம்.
பதிலளிநீக்குநன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துகளும், பாராட்டுகளும்!
மிக மிக நன்றி விஜிகே சார். நான் பயணத்தில் இல்லை . இது சாஸ்த்ரி பவனில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்றிருந்தபோது எடுத்தது.
பதிலளிநீக்குநன்றி குமார் சகோ
நன்றி வெங்கட் சகோ
தேன் வாழ்த்துக்கு நன்றி வல்லிம்மா
மிக மிக நன்றி ஸ்ரீராம். !!!