எனது நூல்கள்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

சிப்பியில் மழை மேகங்கள்.

ஊரெல்லாம்
வழிந்தோடும் தண்ணீருக்கு
எங்கள் பெற்றோரின் கன்னங்களே
நிரந்தரக் குடியிருப்பு.

நரகாசுரன் கூட அறத்திற்குப்
பயந்து அடிபணிந்துவிட்டான்.
இந்தக் கலியுக நரகாசுரர்களை
ஒழிக்க ஆரம்பித்தால் வருடம்
முழுவதும் தீபாவளி
கொண்டாட வேண்டிவரும்.


திடீர் மழைமேகங்கள் போல
மனதில் நம்பிக்கைத் துளிர்கள்,
திசைமாறும் மேகம் போலத்
தடம்மாறும் சந்தோஷங்கள்
தண்ணீருக்குப் பஞ்சமில்லை- எங்கள்
கண்ணீருக்கும் வரை .!.

பணமயக்கம்
தீரும் வரைக்கும்
எங்கள் இதழ்களில் மலர்வது
இரத்தத்தின்
உப்புக் கரிப்பேயன்றி
அழகின் சிரிப்பல்ல.

டிஸ்கி:- இது ஜனவரி 1984 சிப்பியில் வெளியானது.

4 கருத்துகள் :

semmalai akash சொன்னது…

மிக மிக அருமை, இதழில் வெளிவந்தது இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. வாழ்த்துகள். தொடரட்டும் உங்களது பயணங்கள்.

சமீரா சொன்னது…

மிக அருமையான ஒரு கவிதை...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி செம்மலை ஆகாஷ்

நன்றி சமீரா

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...