புதன், 20 பிப்ரவரி, 2013

ஓய்வும் பயணமும்.

நடைப்பாதைப் பயணத்தில்
வெள்ளையடிக்கப்பட்ட மதகடியில்
ஓய்ந்தமர்ந்தேன்.

கரண்டுக் கம்பங்களில் காக்கையும்
மதகடி நீரில் கொக்கும்
வயல் வரப்புக்களில் நாரையும்

நெத்திலிகள் நெளிந்தோட
குட்டிச் சோலையாய்
விளைந்து கிடந்தது வாய்க்கால்.


தேன்சிட்டும் மைனாவும்
ரெட்டை வால் குருவியும்
குயிலோடு போட்டியிட்டு

தட்டாரப்பூச்சிகளும்
வண்ணாத்திப் பூச்சிகளுமாய்
நிரம்பிக்கிடந்தது மாமரம்.

மஞ்சள் வெயில் குடித்து
பச்சை இலையாய்த்
துளிர்த்துக் கிடந்தது நிலம்.

நெடுஞ்சாலை அரக்கனாக
ஒற்றை லாரி என்னைப்
புகையடித்துக் கடந்து செல்ல

அள்ளியணைத்த அனைத்தையும்
அனாதையாய்ப் போட்டுவிட்டு
பயணத்தைத் தொடங்கினேன்.

சரளைக் கற்களும்
கருவை முட்களும்
தொடர்ந்து பயணப்பட.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 23, அக்டோபர் 2011 திண்ணையில் வெளிவந்தது.


5 கருத்துகள் :

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை அருமை....தொடருங்கள்.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

iyarkai anu சொன்னது…

ஓர் சாமான்யனின் பார்வையில் தெரியும் அன்றாட காட்சியும் ஒரு நாடோடி இன பார்வையில் படும் அதே காட்சியும் {பார்வையும்} வேறு வேறாய் இருப்பது போல் கவிழர்களின் பார்வையில் படும் பொது கொஞ்சம் இனிமையாகவும் வார்த்தை சாடல்கலோடும் வெளிபடுகிறதோ....?

அமைதிச்சாரல் சொன்னது…

அரக்கர்களில்லாத வனத்தில் குடியிருக்கத்தான் ஆசை. ஆனால் முடியலையே. அவர்களை உருவாக்கியவர்களே நாமல்லவா. அருமையான கவிதை தேனக்கா.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மலர்

நன்றி இயற்கை அனு

நன்றி சாந்தி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...