எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 பிப்ரவரி, 2016

வாழ்த்துகள் உமா, அகிலா, ஷான், ராஜசுந்தர்ராஜன் !!! வாருங்கள் கொண்டாடுவோம். :)

எங்கள் அன்பின் உமா, அகிலா மற்றும்  நண்பர்கள் ஷான், ராஜசுந்தர்ராஜனின் நூல் வெளியீட்டை என் வலைத்தளத்தில் பகிர்வதில் பெருமையுறுகிறேன்.

தோழி உமாவின் நூல் துயரங்களின் பின்வாசல் - கவிதைத் தொகுதி.

 தலைமை,வெளியீடு,சிறப்புரை:
திரு.பிரபஞ்சன் அவர்கள்


முதற்பிரதி பெற்று வாழ்த்துவோர்:

கவிஞர் சுகிர்தராணி அவர்கள்
கவிஞர் தி.பரமேசுவரி அவர்கள்
கவிஞர் சக்திஜோதி அவர்கள்

ஏற்புரை: கவிஞர் உமாமோகன்

நன்றி:பி.என்.எஸ்.பாண்டியன்-பதிப்பாளர்
வெர்சோ பேஜஸ்



புதுவை தமிழ்ச்சங்கம் ,வெங்கட்டா நகர்,புதுச்சேரி




தோழி அகிலாவின் நூல் நாங்கதாங்க பெண்கள். - கட்டுரைகள்.

  நாங்கதாங்க பெண்கள் நூல் வெளியீடு..
மனசுக்குள்ளே அதிகமாக எதையும் வச்சுக்கமாட்டோம்ங்க. கொஞ்சமாக அழுவோம், ஆனால் நிறைய சிரிப்போம். வெளிவேலையும் பார்ப்போம், குடும்பத்தையும் அரவணைச்சுக்குவோம். எங்க கிட்டேயும் நிறைகளும் குறைகளும் இருக்கு. அதையும் இந்த புத்தகத்தில் அலசியிருக்கேன்.
பெண்களைப் பற்றி மட்டும்தான் எழுதுவீங்களா, எங்களை பற்றி இல்லையான்னு ஆண்கள் கேட்பது காதில் விழுகிறது. ஆண்களையும் தான் இதில் எழுதியிருக்கிறேன்.
கொஞ்சம் பெண்ணின் பார்வையில் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். உங்களை அப்படி இப்படின்னு விமர்சித்தாலும், நிச்சயமாய் நீங்க இல்லாம, பொம்பளைங்க நாங்க இல்லைங்க. எங்க மனசுல உங்களை எல்லாம் மரியாதையான இடத்தில்தான் எப்போவும் வச்சிருப்போங்க.
.................
இப்படிதாங்க போகுது இந்த புத்தகம் முழுவதும்...
உங்களின் வருகையையும் வாழ்த்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.
அனைவரும் வாங்க...smile emoticon
இடம் : கோவை நாடார் சங்கம், டாடாபாத், கோவை
நாள் : 21-2-2016, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி

நண்பர் ஷானின் ள் நூல் வெளியீடு. கவிதைத்தொகுதி.

கனவுப் பிரியன் அவ - என்பது பொது. இந்த " ள் " தானே குறியீடு. ஒரு எழுத்தில் ஒரு மலையை கட்டி தொங்க விட்டது போல உள்ளது. இன்னும் என்னென்ன இருக்குமோ இந்த ள்-லுக்குள். வாழ்த்துகள் கவியே
 
நண்பர் ராஜசுந்தர்ராஜனின் தாய் வீடு - கவிதைத் தொகுதி.

 மார்ச்-12-ம் தேதி ஈரோடு இலக்கியச் சுற்றத்தின் மூலம் வெளியீட்டு விழா காணவுள்ள டிஸ்கவரி புக் பேலஸ்-ன் பெருமைக்குறிய புதிய வெளியீடு கவிஞர் Raja Sundararajan “தாய்வீடு” கவிதைத் தொகுப்பு. புதிய கவிதைகளோடு அவரது முந்தைய அனைத்துக் கவிதைகளையும் உள்ளடக்கிய முழுமையான தொகுப்பு. விலை.ரூ170

----- வாழ்த்துகள் உமா, அகிலா, ஷான், ராஜசுந்தர்ராஜன் !!! வாருங்கள் கொண்டாடுவோம்.  :)

6 கருத்துகள்:

  1. நூல் அறிமுகமாய் ஆரம்பித்து நூலாசிரியர்களை (என்னையும் சேர்த்தே) உலகுக்கே வெளிச்சமிட்டுக் காட்டிடீங்க தோழி. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
    மற்ற நூலாசிரியர்களுக்கும் (உமா, ஷான், ராஜசுந்தரராஜன்) என் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. எல்லோர்க்கும் வாழ்த்துகள்! பாண்டிச்சேரிக் கூட்டம் எத்தனை மணிக்கு என்று தெரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  3. தகவலுக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றிடா அகிலா

    நன்றி ராஜசுந்தராஜன். காலையில்தான்னு சொன்னாங்க ராஜன்.

    நன்றி விஜிகே சார்

    பதிலளிநீக்கு
  5. தகவலுக்கு மிக்க நன்றி. எல்லோரையும் வாழ்த்துவோம்...லேட்டாக வந்தாலும் வாழ்த்துகள் எப்போதும் சொல்லலாம் அல்லவா!!!

    பதிலளிநீக்கு
  6. அதானே நாம் லேட்டாகவந்தாலும் லேட்டஸ்டா வாழ்த்துவோம் துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...