எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

A GOOD DAY TO DIE HARD. எ குட் டே டு டை ஹார்ட். (REVIEW)

A GOOD DAY TO DIE HARD. எ குட் டே டு டை ஹார்ட்.

We did everything for kids..  இதுதான் எனக்கு இந்தப் படத்தில் மிகப் பிடித்த வசனம்.  ஒரு ஆக்‌ஷன் படத்தில் கொஞ்சம் செண்டிமெண்ட்ஸ்.. அப்பா மகன் பாசம். இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்கள் உறவுகளின் உன்னதங்களைப் பேசுகின்றன. JOHN MOORE இயக்கிய படம்.


ஜான் மெக்லைன் ( BRUCE WILLIS)    அவர் மகனாக   ஜாக் மெக்லைன் ( JAI  COURTNEY) இவர்கள் இருவருக்குமிடையேயான உறவு, காணாமல் போன மகனைப் பல வருடங்களுக்குப் பிறகு ரஷ்யக் கைதியாகப் பார்க்கும் ஜான் ஒரு தருணத்தில் அவர் ஒரு சி ஐ ஏ ஏஜெண்ட் என அறிகிறார்.

ரஷ்யாவில் உள்ள ஒரு ஊழல் அரசியல்வாதி ஷாகரின்.( CHAGARIN). அவர் யூரி கொமரோவிடம் (YURI KOMAROV) ஒரு ஃபைலைத் தரச் சொல்லி மிரட்டுகிறார். மறுநாள் நீதி மன்றத்தில் ஏற்படும் களேபரங்களில் அங்கே இன்னொரு வழக்கில் கைதாயிருக்கும் ஜாக்கும் யூரியும் தப்பிக்கிறார்கள். இது தவறு என்று கூறுகிறார் ஜான்.

தன் மகனை தான் சரியாக வளர்க்கவில்லையோ என்ற வருத்தத்தில் இருக்கும் ஜான் தன் மகன் ஒரு சி ஐ ஏ  ஏஜெண்ட் என்று அறியும் தருணத்தில்  கதை வேகமெடுக்கிறது. அவர் தன் மகனுக்கு உதவும் நேரத்தில் புல்லட்டுகள் சீறிப் பாய்கின்றன. வண்டிகளும் ட்ரக்குகளும் ட்ராக்கை விட்டு அநாயாசமாகப் பறக்கின்றன. கார்க் கண்ணாடிகள் நொறுங்கிக் கொட்டுகின்றன. தொடையில் அடிபட்டது தவிர ஏதும் காயமில்லாமல் தப்பிக்கிறார்கள்.


மூவரும் சேர்ந்து யூரி சொல்லும் ஒரு ஹோட்டலுக்குச் சென்று ரகசிய ஃபைலுக்கான ஒரு சாவியை எடுக்கிறார்கள். அப்போது அவரது மகள் ஐரினா ( YULIYA  SNIGIR)  தன் தந்தை சொன்ன அந்த ஹோட்டலுக்கு சீக்கிரம் வந்து விடுகிறார். யூரி சாவியை எடுக்கும் நேரம் அங்கே ஆலிக் (ALIK)  தன் ஆட்களுடன் வந்து இவர்களைப் பிணைக்கிறார்.

அப்போதுதான் தெரிகிறது ஐரினா பல மில்லியன் டாலர்களுக்காக தன் தந்தை வரும் இடத்தைக் காட்டிக் கொடுத்தது. ஐரினாவும், ஆலிக்கும், யூரி கோமரோவைக் கூட்டிக் கொண்டு செர்னோபில்லுக்கு-- உக்ரைன் - செல்கிறார்கள். அங்கே பல்வேறு தடைகளையும் உடைத்தெறிந்து ஜாக்கும், ஜானும் செல்கிறார்கள்.

அப்போது ஆயுதம் தயாரிக்க யுரேனியக் கழிவு  இருக்கும் இடத்தைச் சென்றடைந்து அந்த யுரேனியத்தைக் கதிர்வீச்சு அபாயமில்லாமல் கடத்தவே இந்த ஃபைல் நாடகம் ஆடப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. யுரேனியம் கடத்தப்பட்டவுடன் ஆலிக்கைச் சுடும் ஐரினா தன் தந்தையைப் பார்த்துப் புன்னகைக்கிறார். அப்போதுதான் தெரிகிறது அவர் தன் தந்தைக்காக இதெல்லாம் செய்திருப்பது.

ஷாகரின் யூரி ஏற்பாடு செய்த மசாஜ் செய்பவன் ஒருவனால் கொல்லப்பட இருவரும் இங்கே தப்பிக்கும் நேரம் ஜாக்கும் ஜானும்  யூரி ஐரினாவின் திட்டத்தை அறிகிறார்கள். ஹெலிகாப்டரில் தப்பித்துத் தந்தையையும் அழைத்துச் செல்ல ஐரினா முனையும்போது ஜாக் அதன் பின் புறத்தில் ஏறி செயினுடன் கூடிய ஒரு வண்டியை இயக்குகிறார். அதன் பின் பக்க கதவு திறந்து கொள்ள ஹெலிகாப்டர் அந்தரத்தில் பல்டி அடித்து  உச்சி நோக்கிப் பறக்கிறது.

ஜாக் யூரியை ஹெலிகாப்டரை  எட்ட விடாமல் பிடிக்கும்போது யூரி உன் தந்தையை என் மகள் கொன்றிருப்பாள் என்கிறார். அதே நேரம் அந்த வண்டி கீழே விழ கோபமடைந்த ஜாக் அப்போ நீங்களும் சாக வேண்டியதுதான் என   மாடியின் உச்சியிலிருந்து தள்ளி விடுகிறான். அவர் விழும்போது ஹெலிகாப்டர்  ப்ளேடில் பட்டு துண்டு துண்டாக மாய்கிறார்.

தன் தந்தை இறந்ததற்காகப் பழி வாங்கும் நோக்கில் ஜாக், ஜான் இருக்கும் கட்டிடத்தின் மேல் மிக வேகமாக வந்து ஐரினா மோத அதற்குள் இருவரும் கட்டிடத்தின் கண்ணாடியை உடைத்து அங்கே இருக்கும் தண்ணீரில் குதித்துத் தப்பிக்கிறார்கள்.

நம் தமிழ்ப் படங்களில் ஹிந்தி பேசுபவர்களை வில்லன்களாக சித்தரிப்பார்கள். மலையாளத்தில் தமிழ் பேசும் வில்லன், அதே போல் இந்தப் படத்தில் ரஷ்ய வில்லன்கள். 

முந்தைய படங்களில் ஒரு கட்டிடம், ஏர்ப்போர்ட், நகரம், நாடு ( கம்யூட்டர் ஹாக்கிங் , வெப் காமிரா கூட இல்லாமல் இன்னொருவர் இருக்கும் இடத்தைப் பார்ப்பது திகிலாக இருக்கும் ) ஆகியவற்றைக் காக்க வரும் ப்ரூஸ் வில்லீஸ் இதிலும் நாடுகளைக் காப்பாற்ற வருகிறார்.

ஜானுக்கும் ஒரு பெண் உண்டு. அமைதியானவள். யூரியின் பெண் ஐரினா துள்ளும் இளமையோடு உள்ள சாகச நாயகி. ரஷ்யப் பெண்ணோ தெரியவில்லை. நல்ல உயரமும், உடற்கட்டுடனும் மிக அழகான பெண் யூலியா  நிகிர். முதன் முதலில் தந்தையைப் பார்த்ததும் கட்டியணைத்துக் கொள்வார் ஐரினா.

அவர்கள் இருவரும் பாசத்தில் நெகிழும்போது ஜான் ஜாக்கிடம் கேட்பார்.. “ WANNA HAVE HUG.." மகன் மறுப்பாய் தலையசைத்ததும் சொல்வார்.  " WE  ARE NOT A HUGGING FAMILY.. "

யூரியிடம் தன் மகனைச் சரியாக சின்ன வயதில் வளர்க்கவில்லை என்ற குறையைப் பகிர்ந்து கொள்வார். அதன் பின் இருவரின் பிள்ளைகளுக்காகவும் இருவரும் சம்பாதித்துச் சேர்த்தது பற்றி “  WE DID EVERYTHING FOR KIDS "  என்று சொல்வார். ஹ்ம்ம் எவ்வளவு சம்பாதித்து என்ன .. எல்லாம் குழந்தைகள் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும் அதில்.

யூரியின் மகள் அவரைக் காசுக்காகக் காட்டிக் கொடுத்து விட்டதும் ஜாக் தந்தையிடம் ஏன் என்று கேப்பார். அப்போதும் சின்னத் தலையசைப்பாய்  "KIDS"    என்பார். குழந்தைகள்  என்றால் அப்படித்தான் என்பதைப் போல.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு ரஷ்ய டாக்சி ட்ரைவர் FRANK SINATRA   வின் ஒரு பாடலைப் பாடுவார்.  BLUE SKIES.. இது அமெரிக்கர்களின் ஃப்ரான்க் சினோட்ரா மீதான பாசத்தையும் , ரஷ்யர்களுக்கும் அவர் மீதான  நேசத்தையும் காண்பித்தது..  இசைக்கு நாடு ஏது..

http://www.youtube.com/watch?v=PUz6f7xiVmM

அடிக்கடி அவர் சொல்லும் வசனம். “ I AM ON VOCATION ".  ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தது போல் இருந்தது. ஒரு சின்ன சர்காஸ்டிக் ஸ்மைல் எப்போதும் தவழும் அவர் முகத்தில். சின்னக் குறும்பான புன்னகை. எல்லா இடத்திலும் கொஞ்சம் இயல்பாய் அழகாய் இருக்கும்.  ரொம்ப ஹாண்ட்சமான ஹீரோ போல எல்லாம் மெனக்கெட்டு மேக்கப் போட்டுக் கொள்ளாமல் ரொம்ப யதார்த்தமாய்  இந்த மாதிரிப் படங்களில் ஏதோ ஒரு கிடைத்த பனியனைப்போட்டுக் கொண்டு இருப்பார்.  இருபதுகளில் இருக்கும் மகன், மகளின் தந்தையாக  லேசாக முளைத்த வெள்ளைத் தாடியுடன் கூட சில சீன்ஸ் இருக்கும். நடிப்புத்தான் முக்கியம். மத்ததெல்லாம் அப்புறம் என்பது போல.


தந்தை மகள் பாசம் பெரிதா, தந்தை மகன் பாசம் பெரிதா என்பது போல சில சின்ன சின்ன சுவாரசியமான ட்விஸ்ட்டுகளும் உண்டு இந்தப்படத்தில்.  தண்ணீரில் இருந்து எழும்பி தந்தையைக் காணாமல் ஜான், ஜான் என்று ஜாக் கூப்பிட்டுப் பார்த்து விட்டுப் பின் "DAD...."    என்று கத்துவார் ஜாக்.  நம்ம கமலஹாசன் பாணியில் தண்ணிக்கு இந்தப் பக்கமிருக்கும் சுவற்றைப் பிடித்துக் கொண்டு “ YEAH.. IM HERE .."    என்று சொல்லும் ஜான் தன் மகனிடம் கேப்பார். "  DID  YOU CALL ME DAD.. " ' " MAY BE  I HAVE HEARD  LIKE THAT "   என்று.

மொத்தத்தில் என்ன புரிஞ்சுதுன்னா, யுரேனியம் அணு உலையில் இருந்தாலும் சரி அணுக் கழிவா இருந்தாலும் சரி எங்க இருந்தாலும் தீமைதான்.. அப்புறம்  முக்கியமான விஷயம் என்னன்னா ஹாலிவுட் காரங்களும் பாசத்துக்கு ஏங்குறாங்க. !!!

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 



8 கருத்துகள்:

  1. அட! ‘டின்டின்’ படத்துக்கப்புறம் ரொம்ப நாள் கழிச்சு ‘சும்மா’ல பட விமர்சனம். சும்மா எழுதாம ரசிச்சுப் பார்த்த விஷயங்களை அர்த்தத்தோட, சுவாரஸ்யத்தோட எழுதி மனசை ஜெயிச்சுட்டீங்க தேனக்கா‘!

    பதிலளிநீக்கு
  2. விமர்சனம் நல்லா இருக்கிறது.....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ். இன்னும் லூப்பர் , விஸ்வரூபம் என்ற படங்களும் இருக்கு படிக்கலையா நீங்க..

    நன்றி மலர்

    நன்றி கோவை ஆவி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. வருண் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"A GOOD DAY TO DIE HARD. எ குட் டே டு டை ஹார்ட். (R...":

    ***We did everything for kids.. இதுதான் எனக்கு இந்தப் படத்தில் மிகப் பிடித்த வசனம். ஒரு ஆக்‌ஷன் படத்தில் கொஞ்சம் செண்டிமெண்ட்ஸ்.. அப்பா மகன் பாசம். இப்போதெல்லாம் ஹாலிவுட் படங்கள் உறவுகளின் உன்னதங்களைப் பேசுகின்றன. JOHN MOORE இயக்கிய படம். ***

    நம்ம ஊர் படங்களில்தான் "நிரூபமா" மாதிரி "குடும்பப் பெண்களும்" "விஷ்வா" மாதிரி "பொறுப்பான கணவர்களும்" உள்ள "கணவன் - மனைவி" சமாச்சாரங்கள் அதிகமாயிடுச்சே?

    When we look at "globally" , it is all getting balanced as Kamal's "liberal" contribution is compensated by "John moore's" family sentimentality!

    இதைத்தான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தால் கணக்கு சரியா வரும்ணு சொல்றா போல! :)))

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...