எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

விஸ்வரூபம்.. எனது பார்வையில்

விஸ்வரூபம்..

ஒரு பெரியவர் புறாக்களுக்கு தீவனம் அளித்தபடி தோன்றுகிறார். ஒரு புறாவை மட்டும் எடுத்துப் பறக்க விடுகிறார். பின்னால் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர்  “ இவர் கமலஹாசனா.. ? “ இன்னொருவர் “ இவர் கமலஹாசனாவும் இருக்கலாம். அவர் எந்த ரோலும் பண்ணுவார்.” என்கிறார்.

பயங்கர எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்கத் துவங்குகிறோம். விஸ்வநாதனின் மனைவி பூஜா குமார் தனக்கு ஏற்படும் சமீப அனுபவங்களை ஒரு டாக்டரிடம் பகிர்கிறார். அதே நேரம் ஒரு டிடக்டிவை ஏற்பாடு செய்து தன் கணவரைப் பின் தொடரச் செய்கிறார். அவர் புகைப்படம் எடுத்து  பூஜாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதை பதிவு செய்கிறார். கண்ணாடிச் சுவர்களுடன் மாஸ்க் என்பது வெளிநாடுகளில் இருக்குமோ.. # டவுட் நம். 1.


ரசிக்கத்தக்க அம்சம். கமலின் வழக்கமான அட்டகாசமான நடனம். இவன்தாண்டா கலைஞன் என்று திரும்பவும் எண்ணத் தோன்றுகிறது. கதக் நடனக் கலைஞனாக எத்தனை எத்தனை அற்புதமான முகபாவங்கள்.  ஆனால் பாட்டு மைக்ரோவேவ் ஓவனிடம் போனவுடனே நின்றிருக்கலாமோ.. டவுட் நம் # 2.ரெண்டாவதாய் நீண்டு எப்படா முடியும் என்று தோன்றியது.  ஒரு வேளை மொத்தப் படத்தையும் வெட்டு வெட்டு என்று வெட்டி விட்டதால் இதாவது பெரிதாக இருக்கட்டும் என்று ஜவ்வாக இழுத்திருப்பார்கள் போலிருக்கிறது. ஜாதி சார்ந்த பேர் சொல்லிக் கூப்பிட்டு சிக்கனை ருசி பார்க்கச் சொல்வதைத் தவிர்த்திருக்கலாம்.

ஆண்ட்ரியா சிக். பூஜா குமார் வள வளா வசனம். இளமையாக இருக்கிறார்கள். திடீரென்று அசின் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது. ( தசாவதார ப்ளா, ப்ளா எஃபெக்ட்). ஆல் இன் ஆல் கமலாகவே இருப்பதால் அவர் விஸ்வநாதனாக இருந்தாலும், விஸாம் அகமத் காஷ்மீரியாக இருந்தாலும் அவர் இந்தியாவுக்காகவே போராடும் ஒரு இந்திய வீரன் என்பதை முடிவில் தெளிவாக சொல்கிறார். சிலசமயம் எல்லாரும் சொல்வது போல் இங்கே சுஜாதா இல்லை என்பதையும் உணர முடிகிறது.

அல்கொய்தா, தாலிபான், தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை பேப்பர் மூலமும் தொலைக்காட்சி மூலமும் தெரிந்து கொள்கிறோம். இது அவர்களின் கோட்டைக்குள்ளே சென்று பார்ப்பதைப் போல யதார்த்தமாக இருந்தாலும் நிறைய தெளிவற்ற வசனங்களால் ஒன்றுமே புரியவில்லை.

தெனாலி படத்தை ஒரு நண்பர் குடும்பத்தோடு நெய்வேலியில் பார்த்தோம். அவர்கள் இலங்கைத் தமிழ் ஒன்றுமே புரியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மிகவும் ரசித்த படம் அது. ஆனால் இந்த பஷ்தூன், ஆஃப்கானிஸ்தான் மொழிகள், அரபு, உருது, பேச்சுக்கள் புரியவே இல்லை. கண்டின்யுடி இல்லாமல் ரொம்பக் குழப்பம்.

ஒன்பது இடத்தில் கட் என்று சொன்னார்கள். ஒன்பது இடத்தில் ஒன்பது தரம் கட் என்று சொல்லவில்லை. அப்படியே ஸ்டில்லாக பின் பகுதியில் பெரும் நேரம் காட்சி திரையில் நின்றபடி இருக்க ரங்ஸ் தூங்க ஆரம்பித்து விட்டார். ரசிகர்கள் விசிலடித்தும், ஏய், ஓய், ஆபரேட்டர் என்னா தூங்கிட்டியா, நாங்க தூங்கப் போகணும்யா படத்தை போடு எனக் கூச்சலிட்டபடி இருந்தார்கள் ( செகண்ட் ஷோ).பிட்டு பிட்டாகப் படத்தைப் பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டியதாக இருந்தது.

முதலில் ஹாலிவுட் தரத்துடன் ஒரு சண்டைக் காட்சி  இருந்தது. ஆனால் அதை ஏன் ஏஷியன் ஸ்போர்ட்ஸ் மாதிரி அல்லது கிரிக்கெட் மாதிரி ஸ்லோமோஷனில் ஆக்‌ஷன் ரீப்ளே.. ஒரு வேளை ரசிக கண்மணிகளுக்கு அந்த ஸ்டண்டின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுப்பதற்காக இருக்குமோ,. டவுட் நம் #3.

விஸ்வநாதன் கிருஷ்ணனை அழைத்துப் பாடுகிறான். விஸாம் அல்லாவை நினைத்துத் தொழுகிறான். ஆனால் யார் கடவுள் என்ற வழக்கமான கேள்வி வேறு. இதில் ந்யூக்ளியர் ஆன்காலஜிஸ்ட் பூஜா குமார்  என் கடவுளுக்கு 4 கைகள் என்கிறார். அதற்கு அவரை எப்படி சிலுவையில் அடிப்பார்கள் என்று கேட்கிறார் அதிகாரி. பூஜா , நாங்கள் மூழ்கடிப்போம் என்கிறார்கள். இவர்கள் எல்லாம்  அனைவரின் கடவுள் நம்பிக்கைகளிலும் விளையாடுகிறார்களா.

நான் கோபமாய் இருக்கும் தருணங்களில் யாரையாவது பற்றிச் சொல்லிக் கோபிப்பேன். என் மகன் சமாதானப் படுத்துவான். சில சமயம் அவனிடம் எனக்குப் பிடிக்காததையும் சொல்வேன். அப்போ சொல்வான். “ அம்மா ஒரே நேரத்தில் எல்லாரையும் பகைச்சுக்காதீங்க” என்று. அதையே நானும் இங்கே கமலிடம் சொல்ல எண்ணுகிறேன்.

தசாவதாரம் நீண்டு சலிப்பை உண்டாக்கியது. ஹேராமும் அப்படித்தான். இதில் வன்முறைகள் வெறுப்பை உண்டாக்குகிறது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்குபெறும் காட்சிகள்தான் ஆதியிலிருந்து அந்தம் வரை.  வன்முறை என்றால் வன்முறை. வெட்டுப் பட்ட கை, உடல் என்று தெறித்து விழுவது., கமலின் மூக்கில் இருந்து ரத்தம் வருவது, தௌபீக்கின் முகத்திலிருந்து ரத்தம் வடிவது, அப்பாஸியின் உடலில் இருந்து ரத்தம் பெருகுவது என ஒரே ரத்த மயம்.

தலிபான்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வு, எண்ணெய் வளத்துக்காக ஏகாதிபத்திய அரசின் ஆக்கிரமிப்பு, குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு, புதிதாக ஒரு மொழியை கற்பதற்கு வெறுப்பு ( ஹிந்தி எதிர்ப்பைப் போல ), கிணற்றுத் தவளைகளான வாழ்வு, மருத்துவம் மறுப்பு , ஆண்களை ஜிகாதிகளாக மாற்றுதல், ஆகியன சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் வேரோடிப் போயிருக்கும் அல் கொய்தா தீவிர வாதத்தை அழிக்க இந்தியாவில் இருந்து போகும் மிஷனில் இத்தனைபேரும் அசட்டுத்தனமான ஜோக்குகளோடு தமிழ் பேசுவதும், தீவிரமான விஷயங்கள் முன்னெடுத்துச்செல்லும் முக்கியமான சமயங்களில் நமக்குப் புரியாமல்  உருது, அரபி , பஷ்தூனில் பேசுவதும் கடுப்பேத்துறார் மை லார்ட். . பேசாமல் ஹாலிவுட் ரேஞ்சில் இருக்கும் இந்தப் படத்தை ஆங்கிலத்திலேயே எடுத்து இங்லீஷிலேயே பேசி இருக்கலாம். ஆஸ்கார் குழுவுக்காவது புரிந்திருக்கும். அதிலேயே எல்லா மொழியிலும் டப் செய்து எழுத்துகளை தோன்றச்செய்து வெளியிட்டிருக்கலாம்.

ஒரு ட்ரக்கின் கீழ் சென்று விழுந்து வெடிக்கச்செய்து மரணமெய்தும் ஜிகாதியை ஊஞ்சலில் வைத்து கமல் ஆட்டும் அந்தக் கணம் அற்புதமானது. பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்தது. ஒரு நிம்மதியான மூச்சு, நேர்த்தியான  அடுத்த மூச்சு என்பது எவ்வளவு அற்புதமானது. வாழ்வு என்பது எத்தனை மதிப்புடையது  என அனைவருக்கும் தோன்றச் செய்த தருணம் அது.

மூளைச் சலவை செய்யப்பட்ட மனிதவெடிகுண்டுகள் இப்படித்தான் மனச் சலவை செய்யப்பட்டிருப்பார்கள் என்பதையும், அவர்களுக்கும் இழையோடும் வாழ்விற்கான மெல்லிய ஆசையையும் உணர முடிந்தது. வாழ்வு என்பது எவ்வளவு மதிப்பு மிகுந்தது என்பதைச் சொன்ன காட்சி என்பதால் மனதை விட்டு அகலவில்லை.

கமல் ஒசாமாவை ஆதர்சமாகப் பார்ப்பதும், ஓமரின் மனைவியைப் பரிதாபமாகப் பார்ப்பதும், தௌபீக்கின் தூக்கில் இயலாமையுடன்  பார்ப்பதும் நடனக் கலைஞனாக நெளிவு வளைவுகளுடன் பேசுவதும், நடப்பதும், இந்திய அரசின் உளவுப் பிரிவு அதிகாரியாக கம்பீரமாக நடப்பதும்.. ரொம்ப பர்ஃபெக்ட். உங்களுக்கான ரசிகர்களை இன்னும் நீங்கள் இழக்கவில்லை பாஸ். மதரீதியாக, ஜாதி ரீதியாக எத்தனைதான் நீங்கள் தேவையற்றதைச் செய்தாலும்( படத்தின் பேரே உருது அரபி சொற்கள் போல வலமிருந்து இடமாக தோன்றுகிறது )  ஒரு கலைஞனாக   உங்களை ரசிக்கும் ஆதர்ஷிக்கும் மக்களைப் பெற்றிருக்கிறீர்கள்.  YOU ARE GIFTED ..!!!

சாம்பிளுக்கு ஒரு காட்சி. எஃப் பி ஐயின் அதிகாரி , இந்திய பிரதமர் கமலிடம் பேசியவுடன், “ நீங்க யார் சார் ..?” என்ற ரீதியில்  கேள்வி கேட்பார். அப்போது சொல்லத் தோன்றியது.. “ இவர்தாங்க உலகத்துல இருக்க எல்லா தமிழ் மகன்களுக்கும் ஆதர்ஷம். “ என்று. ஏனெனில் இண்டர்வெல்லுக்கு அப்புறம் எனக்குப் படம் அவ்வளவாகப் பிடிக்காமல் போக ரங்கமணியோ , ”இவரை விட்டா சான்ஸே இல்லை.. என்னாமா எடுத்துருக்கார். “ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

படத்தில் இரு பாடல்கள் . கதக் நடனப் பாட்டு ஒன்று. இன்னொரு பாடலில் “ எல்லாரும் ஒரு தாய் பிள்ளை, யார் இறந்தாலும் யாரோ ஒரு தாய் அழுவாள் “ என்ற வரிகள் கலங்க வைத்தது. வன்முறையை அறைவதைப் போலப் பதிவு செய்திருக்கும் அதே நேரம் நமக்கு நெருக்கமான மற்ற மதத்தைச் சேர்ந்த பலர் இந்தப் படத்தைப் பார்த்து எவ்வளவு அசௌகரியமாக உணரக்கூடும் என்றும் தோன்றியது. சில, பல இஸ்லாம் மக்களும் அந்த த்யேட்டரில் எங்களுடன் அமர்ந்து ( பெண்கள் கருப்பு பர்தா ) பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் எடுக்கப்பட்டிருக்கும் மொழி, காஸ்ட்யூம், மற்றும் பழக்கமான நடிகர் முகங்கள். ( நாசர், கமல் ).

ஓமர் மட்டும் ஏனோ ஒரு வில்லனாக இருந்தும் டின் டின்னில் வரும் ரஸ்டபாப்புலஸ் போலவே எனக்குத் தோற்றமளித்தார். சீரியஸான விஷயங்களை புதியவரான விஸாம் காஷ்மீரியிடம் அவர் டிஸ்கஸ் செய்வாரா.. கடைசியில் விமானம் ஏறி தப்பிக்கிறார். ஏதோ 11/9 போல கட்டிடத்தில் மோதி தானும் ஒரு ஜிகாதியாக உயிரை விடுவாரோ என நினைத்தேன். அடுத்த பார்ட்டுக்காக தப்பிப் போயிருக்கிறார் போலிருக்கிறது.

இசை பல இடங்களில் சூப்பர், சில இடங்களில் ஓவர். காதை கிழித்தது. வெளியே அமெரிக்க விமானங்கள் பறக்கும்போது குகைக்குள் ஸ்டேஷன் பிடிக்காத ரேடியோ போல கீச்சிடுகிறது. வால்யூமைக் குறையுங்கப்பா என்று கத்தத் தோன்றியது.

நடனம் ஆடுவதை தாலிபான்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே. பின் ஏன் கமல் நடனக் கலைஞராகிரார். டவுட் நம் # 4.

பரபரப்பான சூழலில் மிக மெதுவாக ஆஃபீசில் அமர்ந்து இன்ஃபர்மேஷன்ஸ் எடுக்க முடியுமா.. அந்த இடத்துக்கு வில்லன்கள் சீக்கிரம் வந்துவிட மாட்டார்களா.  டவுட் நம்# 5



பூஜா குமாரும் இவரும் வாழும் வாழ்வில் எந்த அண்டர்ஸ்டாண்டிங்கும் இல்லையே. லிவிங் டு கெதர் மாதிரி இருக்கும் வாழ்வில் என் புருஷன், என் மனைவி என்று அங்கங்கே பிட்டைப் போட்டிருப்பது எந்த ஒட்டுதலையும் உண்டாக்கவில்லை. கடைசியில் கணவன் பெரிய ஆள் என்று தெரிந்ததும் மதிக்கிறார்.  படுக்கையில் படுத்திருக்கும் ஒரு ஸ்டில்லும் சம்பந்தமில்லாமல் வருகிறது.

மேலும் வசனங்கள்  வள வள என்றும், திடீரென்று வன்முறைக்குள் இழுத்தும் திரிவதால் கவனம் சிதறி கதைக்கு உள்ளே இழுத்து வெளியே தள்ளி என்று சிதைக்கிறது.

பொதுவா கமல் படமென்றால் சில ஆணாதிக்க சிந்தனைகள் தவிர  எனக்கு என் கணவரோடு மிகப் பிடித்த படமாகத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்தப் படத்தை கமல் பிடிக்குதா, பிடிக்கலையா என்று கேட்டால் இன்னொரு தரம் முழுசா எடுத்த படத்தைக் காட்டுங்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.

கமலிடம் நீங்க நல்லவரா, கெட்டவரா என்ற கேள்வி கேட்கப்படும் போது ரெண்டும்கலந்த கலவைதான் நான் என்று சொல்வார். அதேதான் இந்தப் படத்துக்கும் பிடிக்குது ஆனா பிடிக்கலை. ரெண்டும் .. BOTH..

தேனம்மை டொப் டொப்பென்று  லாப்டாப்பில் தட்டி விமர்சனம் எழுதுவது ஈஸி. ஒரு படம் எடுத்துப் பாருங்க என்று கமல் இதைப் படித்தால் சொல்லலாம். பட் கமல் உங்க ரசிகர்கள் உலகமெங்கும் இருக்காங்க. ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் சினிமாவை டெக்னிக்கலாக கொண்டு சென்று வெற்றியடைந்திருக்கும் நீங்க அவங்கள கருத்தில் கொண்டு அடுத்த பார்ட்டை அமையுங்கள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 



16 கருத்துகள்:

  1. "நடனம் ஆடுவதை .....".. That is secondaary, Why an Indian agent should infiltrate the terrorist set up in the first place and why he is investigating a plot vs US? Is he an US agent?. I think India is not connected to that group, at least so far.

    பதிலளிநீக்கு
  2. ****தசாவதாரம் நீண்டு சலிப்பை உண்டாக்கியது. ஹேராமும் அப்படித்தான். இதில் வன்முறைகள் வெறுப்பை உண்டாக்குகிறது.***

    என்னங்க ஒரு படத்துக்கு விமர்சனம் எழுத ஆரம்பிச்சு மூன்றுபட்னக்களுக்கு சான்றிதழ் வழங்கிட்டீங்க!

    *** குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பங்குபெறும் காட்சிகள்தான் ஆதியிலிருந்து அந்தம் வரை. வன்முறை என்றால் வன்முறை. வெட்டுப் பட்ட கை, உடல் என்று தெறித்து விழுவது., கமலின் மூக்கில் இருந்து ரத்தம் வருவது, தௌபீக்கின் முகத்திலிருந்து ரத்தம் வடிவது, அப்பாஸியின் உடலில் இருந்து ரத்தம் பெருகுவது என ஒரே ரத்த மயம்.****

    வன்முறையை ருசித்து ரசிக்கத் தெரியாதவர்கள், இன்றைய கமல் ரசிகராக இருப்பது கடினம்ங்க! :(

    பதிலளிநீக்கு
  3. *** கடைசியில் விமானம் ஏறி தப்பிக்கிறார். ஏதோ 11/9 போல கட்டிடத்தில் மோதி தானும் ஒரு ஜிகாதியாக உயிரை விடுவாரோ என நினைத்தேன். அடுத்த பார்ட்டுக்காக தப்பிப் போயிருக்கிறார் போலிருக்கிறது. ***

    விழுந்து விழுந்து சிரிக்கிறேன். நீங்க என்ன சீரியஸா காமடி பண்ணுறீங்க? :)))

    பதிலளிநீக்கு
  4. ***கமலிடம் நீங்க நல்லவரா, கெட்டவரா என்ற கேள்வி கேட்கப்படும் போது ரெண்டும்கலந்த கலவைதான் நான் என்று சொல்வார். அதேதான் இந்தப் படத்துக்கும் பிடிக்குது ஆனா பிடிக்கலை. ரெண்டும் .. BOTH.****

    அவர் சொன்னதுக்கு அர்த்தம் 90% நல்லவன் 10% கெட்டவன் என்பதுதாயிருக்கலாம்.

    ஆனால் நீங்க சொன்னதையே "பிடிக்கலை ஆனா பிடிக்கிது"னு சொல்லியிருந்தால் உங்களுக்கு பிடிக்கிதுனு எடுத்துக்கலாம். இப்போ வேற மாரித்தான் எடுக்கவேண்டியிருக்கு :)))

    பதிலளிநீக்கு
  5. ***பூஜா குமாரும் இவரும் வாழும் வாழ்வில் எந்த அண்டர்ஸ்டாண்டிங்கும் இல்லையே. லிவிங் டு கெதர் மாதிரி இருக்கும் வாழ்வில் என் புருஷன், என் மனைவி என்று அங்கங்கே பிட்டைப் போட்டிருப்பது எந்த ஒட்டுதலையும் உண்டாக்கவில்லை. ***

    லிவிங் டொகெதெர் வாழ்க்கை பரவாயில்லைங்க. அதில் காதல், அன்பெல்லாம் அளவுக்கு அதிகமா இருப்பதும் உண்டு, பெரிய கமிட்மெண்ட் தான் இல்லாமல் இருக்கும்.

    ***கடைசியில் கணவன் பெரிய ஆள் என்று தெரிந்ததும் மதிக்கிறார்.****

    வழக்கம்போல பெண்களை இழிவுபடுத்து இருக்கார் கமல்னு நான் சொல்லலாமா? :)

    பதிலளிநீக்கு
  6. ***விஸ்வநாதன் கிருஷ்ணனை அழைத்துப் பாடுகிறான். விஸாம் அல்லாவை நினைத்துத் தொழுகிறான். ஆனால் யார் கடவுள் என்ற வழக்கமான கேள்வி வேறு.****

    ரெண்டுமே வேஷம்தான், நடிப்புத்தான். அதே விஸ்வனாகிய விஸாம், "எந்தக் கடவுள்?" னு கேட்பது ஹிந்துக்கள், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் நாத்திகனுக்கும் எரிச்சலை கிளப்பும்! இவனை எட்டுலையும் சேர்க்க முடியாது எழவுலையும் சேர்க்கமுடியாதுனு!

    ஆக உங்க மகன் உங்களிடம் சொன்னதை, நீங்க கமலுக்கு அறிவுரையா சொன்னது சரிதான்!

    பதிலளிநீக்கு
  7. ***இண்டர்வெல்லுக்கு அப்புறம் எனக்குப் படம் அவ்வளவாகப் பிடிக்காமல் போக ரங்கமணியோ , ”இவரை விட்டா சான்ஸே இல்லை.. என்னாமா எடுத்துருக்கார். “ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.***

    :-)))))

    பதிலளிநீக்கு
  8. படத்தின் ஒவ்வொரு Frameஐயும் அலசி இருக்கிறது எழுத்துக்கள், நகைச்சுவை இழையோடு...அழகு...

    பதிலளிநீக்கு
  9. படத்தின் ஒவ்வொரு Frameஐயும் அலசி இருக்கிறது எழுத்துக்கள், நகைச்சுவை இழையோடு...அழகு...

    பதிலளிநீக்கு
  10. I didn't find to do this tok tok ,but you have done on behalf off all the viewers of same taste
    Thank you

    பதிலளிநீக்கு
  11. விஸ்வருபம் படம் ,ஆங்கிலப்பட தயாரிப்பாளர்களை ஆச்சர்யப்பட வைக்கும் படமாக அமைந்துள்ளது.உலகத்தில் மனிதர்களை மனிதன் அழிக்கும் அவல நிலையில் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் .என்பதை தெளிவாகக் காட்டுகிறார்.இது உலகம் முழுவதும் நடக்கும் தீவிரவாத செயல்கள்,இதை அதிகம் செய்பவர்கள் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை,எல்லோரும் நல்லவர்களே ஒருசிலர் நாட்டை அழிக்கும் படுமோசமான செயல்களில் இருப்பது தவறு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை கமல் விஸ்வருபம் படத்தின் வாயிலாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே படத்தின் கருவாகும்.சாதாரண மக்களுக்கு கொஞ்சம் புரிவது சிரமம்.வசனம் கோர்வையாக இல்லாதது ஒரு குறையே .அனைத்து தர மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு படம் எடுத்து இருக்கலாம். இப்படத்தை இரண்டு முறை பார்த்தால்தான் புரிந்து கொள்ளமுடியும் . எப்படியோ பல சிரமங்களுக்கு மத்தியில் கமல் வெற்றிப் பெற்றுள்ளார் .வாழ்க கமல்.வளர்க தமிழ் திரைப்படம்.

    பதிலளிநீக்கு
  12. எப்படி விமரசிக்கிலாம்னு கைல ஒரு notepad எடுத்துட்டு
    போயிருப்பிங்க போல ..
    படத்த நல்லா இன்னொரு முறை
    எந்த சிந்தனையும் இல்லாமல் பாருங்க
    நல்லா இருக்கும் ..
    நீங்க டவுட் கேட்ருக்கதுல
    இருந்தே தெரிகிறது
    எப்படி பார்த்திங்கன்னு ..

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஜீவன் சுப்பு

    நன்றி வருண், மிக சர்காஸ்டிக் கமெண்ட்ஸ் படித்து சிரித்தேன்.

    நன்றி இளங்கோ

    நன்றி கோமா மேடம்

    நன்றி கதிர்வேலு சார். இன்னொரு கோணத்தில் மிக அழகான அலசல்.

    நிச்சயம் உதயா பரமா.. இன்னொரு முறையும் முழுசா பார்க்கணும்.. அப்ப சொல்லலாம் எப்பிடி இருந்துச்சுன்னு.

    பதிலளிநீக்கு
  14. ஓமர் மட்டும் ஏனோ ஒரு வில்லனாக இருந்தும் டின் டின்னில் வரும் ரஸ்டபாப்புலஸ் போலவே எனக்குத் தோற்றமளித்தார்.//

    ஹா ஹா ஹா ஹா எனக்கு சந்தானத்துக்கு ஒட்டு தாடி வச்சதுபோல செம காமெடியாக இருந்தார்...!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...