புதன், 27 பிப்ரவரி, 2013

தகுதியுள்ளது..

எங்கோ ஒரு சிறுமி
மறைமுக பாலியல்
துன்பியலில் பயந்து
நடுங்கிக் கிடக்கிறாள்.

நெடுஞ்சாலை ஓர
குத்துப் புதருக்குள்
காதலனை சந்திக்க
சென்றவளின் பிணம்.

மிதவாதியா அல்லவா
பிரிக்கத் தெரியாமல்
சூலுற்றவளுக்கு
சிறையில் பிரசவம்.காதுகள் மடக்கியும்
கண்மூடி மூக்கைப் பிடித்தும்
கலங்கும் நெஞ்சடக்கியும்
முன்னேறுகிறீர்கள்..

உங்கள் பயணம்
உங்களுக்கு..
உங்கள் சிகரம்
உங்களுக்கு.

எதையும் யாரையும்
கண்டிக்கவோ
கண்டனம் செய்யவோ
துணிவதில்லை நீங்கள்.

உங்கள் குழந்தைகளை
அணைத்தபடி மேலேறுகிறீர்கள்.
பத்திரமாய் சேர்ந்தது
குறித்து மகிழ்கிறீர்கள்.

தகுதியுள்ளது
தப்பிப் பிழைக்கும்
தேற்றிக் கொள்கிறீர்கள்
தேற்ற முடிந்த அளவு.

ஏறி வந்த திசையின்
எதிர்த்திசை நோக்கியபடி..
இன்னும் ஏறவேண்டிய
சிகரங்களைப் பார்க்கிறீர்கள்..

தன்னலவாதி அல்ல
தன்னம்பிக்கைவாதி
ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள்
உளுத்த ஊன்றுகோல்களைத் தட்டியபடி.

டிஸ்கி:- இந்தக் கவிதை அக்டோபர் 23, 2011 திண்ணையில் வெளியானது.


6 கருத்துகள் :

ezhil சொன்னது…

இது தான் இன்றைய மக்கள் இயல்பு.... என் முக நூலில் பகிர்ந்துள்ளேன். நன்றி

பூங்குழலி சொன்னது…

சமூகத்தின் ,நம்முடைய பாராமுகத்தை அழுந்த பதிந்திருக்கிறீர்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி எழில்

நன்றி பூங்குழலி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

மனோ சொன்னது…

தாஙகும் நினைவுகள் நெஞ்சில் தங்கடும்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மனோ.

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...