எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 ஜனவரி, 2016

கவியரங்கம். விவேகானந்தர் – சீடர்



இது 7.09. 2011, குரோம்பேட்டை RFVV பள்ளியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளச் சென்றபோது எடுத்தது. ஆனால் இந்தக் கவிதை கல்லூரிப் பருவத்தில் எழுதியது. :)


15.1.85 நாங்கள் ஐவர் பங்கு பெற்ற விவேகானந்தரைப் பற்றிய கவியரங்கம். அதில் எனக்குக் கிடைத்த தலைப்பு விவேகானந்தர் சீடர். 

கவியரங்கம். விவேகானந்தர் – சீடர்

தெரியாமல் மிழற்றினேன் மழலையிலே
தெரிந்தே உளறுகிறேன் இளமையிலே
இன்பத்திலும் துன்பத்திலும்
வார்த்தைச் சிதறுகிறேன்.
மலையைக் குடையும் புழுவாய்
மனம் நோகப் பண்ணிடினும் மனம் நெகிழ்ந்து
மடிமேலமர்த்தும் ப்ரிய தாய்க்கு
எச்சிற்பட்ட வார்த்தை முத்தங்கள்.

தரிசாய்க்கிடந்த என்னைச் செதுக்கி
நன்செய்யாக்கிய பாத்திமா உரத்துக்கு
ஆயிரம் கோடி வந்தனங்கள்.

தலைமைச் சந்திரனுக்கும்
பக்கத்தாரகைகளுக்கும் வணக்கங்கள்.
ஆசிரிய உழவர்க்கும் நன்செய்ப் பயிர்களுக்கும்
நேசம் நிறைந்த நமஸ்காரங்கள்.

சிறந்த சீடனெனக் கவியிசைக்கத்தான்
கையிலெடுத்தேன் விவேகானந்தனை
எடுத்தவள் வைக்க மறந்துபோய்விட்டேன்
மெய்மை இடம் பொருள் காலம் அனைத்தும் மறந்தேன்

விவேகானந்தச் சூரியனுக்குப்
ப்ரகாசிக்க ஞான ஒளி காட்டிய
இராமகிருஷ்ண பரமஹம்சருக்கும்
சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.


வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும்
அவன் கற்றுக்கொண்டது நிறைய
அவன் வழிகாட்டியாய் அறிஞனாய்
ஆன்மீகவாதியாய் பயணியாய் அமைய
ஆரம்பமே அவன் சீடனாயிருந்து
அறியும் தேட்டமுடையவனாய் இருந்ததே.

மூன்று ஞானாசிரியர்களைப் பெற்றவன் இவன்
முதல் ஆசிரியர் தாய்
இரண்டாவது வண்டிக்காரர்
மூன்றாவது இராமகிருஷ்ணர்.

தாயின் மூலம் இறைையப்
பற்றி பரந்துகொள்ள முடிந்தது.
இறக்கும் தருவாயிலும் ப்ரார்த்தனை
செய்துகொண்டு இருந்தவன் அவன்
குரலைக் கீர்த்தனைப் பூக்களாக்கி
அர்ச்சித்து மகிழ்ந்தான்.

வண்டிக்காரன் மூலம் வாழ்க்கையைப் பற்றிய
மாயங்கள் விலகி உண்மையை
அறிந்துகொண்டான்.

இராமிரஷ்ணன் என்ற அருட்புனல்
ஒரு அறிவுக்ானக்ாக்கியு.  

சுயநலத் தகிப்பும்
துன்பத் தீச்சுவாலைகளும் நிறைந்த
விவாகமெனும் குப்பைத் தீயில்
குளிர்காய்வதொழித்து
விவேகமாய் நின்றவன்.

அழிந்து போகும் மட்கலங்களுக்கிடையில்
அதிசயமாய் வனையப்பட்ட
இரும்புக் கலம் அவன்.

அவன் ஒரு ஞானச் சங்குதான்
ஆனால் அது ராமகிருஷ்ணரால்
ஊதப்பட்ட பின்தான் அதனுள் மறைந்திருந்த
ஜீவித ஒலி புரிந்தது.

பட்டகாலிலே படும் என்பதாய்
எத்தனை துன்பங்கள்.
அவ்விளைஞனைச் சூழ்ந்தது.
அடிமேல் அடித்தால் அம்மியும்
நகரும் என்பது பொய்யானது
இவன் நிலையில்

தந்தை இழந்து அடிப்படைத் தேவைகளும்
தேடப்படவேண்டிய சூழலில்
அவனுள் அறிவுத்தேட்டம்
உணர்விழந்து போகவில்லை.
பட்ட மரத்திலே பட்ட கட்டாரியாய்
துன்பங்கள் மோதித் தோற்று ஓடின.

 இவன் சட்டத்தில் பட்டம் பெற்றும்
புறம் வெறுத்து அகத்தில்
ஆத்மத் தேடுதலில் முகிழ்ந்தான், மூழ்கினான்.
த்ேடில் ாகுண்டாய் ஆனான்
பரம்பொருட் தேடலில்
சிறந்த வழிகாட்டி பெற்றான்.

இவன் ஒரு மல்லிகைப் பந்தல்தான்
இராமகிருஷ்ணக் காற்றில் 
கலக்கப்பட்டபின்தான்
இவன் மணம் உலகிற்குத் தெரிந்தது.

இவன் ஒரு வித்யாச ஜன்னல்
இறக்கும்போது இராமகிருஷ்ணர்
இவனுள் பரவவிட்டது ஞானத் ென்றல்.

இவன் பேறு பெற்றோன்.
இவன் பேறு பெற்றோன்
இல்லையில்லை இந்தச் சீடனால்
இராமகிருஷ்ணர்தான் பேறு பெற்றார்.

நல்லாசிரியனுக்கு மாணவன் தவங்கிடக்க
இங்கே அன்னமாய்த் தண்ணீரிலிருந்து
விவேகானந்தர் கிடைக்க அந்த
ஆசிரியும் தவம் செய்ார்.

அறிவுக் கூர்மையுடைய புவனேஸ்வரிம
பெற்றெடுத்த நரேந்திரன் விவேகனானான்
இந்த யாககுண்டத்துள் ஆசிரியர்
வேள்வித்தீ மூட்டி
உலகத்தனைக்கும் ஞானக்கங்குகள்
அளிக்கச் சொன்னார் .

இந்தச் சீடன் 
தானே அந்த
வேள்வித்தீயில் மூழ்கி மூழ்கிச்
சுகம் காண விரும்பினான்.

ஆசிரியர் சொன்னார்
“உனக்களிக்கப்பட்ட அந்தச்
சுகானுபவத்தை உலகுக்கும் அளி 
பின்பு அந்தப் பேருலகு
உனக்கு வழங்கப்படும். 
அதன் திறவுகோல்
என் கையிலென்றார் !”

அவன் கடைசி ஆசைகள் 
அனைவர்க்கும் ஆத்மசாசனம் செய்வித்தலும்
மடாலயம் ஸ்தாபித்தலுமாயின.
கருமமே கண்ணாயினான் அவன்.

ஆசிரியரை இழந்ததும் அனைத்தையும்
மறுக்கும் மக்கு மாணவனல்லவே அவன்.
அவன் நெருப்பிலிடப்பட்ட
வெண்சங்கு. எனவே
வெண்மையே கண் கூடும்படி
ஒளி உமிழ்ந்தது.
ன் த்ின்
ஒவ்வொரு அணுவும்
ுருவின் பெயர் சொன்னு.  

அவன் ஒரு ஆழ்கடல்.
உலகமெல்லாம் சுற்றினான் சுற்றினான்.
த்ுக்கைக் கண்டெடத்ான்.
பாலாவியாய் அவனுள்ளிருந்து எழும்
அத்தனை கருத்துகளும்
மற்ற ஆத்மா தூய்மைப்படுத்திப் போட்டன.
ஞானத் தேட்டம் சமப்படுத்தின. 

அவன் நிகழ்த்திய ஒவ்வொரு 
நிகழ்ச்சியிலும், இடத்திலும்
யாராலோதான் முன் நடத்தப்படுவது
அவனால் உணரப்பட்டது.

ஆசிரியரின் ஞானப் ப்ரகாசம்
ஜோதிவடிவில் அவனுள் புகுந்
ந்திரந்து.  .

அவன் ஆசிரியரால் ஆட்கொள்ளப்பட்டு
மொட்டுக்கு மலரச் சொல்லிக் கொடுப்பதுபோல்
பேரின்ப உலகிற்கு அழைத்துச் செல்லப்பட்டான். 

ஆசிரியரின் கடைசி வேண்டுகோளே
ாணாக்கனின் தாரக மந்திரமாய்
வேதமாய்க் குறிக்கோளாய் ஆனது.

இலக்கை அடைய இவன் தனக்கு
மாட்டிக் கொண்டது பிரம்மச்சர்ய சேணம்.
அவன் உலகின் எந்தக் கோடிக்குச் சென்றாலும்
இராமகிருஷ்ணரின் சீடனாகத்தான் சென்றான்.

அவர் தனக்குள் விதைத்த
ஞானப் பயிர்களை முற்றிய கதிராய் விளைத்துச்
செல்லுமிடமெல்லாம் சிதறிச் சென்றான்.
இல்லையில்லை விதைத்து நீரூற்றிச் சென்றான்.

நன்கு பராமரிக்கப்பட்ட 
மாமரங்கள்தானேவேனிலில்
உடல் குளிர்க்கும் 
கனிகள் அளிக்கின்றன. 
அவுள் ஒரு எரிமையின்
ஏக்கம் கன்று.  
அவனுள் ஒரு ஆழ்கடல்
குமுறிக்கொண்டிருந்தது.

இரவிலும் பகலிலும் 
வெளிச்சத்திலும் இருளிலும்
விழிப்பிலும் தியானத்திலும்
ஆசிரியரின் ஆணையை நிறைவேற்ற
வேண்டுபவனானான்.
ந்த உலம் உய்யும் வை காணேண்டும்.
ற்காக சீடனா அவன்
ஒரு அறிஞனாக ஆன்மீகவாதியாக 
பயணியாகவும் வழிகாட்டியாகவும் ஆனான்.

தான் கொடுத்த வாக்கை எண்ணி அவன்
முடிந்தவரை ஆத்மாக்களின் உளைச்சல்களை
அமைதிப்படுத்தும் மருந்தாகினான்.  

ஆசிரியரின் திருப்பெயரால்
அன்னானும் வித்ானும்  
ான ானும் நல்கும்
ள்ளிகையும்ாலங்களையும் 
அமைத்துவைத்தான்.

அதற்கெனவே காத்திருந்து
தன் முடிவின் விரைவை
அறிந்தவன் போல் கடமை முடிந்து
சாகரப் பட்சியாய்த் தவித்துக் கிடந்தான்.

இவனே வழி பிறழாத சீடன். 
இவனே நேர்மை 
இவனே வாய்மை
இவனே மெய்மை.

இவனின் குருவிசுவாசம் அறிந்தாவது
நாம் நமது ஆசிரியத் தேவர்களின்
அடிபணியக் கற்றுக் கொள்வோம்.
வாருங்கள் 
நாமனைவரும் இவனின் வழிகளில்
சில வழிகளேனும் சென்று பார்ப்போம்.

ஆத்மத் தேட்டங்களுக்கு
நாம் ஆசிரிய வழிகாட்டிகளின்
விளக்கம் பெறுவோம்.
தேட்டமுடைய விசுவாசிகளாயிருப்போம்.
சிறந்த சீடர்களாயில்லாவிட்டாலும்
சீடர்கள் என்ற அளவிலேனும் இருப்போம். 

ாசுக்காய் குகைப்ிழிந்தும்
ற்பைகை ஒுக்கிவிட்ட
ானத்ால் விகாட்டும் 
ூல்குக்க ண்பாவோம்.

ட்டத்ிற்காய்க் கல்வி
ேலைவாய்ப்புக்காய்க் கல்வி என்ற
ுறிக்கோள் வட்டம்
அறிவுக்காய்க் கல்வி
ல்வாழ்வுக்காய்க் கல்வி
த் ானத்ுக்காய்க் கல்வி
என்று விரிவையச் செய்வோம்.        

-- 85 ஆம் வருட டைரி.

5 கருத்துகள்:

  1. //சுயநலத் தகிப்பும் துன்பத் தீச்சுவாலைகளும் நிறைந்த
    விவாகமெனும் குப்பைத் தீயில் குளிர்காய்வதொழித்து
    விவேகமாய் நின்றவன்.//

    ஆக்கத்தின் வரிகளில் நல்லதொரு
    ஊக்கத்துடன் கூடிய
    தாக்கம் தெரிகிறது. பாராட்டுகள்.

    இரண்டாவது படத்தில் புன்னகை அரசியின் அந்தச்சிரிப்பு
    வழக்கம்போல் பளிச்சோ பளிச் :) வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் அக்கா...
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி விஜிகே சார்

    நன்றி ஜம்பு சார்

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி குமார் சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...